Connect with us

செய்திகள்

மத்திய பட்ஜெட் – 2024 முக்கிய அறிவிப்புகள் !

Published

on

மத்திய பட்ஜெட் – 2024 முக்கிய அறிவிப்புகள்! 

 

  • நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்!
  • முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்;
  • ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்;
  • மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும்;
  • 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்;
  • 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்.
  • சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் ஆகியவையே பிரதமர் மோடி அரசின் தாரக மந்திரம்;
  • ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்;
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்;
  • 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும்;
  • 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்;
  • மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.
  • வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்;
  • சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்;
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு;
  • கடல் உணவு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது;
  • மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்”
  • வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்”
  • மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது.
  • பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது
  • கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது
  • 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது
  • 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
  • திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது
  • 2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்.
  • 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்”

– மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்பு வெளியீடு!

Published

on


உலகம் முழுவதும், அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டுடன் 23-வது முறையாக உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது.இந்த வெளியீட்டு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் அவர்கள் நிகழ்விற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக P&S குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நவ ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) திருமதி பிரியங்கா கார்த்திகேயனி கலந்து கொண்டு, எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் முன்னிலையில் இந்த ரீல்ஸ்களை வெளியிட்டார்.அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.டாக்டர் பி. குகன் தனது உரையில், இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது 2%லிருந்து 4% ஆக இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஒரு ஆய்வின்படி, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2023-ல் 2,20,000-க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. இது புதிதாக நோயறிதல் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது என அவர் கூறினார்.சிறு வயதிலேயே பூப்பெய்தல், தாமதமான மெனோபாஸ், 30 வயதுக்குப் பிறகு முதல் திருமணம் அல்லது குழந்தைப்பேறு, தொடர்ச்சியான மது அருந்துதல், வாய்வழி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை இந்த நோய்க்கான ஆபத்துக் காரணிகள் என்று டாக்டர் குகன் தெரிவித்தார்.இந்த முக்கியமான நாளில், ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். ஏனெனில், ஆரம்ப நிலைகளில் (நிலை 1 & நிலை 2) இந்த நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 50% முதல் 60% நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் (நிலை 3  அல்லது நிலை 4) சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலைகளில் நோய் குணமடைவதற்கான வாய்ப்பும், நீண்ட கால உயிர்வாழும் விகிதமும் கணிசமாகக் குறைவாக உள்ளன.எனவே, மார்பகப் புற்றுநோய் பற்றிப் பேசுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக முக்கியமான தேவையாகும்.

ஆரம்பத்தில் கண்டறிதல் பெரும்பாலும் எளிமையான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அப்போது, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மட்டும் தேவைப்படலாம், மேலும் மார்பகத்தைப் பாதுகாக்கும் சிகிச்சை (Breast Conservation) சாத்தியமாகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு பெண்களை, குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
எனவே, நாங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான  சமூக ஊடகத் தளமாக உள்ள இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.

மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக, தொடர்ச்சியாக 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்ப கட்ட நோயறிதல், வெவ்வேறு நோய் கண்டறியும் முறைகள், புற்றுநோயின் நிலைகள், கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனை ஆகியவை அடங்கும் என்று டாக்டர் குகன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து வீடியோக்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/sriorcoimbatore) பதிவேற்றப்படும். ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் எந்தவொரு வேலை நாளிலும் 0422-4389797, 0422 4500203 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக்கான நிறுவனம் விருது!

Published

on

பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதல் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக. தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக (2024-2025) தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (NITTTR) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், இந்த விருதை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 58 வது ஆண்டு விழாவில் பெற்றுக்கொண்டது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் ம.அசோக் மற்றும் விரிவுரையாளர் G.கதிரேஸ்குமார் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் ம.மாணிக்கம் மற்றும் தலைவர் மா.ஹரிஹரசுதன் ஆகியோர் இச்சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continue Reading

செய்திகள்

அபராத தொகையைக் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்!

Published

on

விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் வண்டியின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததுள்ளது சென்னை மாநகரக் காவல்துறை.

வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராதம் மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் முறையும் விதிக்கப்படுகிறது.

அதன் அபராதத்தொகையே இணையத்தளம் மூலம் கட்டும் வசதி இருந்தாலும் அதை செலுத்த பலரும் தவறுவதால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை சுமார் ரூ.300 கோடி வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை புதிய நடைமுறை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்டு அபராத தொகையை செலுத்தாத வாகனங்களுக்கு, இனி இன்சூரன்ஸ் கட்டணத்துடன் அபாரதத் தொகையையும் செலுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Continue Reading

Trending