Connect with us

கோயம்பத்தூர்

மோடி வருகை; கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…!

Published

on

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கனரக வாகனங்கள்.. காலை 6 மணி முதல் மற்றும் 19ம் தேதி காலை 11 மணி வரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு. காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதூர், சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவினாசி சாலை SNR சந்திப்பு வழியாக 100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி மேட்டுப்பாளையம் சாலை, டி.பி ரோடு. புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவினாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

19ம் தேதி காலை 7 மணி முதல் 11 மணி வரை அவிநாசி சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிரக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பு, ஆவாரம்பாளைம் ரோடு, கணபதி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என். ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருச்சி சாலையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் துடியலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சரவணம்பட்டி வழியாகவோ அல்லது GN Mill மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி KNG புதூர் வழியாகவோ அல்லது கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம்.

மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும், மேட்டுப் பாளையம் சாலை சங்கனூர் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் செல்ல வேண்டும்.

காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி ரோடு. கணபதி, சூரியா மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மணியகாரம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம்.

மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து வரும் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபார்க், தெலுங்குவீதி, ராஜவீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம்.

மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் லாலிரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி, பூமார்க்கெட், சிந்தாமணி, டி,பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி. பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கேற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி ஆதி மாருதியில் அசத்தலான ஸ்டைலிஷ் விக்டோரிஸ் கார் அறிமுகம்!

Published

on

கோவை : சரவணப்பட்டியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் மாருதியின் புதிய வரவாக வெளிவந்துள்ளது விக்டோரிஸ் கார். இதன் அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி (நேற்று) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமுதிர்நிலையம் உரிமையாளர் துரைராஜ் சின்னசாமி, பழமுதிர்நிலையம் பங்குதாரரும், ஆனந்த ஹோண்டா(பெங்களூர்) நிர்வாக இயக்குனருமான ஞானசேகர் கந்தசாமி, கோவை பழமுதிர்நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன், பழமுதிர் நிலையம் உரிமையாளர் விஜய் ரத்தினம், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி ஸ்ரீனிவாசன், மாருதிசுசூகி, பகுதி மேலாளர் சுபாஷ், மாருதி சுசூகி டெரிடாரி விற்பனை மேலாளர் சாம் சுந்தராஜ், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி விற்பனை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

விக்டோரிஸ் எல்எஸ்ஐ, விக்டோரிஸ் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ, விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ ஏடி ஆகிய வெறியன்ட்யுடன் களமிறங்கியுள்ளது மாருதி விக்டோரிஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற.

பாதுகாப்பு சாதனைக்கான GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பல அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது .

 

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 யூ17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில் பெற்றுள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

Trending