Connect with us

Entertainment

வித்தியாசமான பிளாக் ஹோல் ஃபேன்டஸி படம்!

Published

on

விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கும் ரெட் அண்ட் பாலோ திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் திரு.வணக்கம் தமிழா சாதிக் அவர்கள் நமது E-BEHIND  இதழுக்காக கொடுத்த பிரத்தியேகப் பேட்டி!

 

  • ரெட் அண்ட் பாலோ படத்தை பற்றி?

இது ஒரு டார்க் ,பேண்டசி காமெடி திரில்லர் மூவி. பிக் பாஸ் பிரபலங்கள் 5 பேர் இதில் நடித்துள்ளனர். ஜாலியான படமாக எடுத்துள்ளேன். நான் ஒரு வெங்கட் பிரபு ரசிகன் அவருடைய படம் எப்படி இருக்குமோ அதே போல் எடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் இந்த ரெட் அண்ட் பாலோ.

  • பிக் பாஸ் பிரபலங்கள் அதிகம் பேர் படத்தில் இருக்கிறார்கள் அதற்கானகாரணம் ?

இது திட்டம் போட்டு இதை நாங்கள் செய்யவில்லை.ஒரு நாயகி படத்துக்கு தேவைப்பட்டது, அதனால் யாஷிகா ஆனந்தை தேர்தெடுத்தோம். கதை முக்கியத்துவத்துக்கு அனிதா சம்பத்தை தேர்ந்தெடுத்தோம். காமெடிக்கு ஜி.பி முத்து தேவைப்பட்டார், அதேபோல பயில்வான் ரங்கநாதன் காமெடிக்கு தேவைபட்டது. பெண் காமெடி செய்ய ஜாங்கிரி மதுமிதாவை பயன்படுத்தி உள்ளோம், இது எல்லாம் எதார்த்தமாக நடந்த ஒன்று. ஆனால் இதுவே எங்கள் படத்துக்கு ஒரு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது. பலரும் இது என்ன படமா இல்ல பிக் பாஸ் வீடா என கேட்கும் அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளது மகிழ்ச்சியே.

  • கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு இந்த படத்துக்கு எப்படி பட்டது?

கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு மிக பெரியது கருணாகரன் முக பாவனையை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். சிறந்த நடிகர் அவருடன் பணியாற்றுவது மிக எளிது. அதேபோல பாலா சரவணன் காமெடி டைமிங் வேற லெவல் இருக்கும் காட்சி படமாக்கும் பொழுது ஓவ்வொரு சீன்லயும் சிரிச்சிட்டே இருப்போம் , இனிமையான மனிதர்.

  • இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் பலரை படத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள், படத் தேவைக்கா? பட ப்ரமோஷனுக்கா?

இரண்டுக்குமே தான்! இன்னைக்கு இருக்கும் காலகட்டம் டிரேடிங்கை நோக்கி பயணிக்கிறது. டிரேடிங்கை பயன்படுத்தினால் நாமும் ட்ரெண்டிங்கில் இருக்கலாம். எனது படத்தில் நடுவர்கள் அனைவரும் மக்களிடம் ஈசியாக அறியக் கூடியவர்கள் ஆகையால் பயன் படுத்தியுள்ளோம். இருந்தாலும் படத்துக்கு தேவையான ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்கள் தான் நடித்துள்ளார்களே தவிர, தேவையில்லமல் யாரையும் நடிக்க வைக்கவில்லை.

  • ராபர்ட் மாஸ்டர் இந்த படத்தின் வில்லன் என்று கேள்வி பட்டோம் உண்மையா ?

ஆமா உண்மை தான் சிறந்த வில்லனாக இதில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் ராபர்ட் மாஸ்டர் ஏன் என்றால் நடித்தது மட்டும் இன்று இரண்டு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றினார். மிகப்பெரிய நடன இயக்குனர் என்பது நாம் அறிந்ததே, ஆனால் புதுமுக இயக்குனருடன் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பழகக் கூடிய நடிகர். நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பரிசாக எண்ணுகிறேன்.

  • பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து புது காம்பினேஷன் எப்படி உருவானது ?

இவருடைய காம்பினேஷன் சிறப்பாக இருக்கும் என ஐடியாவை தந்தது இந்த படத்தின் மற்றோரு தயாரிப்பாளர் மகேஷ் அவர்கள். ஒரு முனிவர் கதாபாத்திரம் தேவைப்பட்டது அப்போது இதனை விவாதிக்கும் பொழுது மகேஷ் அவர்கள் தான் பயில்வான் ரங்கநாதன் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என ஐடியா தந்தார். பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து வரும் காட்சி சிறப்பாக வந்துள்ளது புதுசாக இருக்கும்.

 

  • இசையமைப்பாளராக இருக்கும் பலர் கதாநாயகனாக வலம் வரும் வேலையில் நீங்கள் இயக்குனராக வேறு பாதையில் பயணிக்க என்ன காரணம்?

பலரும் கதாநாயகனாக களமிறங்கிவிட்டனர் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொன்று பிடிக்கும் அதை வெளிப்படுத்துகின்றனர். எனக்கு இசை மற்றும் படம் இயக்குவது ரொம்பப் பிடிக்கும், அதனால் இரண்டையும் செய்கின்றேன். இசையில் அனிருத் யுவன் இடத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் இயக்கும் படமும் நல்ல வரவேற்பை பெற வேண்டும். நடிகராக வர வாய்ப்பு வந்தால் அதையும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  • படத்திற்க்காக உழைத்தவர்களைப் பற்றி?

இந்த படத்தில் அனைவருமே கடினமாக உழைத்தார்கள். நடிகர்கள் முதல் டெக்நிஷியன்ஸ் என பலரின் உழைப்பால் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக என்னுடைய மனைவி தனது சிறந்த உழைப்பைத் தந்துள்ளார். பட ஷூட்டிங்கில் சிறிது நேரம் கூட உட்காராமல் வேலை பார்த்தவர். யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னுடைய வேலையை முக்கால் வாசி செய்து முடித்துவிடுவார். அதே போல இந்தப் படத்தின் ரைட்டர்
பாபு தமிழ் அவர்கள், கதையில் சிறிது மாற்றம் வேண்டும் என கேட்டாலும் அப்போதே எழுதி கொடுத்து விடுவார், அவருடைய பங்களிப்பு இந்தப் படத்திற்க்கு மிக முக்கியமானது. கேமரா மேன் யுவன் செல்வாவின் உழைப்பு சொல்ல முடியாத அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர், படம் வெளியானவுடன் உங்களுக்குத் தெரியவரும்.

  • படத்தில் நடித்த பிரபலங்கள் பற்றி ?

ஏற்கனவே கூறியதைப் போல கருணாகரன், பாலா சரவணன், அனைவரும் அறிந்த முகம் யாஷிகா ஆனந்த, பிக் பாஸ் பிரபலம் அழகான எளிமையாக பழகக்கூடிய அனிதா சம்பத் மற்றோரு பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து அவர்கள், சிறந்த நடிகராக வருவார் செய்யும் செயலில் முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவர். ராபர்ட் மாஸ்டர் படத்தின் முக்கிய பங்காற்றியவர். அஜய் வாண்டையார், அபூர்வ ராய், ஜாங்கிரி மதுமிதா, பிஜிலி ரமேஷ் என அனைவரும் இதில் நடித்திருப்பது படத்துக்கும் மட்டுமல்ல எனக்கும் சிறப்பான ஒன்று தான்.

Entertainment

தேசிய விருது பெற்றவுடனே கேப்டன் நினைவிடத்துக்கே சென்ற எம்.எஸ். பாஸ்கர்

Published

on

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.

எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending