Connect with us

ஆரோக்கியம்

ஜப்பான் நாட்டில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சி. பழனிவேலுவுக்கு கௌரவ உறுப்பினர் அங்கீகாரம்!!

Published

on

உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தியை உருவாக்கி, புரட்சி செய்ததற்காக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவை தங்களது கவுரவ உறுப்பினராக நியமித்தது ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம்.

இந்த அங்கீகாரம் அவருக்கு 23.10.2025ல் ஜப்பான் நாட்டில் இந்த சங்கத்தின் 78வது ஆண்டு மாநட்டில் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் பழனிவேலு அவர்கள், தொராசிக் சர்ஜரி துறையில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சை முறை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டார்.

1998 ஆம் ஆண்டு உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தி ( Thoracoscopic Esophagectomy in Prone Position) டாக்டர் பழனிவேலுவால் உருவாக்கபட்டது. இதன் மூலம் நல்ல விளைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது.

இந்த உத்தியை ஆசிய பசிபிக் நாடுகளுக்கான மருத்துவ கருத்தரங்கு ஒன்றில் 2005ம் ஆண்டு டாக்டர் பழனிவேலு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் முன்பு செய்து காட்டியிருந்தார். இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதை தொடர்நது ஜப்பான் நாட்டில் இருந்து டாக்டர் பழனிவேலு தங்கள் நாட்டில் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் முன்பு இதை செய்து காட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.

டாக்டர் பழனிவேலு அறிமுகம் செய்த இந்த புது அறுவை சிகிச்சை முறை ஜப்பான் நாட்டில் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. இந்த முறை சிகிச்சை பற்றிய அவரின் மருத்துவக்கட்டுரைகள் அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளின் மதிப்பை பெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் பல நாடுகள், ஆசிய நாடுகளில் இந்த சிகிச்சை முறைக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தது.

இந்த நிலையில், ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம் இப்படிப்பட்ட தாக்கத்தை இந்த துறையில் ஏற்படுத்தியதாக டாக்டர் பழனிவேலுக்கு கவுரவ உறுப்பினர் பதவி வழங்கி மரியாதை செய்துள்ளது.

இந்த புதுமை கொண்ட அறுவை சிகிச்சை முறையை டாக்டர் பழனிவேலு இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கோவை என பல முக்கிய நகரங்களில் உள்ள உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளார்.உலக நாடுகளில் உள்ள நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இதை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

உலக செரிமான சுகாதார தினம்: கோவையில் “VGM IBD Clinics” தொடக்கம்

Published

on

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான (Inflammatory Bowel Disease – IBD) க்ரோன்ஸ் நோய் (Crohn’s Disease) மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் (Ulcerative Colitis) நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கியது. இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண் விருதுபெற்றவருமான டாக்டர் கே.ஆர். பழனிசாமி திறந்து வைத்தார்.

க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் உள்ளிட்ட IBD நோய்கள் இந்தியாவில் இளம் வயதினரிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் காணப்படுதல், வயிற்றுவலி, காரணமற்ற உடல் எடை இழப்பு, ரத்தசோகை மற்றும் அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் மேம்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனைகள், பயாலஜிக் சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் சிக்கலான IBD நோயாளிகளுக்கான குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, IBD நோயாளிகள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கு நோயை புரிந்துகொண்டு திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் “My Gut, My Voice” என்ற மாதாந்திர நோயாளர் ஆதரவு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தையும் வி.ஜி.எம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்வில் பேசிய வி.ஜி.எம் மருத்துவமனையின் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், “VGM IBD கிளினிக் மூலம் ஆதாரப்பூர்வமான, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை வழங்கப்படுவதுடன், IBD நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வும் மேம்படுத்தப்படும்” என்றார்.

அறிவியல் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு டாக்டர் வம்சி மூர்த்தி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, டாக்டர் மதுரா பிரசாத் சுமன் IBD மற்றும் குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) குறித்து, டாக்டர் எஸ். திவ்யசாரதி ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்து, IBD ஆலோசகரான திரு. சுமந்த்ரன் நோயாளிகளுக்கான உளவியல் ஆதரவு குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் மித்ரா பிரசாத் ஒருங்கிணைத்தார். நன்றியுரையை டாக்டர் சி.பி.எஸ். சுமன் வழங்கினார்.

ADVERTISMENT

Continue Reading

ஆரோக்கியம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி

Published

on

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூர்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி புரூக்ஃபீல்ட் மாலில் இன்று (மே 16) தொடங்கியது.தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி திரு. C.V. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு. D. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் S. ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் S. அழகப்பன், இணை மருத்துவக் கல்லூரியின் (SRHIAHS) முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

மருத்துவமனையின் எல்லைகளைத் தாண்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான வணிக வளாகத்தில் (Mall) இந்த நிகழ்வு நடத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக் கல்லூரி (SRHIAHS) மாணவர்கள் உருவாக்கிய நேரடி செயல் மாதிரிகள் (Working Models) கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன.

சுவாசம் மற்றும் செரிமானம் தொடர்பான சிக்கலான மருத்துவக் கருத்துகளைச் சாமான்ய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நுரையீரல் பாதிப்பு மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் குறித்து மாணவர்களும் மருத்துவர்களும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.

உயர்தர மருத்துவச் சேவையுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் விழிப்புணர்வுப் பணிகளையும் முன்னெடுப்பதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இக்கண்காட்சி நாளையும் (மே 17) புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெறவுள்ளது

Continue Reading

ஆரோக்கியம்

கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்

Published

on

கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம

 

கோயம்புத்தூர், ஏப்ரல் 6, 2026:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது.

இந்த ஆண்டின் “Together for Health. Stand with Science” என்ற கருப்பொருளின் கீழ், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிவியல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வருடம் முழுவதும் நடைபெறும் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில், மக்களிடையே முன்னெச்சரிக்கை சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் அவர்களின் வழிகாட்டுதலில், 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், ரூ.10,000 மதிப்புள்ள கார்டியோ–டயபிட்டிஸ் மாஸ்டர் ஹெல்த் சேக்கப் தொகுப்பு, இந்த வாரம் முழுவதும் வெறும் ரூ.1,000க்கு வழங்கப்படுகிறது.

அறிவியல் தரவுகளின்படி, சமீப காலங்களில் ஏற்படும் திடீர் இதய மரணங்கள், பெரும்பாலும் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் இணைந்த இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளன. குறிப்பாக 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் இது அதிகமாக காணப்படுவதால், இந்த வயது குழுவினருக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சுகாதார தொகுப்பில் முழுமையான இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், இமேஜிங் பரிசோதனைகள், மேலும் எக்கோ (ECHO) உள்ளிட்ட மேம்பட்ட இதய பரிசோதனைகள் அடங்கும்.

ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலக சுகாதார தினத்தை அனுசரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளுடன் இணைந்து, கொங்கு மண்டல மக்களுக்கு முன்னெச்சரிக்கை சுகாதார சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று டாக்டர் ஆதித்யன் குகன் தெரிவித்தார்.

இந்த முகாம் 2026 ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை, கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் நடைபெறும். ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், தினமும் 50 பேருக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய: 9944333006 / 8489655556 / 9659455556.

 

Continue Reading

Trending