Connect with us

ஆன்மிகம்

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகளும் சண்டிகாதேவி அம்மனின் சிறப்பு அலங்காரம்

Published

on

ஆன்மிகம்

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்ற விசாலாட்சி–விஸ்வநா தேஸ்வரர் திருக்கல்யாண

Published

on

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்ற விசாலாட்சி–விஸ்வநா தேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 16வது ஆண்டு ஸ்ம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ சண்டி ஹோமம் நடைபெற்றது.இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இதில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை அமைக்கப்பட்டு விசேஷ சண்டி ஹோமம் நடைபெற்றது.வேத முறைப்படி ஹோமக் கிரியைகளை நடத்தி, உலக நலன் மற்றும் பக்தர்களின் வளமான வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, விசாலாட்சி அம்பிகா மற்றும் விஸ்வநாதேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வை ஒட்டி மங்கள இசைகள் முழங்க, சாமிகளுக்கு புனித அலங்காரம் செய்யப்பட்டு, பாரம்பரிய முறையில் கல்யாணம் நடத்தப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்

Continue Reading

ஆன்மிகம்

11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

Published

on

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.

மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

ஆன்மிகம்

வெள்ளிங்கிரி மலை ஏறுவோருக்கு வனத்துறை அறிவுரை!

Published

on

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி சிவனை தரிசிப்பது வழக்கம் . இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வரும் நிலையில் எதிர்பாராத விதமாக இருவர் கடந்த வாரம் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளியங்கிரி மலையை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ்(68) நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.

இதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவரும் உடல்நிலை பாதிக்கபட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(46) இரண்டாவது மலை அருகே உயிரிழந்து உள்ளார்.

2 நாட்களில் 3 பேர் என இந்தாண்டு மொத்தம் 5 பேர் மலையேறுகையில் உயிரிழந்துள்ளனர். வெள்ளிங்கிரி மலையில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .

அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றவர்கள், இதய நோய், மூச்சு திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதானோர், உடல்நிலை சரியில்லாதவர்கள், மலை ஏறுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading

Trending