Connect with us

விளையாட்டு

டென் டென் சதுரங்க அகாடமி – 9வது மாநில அளவிலான சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற்றது

Published

on

சென்னை :- டென் டென் சதுரங்க அகாடமி நடத்திய 9வது தமிழ்நாடு மாநில அளவிலான திறந்த மற்றும் சிறுவர் சதுரங்க போட்டி சென்னையின் படூரில் அமைந்துள்ள கேட்வே இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 438 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், U7, U9, U11, U13, U17 மற்றும் திறந்த பிரிவு என ஆறு பிரிவுகளில் கடும் போட்டி நிலவியது.

மொத்தம் 200 கோப்பைகள், 50 பதக்கங்கள் மற்றும் திறந்த பிரிவில் 25,000 மதிப்புள்ள 25 பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இளம் போட்டியாளர் மற்றும் சிறந்த சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

முக்கிய வெற்றியாளர்கள்:

  • U7: மைதிக் (கடலூர்), மிலானி ஜோசப் (சென்னை)
  • U9: கவுதம் ஹரிஷ் என்.வி. (திருவள்ளூர்), ஆராதனா ஏ (சென்னை)
  • U11: ஹரிஹரன் செல்வா, ரித்வியா தீபக் (செங்கல்பட்டு)
  • U13: விஷ்வா ஈ, ரூஹானி ஏ (செங்கல்பட்டு)
  • U17: சுகதீபன் ஏ (செங்கல்பட்டு), கீர்த்தி வர்ஷா எஸ் (சென்னை)
  • திறந்த பிரிவு: ஆகாஷ் கே பி (செங்கல்பட்டு)

பரிசளிப்பு விழாவில் திருமதி நந்தினி (துணை முதல்வர், கேட்வே பள்ளி), திரு எஸ்.ஆர். ஜனகிராமன் (தலைவர், டென் டென் சதுரங்க அகாடமி), எஸ்.என்.ஏ. அமர்நாத் (செயலாளர்) மற்றும் ஐஏ எஸ். கனிமொழி (தலைமை நடுவர்) கலந்து கொண்டு வெற்றியாளர்களை பாராட்டினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விளையாட்டு

3 இந்திய வீரர்கள் சதம் – இந்திய அணி இமாலய ஸ்கோர்!

Published

on

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரலின் சதத்துக்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜாவும் தனது 6வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்து, 286 ரன்கள் என்ற இமாலய முன்னிலைப் பெற்றுள்ளது.

ராகுல், ஜுரல், ஜடேஜா சதம்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் சதம் (100), கேப்டன் சுப்மன் கில் அரைசதம் (50) அடித்து இந்திய இன்னிங்ஸை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், துருவ் ஜுரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்தது. அனுபவம் மிக்க வீரரைப் போல ஜுரல் தனது 125 ரன்களால் ரசிகர்களை கவர, ஜடேஜா அதிரடி ஆட்டத்தில் வேகமாக ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜுரல் 125 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜடேஜா தொடர்ந்து தாக்குதல் நடத்தினார். 126வது ஓவரில் ஜோமல் வாரிக்கன் வீசிய பந்தை சிங்கிள் எடுத்து தனது 6வது டெஸ்ட் சதத்தை எட்டினார். வழக்கம்போல் தனது ‘வாள் சண்டை’ கொண்டாட்டத்தால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இன்னிங்ஸ் தோல்வி நெருங்கும் வெஸ்ட் இண்டீஸ்

இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 448/5 என வலுவான நிலையில் இருந்தது. ஜடேஜா 104 ரன்களுடனும் (*), வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தனர்.

முதல் இன்னிங்ஸிலேயே 162 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது 286 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய பந்துவீச்சை சமாளித்து இமாலய இலக்கை எட்டுவது சாத்தியமற்ற காரியமாகவே தோன்றுகிறது. எனவே, இந்தப் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்து, இந்திய அணி ஒரு பிரம்மாண்டமான இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்யும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

Continue Reading

Sports

முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி! – சிராஜ், பும்ரா, ராகுல் அசத்தல் !

Published

on

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக டேகனரைன் சந்தர்பால் – ஜான் கேம்ப்பெல் ஜோடி களமிறங்கி மட்டையைச் சுழற்றினர். இதில் டேகனரைன் சந்தர்பால் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல் மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்ப்பெல் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு களத்தில் இருந்த அலிக் அதானாஸ் – பிராண்டன் கிங் ஜோடியில் பிராண்டன் கிங் 13 ரன்னிலும், அலிக் அதானாஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் 12 ஓவரில் 42 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது தவித்தது வெஸ்ட் இண்டீஸ். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் – ஷாய் ஹோப் அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். அடுத்த 10 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்த ஜோடியில்  ஷாய் ஹோப் 26 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 32 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய சிராஜ் 4 விக்கெட்டையும், பும்ரா 3 விக்கெட்டையும், குலதீப் 2 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

 

இந்தியா பேட்டிங்

தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல் ராகுல் மட்டையைச் சுழற்றி வருகிறார்கள்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பின்வருமாறு:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ்: டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஜேடன் சீல்ஸ்.

நேரலை ஒளிப்பரப்பு 

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அதன் இணைய பக்கத்தில் நேரலையில் பார்த்து மகிழலாம்.

Continue Reading

Sports

இந்தியாயுடன் மோதும் ஆஸ்திரேலியா! 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி!

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது

முதல் டெஸ்ட் செப்டம்பர் 16-20 தேதி வரையிலும், 2வது டெஸ்ட் செப்டம்பர் 23-26ம் தேதி வரையிலும் நடக்கவுள்ளது; 3 ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

 

 

Continue Reading

Trending