சென்னை :- டென் டென் சதுரங்க அகாடமி நடத்திய 9வது தமிழ்நாடு மாநில அளவிலான திறந்த மற்றும் சிறுவர் சதுரங்க போட்டி சென்னையின் படூரில் அமைந்துள்ள கேட்வே இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 438 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், U7, U9, U11, U13, U17 மற்றும் திறந்த பிரிவு என ஆறு பிரிவுகளில் கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 200 கோப்பைகள், 50 பதக்கங்கள் மற்றும் திறந்த பிரிவில் 25,000 மதிப்புள்ள 25 பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இளம் போட்டியாளர் மற்றும் சிறந்த சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
முக்கிய வெற்றியாளர்கள்:
U7: மைதிக் (கடலூர்), மிலானி ஜோசப் (சென்னை)
U9: கவுதம் ஹரிஷ் என்.வி. (திருவள்ளூர்), ஆராதனா ஏ (சென்னை)
U17: சுகதீபன் ஏ (செங்கல்பட்டு), கீர்த்தி வர்ஷா எஸ் (சென்னை)
திறந்த பிரிவு: ஆகாஷ் கே பி (செங்கல்பட்டு)
பரிசளிப்பு விழாவில் திருமதி நந்தினி (துணை முதல்வர், கேட்வே பள்ளி), திரு எஸ்.ஆர். ஜனகிராமன் (தலைவர், டென் டென் சதுரங்க அகாடமி), எஸ்.என்.ஏ. அமர்நாத் (செயலாளர்) மற்றும் ஐஏ எஸ். கனிமொழி (தலைமை நடுவர்) கலந்து கொண்டு வெற்றியாளர்களை பாராட்டினர்.