Connect with us

Entertainment

நினைவுகளை விட்டுச் செல்லும் டிலைட் திரையரங்கம்!

Published

on

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் மினி கோடம்பாக்கமாக இருந்தது கோயம்புத்தூர். பல கதாநாயகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரை உருவாக்கிய பெருமை நம் கோயம்புத்தூருக்கு உண்டு. சினிமாவில் ஆர்வம் அதிகமுள்ள இடமும் கோவை தான். பல திரையாராகுங்கள் அதிகம் உருவான இடமும் இதுதான் . அன்று சினிமா மட்டுமே பொழுதுபோக்கை கொண்டு இருந்த கோயம்புத்தூருக்கு. பல திரையரங்கம் தான் தீனிபோட்டது. இப்படி சினிமா கொடிகட்டி பறந்த அந்தக் காலத்தில் கோவை வெரைட்டி ஹால் சாலையில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு என்ற பெருமையுடன் இடம் பிடித்தது டிலைட் தியேட்டர் .

முதல் திரையரங்கம் : 

1914 இல் சாமிகண்ணு வின்சென்ட் மற்றும் அவரது சகோதரர்களால் நிறுவப்பட்டது இந்த திரையரங்கம் .திருச்சியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி கோவை தியேட்டரில் காட்சிப்படுத்தி வந்துள்ளார் . வெள்ள நிற துணிகளை பயன்படுத்தி டென்ட் கொட்டகையும் அமைத்தார். இதை ஒரு கூடாரமாக அமைத்து சினிமா காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காலத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் டென்ட் சினிமா உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது. “வெரைட்டி ஹால் ரோடுக்கு வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பெயர் இதன் மூலம் வந்தது, தற்போது டிலைட் ட் தியேட்டர் என்று பெயர் மாற்றி அழைக்கப்பட்டு வருகிறது. 1930 களில் பிரிண்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட திரைப்பட டிக்கெட்டுகளை வழங்கிய முதல் தியேட்டர் என்ற பெருமையை வெரைட்டி ஹால் திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் முயற்சியால் கிடைத்தது.

இந்த திரையரங்கில் முதன்முதலில் வள்ளி திருமணம் என்ற திரைப்படம் திரையிடப்படதாகக் கூறப்படுகிறது.பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், சிவகுமார்,ஜெமினி கணேசன் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்கள் திரையிடபட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரையரகமாக இருந்து வந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளை கடந்த இந்த டிலைட் தியேட்டரில் கடந்த சில வருடங்களாக ஒரு சில பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது . அதைத்தொடர்ந்து சில பழைய படங்கள் திரையிடப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் டிலைட் தியேட்டரில் படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டனர்.கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

அழிக்க முடியாத நினைவுகள் : 

பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டு கால பழமை வாய்ந்த தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க பணிகள் துவங்கியுள்ளது. இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வணிக வளாகம் அமைத்தாலும் கூட, ஒரு திரையரங்கம் அமைந்தால் இதன் பெயர் இன்னும் பல நூற்றாண்டு வாழும் என்பதே பலரின்கருத்து .

வளர்ந்து வரும் புதிய தொழினுட்பம், புதிய மாற்றம் போன்றவற்றால் தியேட்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் இடிக்கப்படுவது கவலை அளித்தாலும், காலத்தால் அழிக்க முடியாத பல நினைவுகளை இந்த திரையரங்கம் கொடுத்திருக்கிறது. இன்று குளு குளு அறையில் திரைப்படத்தை பார்த்து தராத மகிழ்ச்சியை அன்று சாதாரண தரையிலும், கட்டை நாற்காலிகளும் மின் விசிறியுடன் அளவற்ற மகிழ்ச்சியும் நினைவுகளையும் அளித்துள்ளதாக கூறுகிறார் அன்று இந்த திரையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர். பல சாதனைகளையும், நினைவுகளையும் சுமந்து வெற்றியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறது டிலைட் தியேட்டர் என்ற பொக்கிஷம்!.

—- எழுத்து, சதிஷ் குமார் 

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Trending