Connect with us

செய்திகள்

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகம்!

Published

on

டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சி துவக்கம்.

 

டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சி “லெட்ஸ் டாக் இன் கோவை”  (பேசலாம் கோவையில்…) ஒன்றை நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி இன்று (22.1.26) மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது  முழுமையான, சமூகப் பொறுப்புணர்வுமிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் டிஜே அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அத்துடன் கோவை மாநகரின் நலனுக்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு கல்விச் சூழலை வழங்க இது முயல்கிறது. இந்த நிகழ்வில் எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; ஜி.கே.டி. சேரிட்டி டிரஸ்டின் அறங்காவலர் லலிதா தேவி சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி டீன் வைத்தியநாதன் ராமசுவாமி; கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மைக்கல், யங் இந்தியன்ஸ் கோவை கிளையின் தலைவர் நீல் கிக்கானி; சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவு இன்று நடைபெற்றது. இதில் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் சுரேஷ் ஏரியாட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  இதன் பின்னர் டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. இத்துடன் சுரேஷ் அவர்களின் சிறந்த திரைப்படைப்புகள் சில காட்சிப்படுத்தப்பட்டது. டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய தொழில் கூட்டமைப்பு  சி.ஐ.ஐ.-யின் அங்கமான யங் இந்தியன்ஸ் – கோவை கிளை அமைப்புடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எல்.எம்.டபிள்யு. லிமிடெட் ஆதரவளித்தது. நிகழ்வின் போது, எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு மற்றும் சுரேஷ் ஏரியாட் இணைந்து  சி.ஐ.ஐ.  புதிய லோகோ-வை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

அவரை தொடர்ந்து ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ எனும் தலைப்பில் சுரேஷ் ஏரியாட் பேசினார்.  சுரேஷ் ஏரியாட், 1973-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இந்திய அனிமேஷன் துறையின் போக்கையே மாற்றியமைத்த ஒரு முன்னோடியாக அறியப்படுகிறார். அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் முன்னாள் மாணவரான இவர், அனிமேஷன் என்பது வெறும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு வலிமையான கதைசொல்லும் ஊடகம் என்பதை உலகிற்கு நிரூபித்தவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் இவரின் அனிமேஷன் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. இவரின் தனித்துவம் கொண்ட திறமையால் 100க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். 2015-இல் இவரது ‘ஃபேட்லைன்’  திரைப்படம், அனிமேஷன் உலகின் உயரிய விருதான ‘அன்னெசி கிறிஸ்டல்’ விருதை இந்தியாவிற்கு முதன்முதலில் பெற்றுத் தந்தது. மேலும் 2016ல் வெளிவந்த இவரது ‘ஃபிஷர் வுமன் அண்ட் டுக் டுக்’ , 2018ல் வெளிவந்த ‘டோக்ரி’ மற்றும் 2022ல் வெளிவந்த ‘கண்டிட்டுண்டு’  ஆகிய படைப்புகளுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது சமீபத்திய படைப்பான ‘தேசி ஊன்’, 2025ம் ஆண்டின் அன்னெசி விருதை வென்றுள்ளது.

“லெட்ஸ் டாக் இன் கோவை” யின் கீழ் ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவில் பேசிய சுரேஷ்,  கேரளாவின் திருப்பூணித்துறையில் தொடங்கிய தனது ஆரம்பகால வாழ்க்கை, கல்விப்பயணம் மற்றும் விளம்பரத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் முதல் ‘ஸ்டுடியோ ஈக்சாரஸ்’ எனும் நிறுவனத்தை உருவாக்கியது வரையிலான தனது படைப்புப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.அத்துடன், விருது பெற்ற தனது திரைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் வாயிலாக, சமூக-கலாசார யதார்த்தங்களில் வேரூன்றிய உள்ளூர் கதைகள் எவ்வாறு உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

இந்தியாவின் முதல் மனித சக்தி நீர்மூழ்கிக் கப்பல்: குமரகுரு மாணவர்கள் சாதனை

Published

on

கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பாக இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் அக்ரானி (INS Agrani) செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் (6th Element Engineering) நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்தப் படகை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர் குழுக்களை அன்புடன் வரவேற்ற இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அக்ரானி (INS Agrani) கப்பலின் செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழுக்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டம் முதல் இத்தகைய புதுமை முயற்சிகளுடன் தனக்குள்ள தொடர்பை நினைவுகூர்ந்த அவர், இந்த கோடையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.டீம் சீ சக்தி (Team Sea Sakthi) மற்றும் டீம் இன்கிராஃப்ட் (Team InCraft) ஆகிய குழுக்கள் எங்குச் சென்றாலும் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள் அதுவே உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும், என்றும் மாணவர்கள் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளாக இருந்தாலும் சர்வதேச அரங்கில் அவர்கள் இந்தியாவின் தூதர்களாகவே அறியப்படுவார்கள் என்றும் கூறியதுடன், தேசபக்தி மற்றும் முதலில் தேசம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.மேலும் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய தலைமுறையை வரையறுக்கின்றன எனவும் இந்தியாவின் சுயசார்பு இலக்கை நோக்கி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி (KCLAS) மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது.மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து வரலாறு படைத்துள்ள டீம் இன்கிராஃப்ட், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் (European International Submarine Races – eISR) பங்கேற்க உள்ளது.உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில் , மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூபா (SCUBA) சுவாசக் கருவிகளை அணிந்தபடி, ஒரு மாணவர் பைலட் தனது கால் வலிமையால் பெடலிங் செய்து இந்த கப்பலை இயக்க வேண்டும். ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கியுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், பறவைகளின் எலும்புக்கூடு அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட் பேர்ட் (Swift Bird) கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீருக்கு அடியில் அனைத்து திசைகளிலும் எளிதாகத் திரும்ப உதவுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிப்புற உடல் பகுதி சிப்பித் தூள் (Oyster shell powder) பூச்சைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Continue Reading

செய்திகள்

திருநெல்வேலி ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

Published

on

திருநெல்வேலி மாவட்டம், ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 நிகழ்ச்சி “Inspired by Nature. For Climate. For Our Future.” என்ற தலைப்பில் தமிழன் சிறகுகள் – இந்திய அரசு (MY Bharath கேந்த்ரா) சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அலுவலர் திரு. எல். ஞானச்சந்திரன், அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஆர். மதிவாணன் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் திரு. பி. வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக உடன் தமிழன் சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டதுடன், 210 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Continue Reading

கோயம்பத்தூர்

தலைவா தரணி ஆள வா

Published

on

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலக உள்ளதாகவும், அவரது பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கோவையிலும் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சார்பில் “தலைவா தரணி ஆள வா” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலையின் புகைப்படங்களுடன் “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற வாசகத்துடன் புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை மாநகரின் உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் காணப்படுவதால் அரசியல் மற்றும் ரசிகர் மன்ற வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Trending