Connect with us

சினிமா

ஒருவேளை… இடைவெளி விட்ட தளபதி அதிர்ந்த அரங்கம்!

Published

on

அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்ப்பது இயலாத காரியம். அரசியலில் இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பதும், சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதுதான். எம்.ஜி.ஆர் சிவாஜி கருணாநிதி, ஜெயலலிதா இன்னும் பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.இவர்களை அடுத்து யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவார்கள் என்ற திர்பார்ப்பு தொடர்கிறது. விஜய் வருவார் என பலராலும் பேசப்பட்டாலும் அது பேச்சாகவே இருந்து வருகிறது இந்த நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பபரிசு வழங்கும் நிகழ்ச்சி நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் மாணவர்களுக்கு பொதுவான அறிவுரைகளும், அரசியல் அறிவுரைகளும் சொல்லி அரங்கை அதிரச் செய்தார்.

என் நெஞ்சில் குடியிருக்கும், இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன்.நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்ட ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்ட ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது. ஒருவேளை… என்று தனது பேச்சை விஜய் நிறுத்தியதும் அரங்கம் அதிரும் அளவுக்கு சத்தம் விண்ணை முட்டியது ….அத விடுங்க …. அதன் ஏன் இங்க பேசிட்டு…. என பன்ச் வைத்து நிறுத்தினர். மீண்டும் தனது உரையை துவங்கிய விஜய் ” இந்த விழா நடத்துவதற்கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்.

ஓட்டுக்கு பணம் வேண்டாம்

முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.

உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.

 

சினிமா

பெயரை மாற்றிய நடிகர் சாம்ஸ்! இனி என் பெயர் “ஜாவா சுந்தரேசன்”

Published

on

சினிமா துரையில் முன்னணி காமெடி நடிகரான சாம்ஸ் பல பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ள கதாபாத்திரத்திரம் அறை என் 305ல் கடவுள் படத்தில் வரும் ஜாவா சுந்தரேசன் கேரக்டர் தான்.இந்த நிலையில் தனக்கு அதிக புகழ் கொடுத்த இந்த பெயரை (ஜாவா சுந்தரேசன்)  மாற்றியுள்ளார் நடிகர் சாம்ஸ்.

இதுகுறித்து தனது சமூக ஊடகத் தளத்தில் நடிகர் சாம்ஸ் (ஜாவா சுந்தரேசன்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தனது பெயரை அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நண்பர்களுக்கும் மீடியாவை சேர்ந்தவர்களுக்கும் இன்று விஜயதசமி நன்னாளில் ஒரு செய்திஎன்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை “சாம்ஸ்” (CHAAMS) என்று மாற்றினேன். அதே பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன்.ஆனால்… இயக்குனர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

எங்கே சென்றாலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் “ஜாவா சுந்தரேசன்” என்று அழைக்கின்றனர்.

எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று இன்று முதல் (02.10.2025) எனது பெயரை “ஜாவா சுந்தரேசன்” என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

இந்த பேருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் “ஜாவா சுந்தரேசன்” என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவன் அவர்களே.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துவிட்டு , முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் “ஜாவா சுந்தரேசன்” ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன்.

இந்த நேரத்தில் “அறை எண் 305’ல் கடவுள்” படத்தை தயாரித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை மீது நம்பிக்கை, காலம் வரும்போது யாரும் பெரிய உயரங்களைத் தொடலாம் என்பதற்கு அடையாளமாக அமைந்தது “ஜாவா சுந்தரேசன்” கதாபாத்திரம்.

“ஜாவா சுந்தரேசன்” ஐ சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சென்றடைய வைத்த அனைத்து மீம்ஸ் படைப்பாளிகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி! இந்த நல்ல தருணத்தில் அருமையான பல சிறந்த நகைச்சுவை கதாபாத்திரங்களை எனக்கு

தந்து மக்களை மகிழ்விக்க வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சினிமா துறையை சார்ந்த மற்ற நண்பர்களுக்கும் உதவிய ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

அனைவரும் இனி என்னை “ஜாவா சுந்தரேசன்” என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.”

அன்பும் நன்றியும்

ஜாவா சுந்தரேசன்

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending