Connect with us

உள்ளூர் செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ராயல் கேர் செவிலியர் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா!

Published

on

ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் விளக்கேற்றும் விழா கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை காலை பத்து மணியளவில் கோவை ராமலக்ஷ்மி அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின் தலைவர், இயக்குனர் டாக்டர் K மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் திரு கிராந்திக்குமார்  அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சூர் ஜூப்ளி மிஷன் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏஞ்செலா ஞானதுரை அவர்கள் கௌரவ விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு செவிலியர் பணியை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார் .  மேலும், ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் திருமதி டாக்டர் திலகவதி ராய் அவர்கள் செவிலியர் உறுதிமொழியை முன்மொழிய, மாணவ மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிறைவாக ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் திருமதி சுமிதா நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS முகாம் நிறைவு !

Published

on

அன்னூர், அக்.3: அன்னூர் அமரர். முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் அன்னூர் அடுத்துள்ள நாகம்மாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 26ம் தேதி முகாம் துவங்கி நேற்று 2ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் முகாம்மிட்டு வந்தனர். டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்தி துவக்கி வைத்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்றது பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பஞ்சாலை நிறுவனத்தை பார்வையிடுதல், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாக தூய்மை பணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நெகிழிப்பை ஒழிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், கண் சிகிச்சை முகாம், புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னூர் காவல் நிலையம், பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நேற்று காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்னூர் பேரூராட்சி அலுவலத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு தீயணைப்புத்துறையினரின் ஆபத்துகால மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இது தொடர்ந்து மாலை முகாம் நிறைவு விழா நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை பள்ளியின் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் சுரேஷ் செய்துவருகிறார். அவருடன் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வன், சுமதி, தமிழரசி, ஆகியோர் உடன் இருந்து முகாமை செயல்படுத்தினர்.

அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணி திட்டம் முகாமில் அன்னூர் காவல் நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்

அன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளி NSS மாணவர்கள் சிறப்பு முகாம்.

Published

on

அன்னூர், அக்.2:  அன்னூர் அமரர். முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் நடைபெற்று வருகிறது. அன்னூர் அடுத்துள்ள நாகம்மாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 26ம் தேதி முகாம் துவங்கி இன்று 2ம் தேதி வரை நடைபெருகிறது. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் முகாம்மிட்டு வருகின்றனர். டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்தி துவக்கி வைத்தார். ஒரு வாரம் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பஞ்சாலை நிறுவனத்தை பார்வையிடுதல், அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் வளாக தூய்மை பணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நெகிழிப்பை ஒழிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், அன்னூர் காவல் நிலையம் பார்வையிடுதல், பேரூராட்சி அலுவலகம் பார்வையிடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது கோவை அரவிந்த் கண் மருத்துவமனையும் அன்னூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இந்த கன்சிகிச்சை முகாமில் 170 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் இதில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னூர் தீயணைப்பு நிலையம் பார்வையிடுதல் மற்றும் முகாம் நிறைவு விழா நடத்தப்படுகிறது. முகாம் ஏற்பாடுகளை முகாம் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் செய்துவருகிறார். அவருடன் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வன், ஜோஸ்வாசிங்கம், சுமதி, உமா, தமிழரசி, ஆகியோர் உடன் இருந்து முகாம் பணிகளை செய்து வருகின்றனர்.

அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்டம் முகாமில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள்.

அன்னூரில் உள்ள பஞ்சாலை நிறுவனத்தை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி ஆதி மாருதியில் அசத்தலான ஸ்டைலிஷ் விக்டோரிஸ் கார் அறிமுகம்!

Published

on

கோவை : சரவணப்பட்டியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் மாருதியின் புதிய வரவாக வெளிவந்துள்ளது விக்டோரிஸ் கார். இதன் அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி (நேற்று) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமுதிர்நிலையம் உரிமையாளர் துரைராஜ் சின்னசாமி, பழமுதிர்நிலையம் பங்குதாரரும், ஆனந்த ஹோண்டா(பெங்களூர்) நிர்வாக இயக்குனருமான ஞானசேகர் கந்தசாமி, கோவை பழமுதிர்நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன், பழமுதிர் நிலையம் உரிமையாளர் விஜய் ரத்தினம், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி ஸ்ரீனிவாசன், மாருதிசுசூகி, பகுதி மேலாளர் சுபாஷ், மாருதி சுசூகி டெரிடாரி விற்பனை மேலாளர் சாம் சுந்தராஜ், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி விற்பனை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

விக்டோரிஸ் எல்எஸ்ஐ, விக்டோரிஸ் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ, விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ ஏடி ஆகிய வெறியன்ட்யுடன் களமிறங்கியுள்ளது மாருதி விக்டோரிஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற.

பாதுகாப்பு சாதனைக்கான GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பல அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது .

 

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 யூ17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில் பெற்றுள்ளது.

Continue Reading

Trending