தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது
சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.
முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!
தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.
கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.
“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.
டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.
“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்
ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,
“இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.