Connect with us

செய்திகள்

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

Published

on

செங்கோட்டையன் முழு பேட்டி!

‘1972 ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொட்ங்கினார். 1973ல் அதிமுக சார்பில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்ட போது மாபெரும் வெற்றி பெற்றார்.

கோவையில் அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், அரங்கநாயகம் தலைவர், டிருப்பூர் மணி மாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து இருந்தார். நாங்கள் முழுமையாக நின்று செயல்படுத்தி எம்.ஜி.ஆரை அழைத்து சென்றபோது, மகிழ்ச்சி தெரிவித்தார்.

1977ல் நான் கோபியில் போட்டியிடுற போது, சத்தியமங்கலத்தில் என்னை எம்.ஜி.ஆர் நிற்க சொன்னார். அங்கு எனக்கு புதிய இடம் என்று கூறினேன், தனது பெயரை உச்சரிக்க சொன்னார்.

கோவை செழியன் போன்றவர்கள் இயக்கத்தில் இருந்து வெளியே சென்றபோது இல்லத்துக்கே சென்று வாருங்கள் என்று அழைத்தார்.

எம்.ஜி.ஆரி பொறுத்தவரை மாமேதையாக, மக்கள் போற்றும் தலைவராக இருந்தார். 10 ஆண்டுகாலம் சிறந்த ஆட்சியை தந்தார். பசிப்பிணி போக்கும் சத்துணவு வழங்கினார். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் முதல்வராக இருந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். தலைவருக்கு பின்னால் அவரது பின்னால் திரண்டோம். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, ஆளுமை மிக்க தலைமை நீங்கள் தான் வரவேண்டும் என்று அழைத்தோம். அவர் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை தந்தார்.

உலக நாடுகள் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக முதல்வராக செயல்பட்டார். 5 முறை முதல்வராக இருந்து ஏழை மக்களால் போற்றப்படும் தலைவராக இருந்தார். ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையாக ஜெயலலிதா இருந்தார். தி.க. தலைவர் கூட ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் வழங்கினார்.

இந்த இயக்கம் ஏழைகளுக்கான இயக்கமாக இருந்தது.

ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்கு பிறகு இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வருகிறபோது, திருமதி சசிகலா அவர்களை பொதுச்செய்லாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வரை நியமிக்க வேண்டி வந்தபோது முன்னாள் முதல்வரை நியமித்தோம்.

இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வருகிற போது, என்னுடைய பணிகளை ஜெயலலிதா பாராட்டினார்.

இந்த இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டு பல பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன். தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும்? இந்த இயக்கத்தில் தொண்டர்கள் சிறப்பாக வாழ தியாகம் செய்ய தயாராக இருந்தேன். அப்போது இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டேன். இதை நம்பி இருக்கிற எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

2016க்கும் பிறகு தொடர்ந்து தேர்தல்களை சந்திக்கிறோம்.

1991ல் ஜெயலலிதா பேசுகையில், என்னருகே இருப்பவர்கள் எங்கிருந்தார்கள். எப்படி என்னை விமர்சனம் செய்தார்கள்? ஆனால் அனைவரையும் அரவணைத்து செல்வதாக சட்டமன்றத்தில் பேசினார்.

2016ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம், 2019 தேர்தல், 21 தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சந்திக்கிற போது பிரச்சினைகள் உருவானது. 2024 தேர்தலை சந்தித்தோம்.

தேர்தல் முடிந்த பிறகு கழக பொதுச்செயலாளரை சந்தித்தோம். கழகம் தொய்வாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 பேரும் சந்தித்து பேசினோம்.

கருத்துக்களை கேட்ட அவர், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இதை எதற்காக சொல்கிறோம் என்றால், வெளியில் செனறவர்களை அரவணைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை. அவர்கள் பிரசாரத்தில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டார்கள்.

ஆனாலும் வெற்றி அவசியம் என்று வெளியே சென்றவர்களை அழைத்து, தேமுதிகவை அழைத்து வென்றார்.

ஆகவே வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அவர் வைக்கின்ற வேண்டுகோள் எந்த கண்டிஷனும் இல்லை என்கிறார், பல்வேறு மேடையிலும் கருத்துகளை சொல்கிறார். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். என் நிலையில் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு இந்த இயக்கம்தான் சகோதர பாசத்தை உருவாக்கி இருக்கிறது. மக்கள் ஆட்சி மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். அதை உருவாக்க நாம் வெளியில் சென்றவர்களை அழைத்து வந்து செயல்படுத்த வேண்டும்.

நல்ல ஆட்சியை தமிழகத்தில் வரவைக்க, எல்லோரையும் அழையுங்கள் என்று கூறுகிறேன். அவர் எந்த பொறுப்பும் தேவையில்லை என்று சொல்வது, மக்கள் நினைப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும். இதை விரைந்து செய்ய வேண்டும். விரைந்து செய்து முடித்தால் தான் தேர்தல் களத்தில் நிற்க முடியும்.

அது செய்ய முடியவில்லை என்றால் இந்தமன நிலையில் இருக்கிற அனைவரும் சேர்ந்து அதை செயல்படுத்துவோம். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அதை செய்யவில்லை என்றால் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது.

இதற்கு முடிவு வந்தால் தான் இவரது வெற்றிப்பயணத்தில் கலந்து கொள்வேன்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர்,

வருகின்ற கூட்டம் வேறு, பலவேறு தரப்பட்ட தொண்டர்களின் மனநிலை வேறு. யாரை இணைப்பது என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம். வெளியே சென்றவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவரை இணைக்க வேண்டும் என்று சொல்கிறேன். தென்மாவட்டத்தில் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

10 நாட்களில் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். ஆறு பேர் பேசியதற்கு பிறகு, தலைமை இதுகுறித்து எங்களை அழைத்து பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கிற போது தான் கட்சி வலுவாகும்.

எனக்கு நெருங்கிய நண்பர்களை கலந்து கொண்டு அடுத்தகட்ட முடிவு செய்வேன்.

நம்முடைய அமைச்சர்கள் பாரதப்பிரதமரையே சந்தித்து இருக்கிறார். என்னைத்தான் விளம்பரப்படுத்தி விட்டீர்கள்.

இயக்கத்துக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நூறாண்டுகாலம் இந்த இயக்கம் ஆளும் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறேன். என்றார்.

பேட்டியின் முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு விழா – இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

Published

on

மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை போன்ற சுகாதார நிறுவனங்கள், இந்தத் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்று சேருவதில் அபூர்வமான பங்காற்றியுள்ளன என்று இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்னிழா விழாவும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவும் இணைந்து பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.கோயம்புத்தூர் கொடிசியாவர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர். சுந்தர் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். குடியரசுத் தலைவர் விழா அரங்கிற்கு வந்தபோது, திருமதி பிரியங்கா சுந்தர் அவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.விழாவின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான லோகோவை துணைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, தலைமை விருந்தினர் உரையையும் நிகழ்த்தினார்.இதில் பேசிய, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , கடந்த 50 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மேற்கொண்ட பயணம் மகத்தானதும் பெருமைக்குரியதுமாக இருப்பதாக தெரிவித்தார். மேற்கு தமிழ்நாடு பகுதியில் மருத்துவ சுற்றுலாவளர்ச்சிக்கு முன்னோடியாக செயல்பட்டதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பெரும் பாராட்டு உரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ நிறுவனங்களுக்கு இரண்டு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. ஒன்று, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பது; மற்றொன்று, எதிர்காலத்தில் நோயாளிகளை பாதுகாக்கும் திறமையான மருத்துவ நிபுணர்களை உருவாக்குவது. எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்கள், இந்த இரு பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன என்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Continue Reading

செய்திகள்

நிர்மலா மகளிர் கல்லூரியில் திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி சாதனை!

Published

on

நிர்மலா மகளிர் கல்லூரியில் 1,330 திருக்குறள்கள் – பரதநாட்டிய நிகழ்ச்சியில் புதிய சாதனை கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி இன்று 4 மணி 30 நிமிடங்களில் 1,330 திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் 133 மாணவிகள் பங்கேற்று, ஒவ்வொரு மாணவியும் 10 திருக்குறள்களை பாரம்பரிய நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த தனித்துவமான பண்பாட்டு சாதனை, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, தமிழ் பண்பாடு மற்றும் நுண்கலைகளில் கல்லூரியின் அர்ப்பணிப்பிற்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி, மாணவிகளின் திறமை, ஒழுக்கம் மற்றும் கலாச்சார மேன்மையை வெளிப்படுத்தும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது.

Continue Reading

செய்திகள்

கோவையில் ரியம் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வளாகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார்.

Published

on

கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.துடியலூரில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் (Stitch ball machine) வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விரைவில் ஃபிபா (FIFA) அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா (FIBA) தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளன.இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் பேசிய ஆ.இராசா எம்.பி., கோயம்புத்தூரின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரியம் ஸ்போர்ட்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார். இத்தகைய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ரியம் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவாதி அகர்வால் பேசுகையில், “இது வெறும் விளையாட்டு மையம் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியாக அமையும்” என்றார்.

தற்போது பிக்கிள்பால் மைதானம் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மற்றும் இரவு நேரங்களில் ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழு விளையாடலாம். 200 கார்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் கூறுகையில், இரண்டாம் கட்டப் பணிகளாகக் கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் மற்றும் செஸ், ஸ்னூக்கர், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வசதிகள் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

Continue Reading

Trending