Connect with us

கோயம்பத்தூர்

கோவை மண்டலத்தில் 8 மாதங்களில் 1.33 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றனர்.

Published

on

கோவை மண்டலத்தில் 8 மாதங்களில் 1.33 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றனர்.

கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கும் நோக்கில், செப்டம்பர் 2008 முதல் அவிநாசி சாலையில் கோவை மண்டல பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

வெளிநாடு செல்ல தேவையான முக்கிய ஆவணமாகக் கருதப்படும் பாஸ்போர்ட் பெற, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு 1.87 லட்சம் பேருக்கும் அதிகமாக பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், 2024 இல் இது 1.92 லட்சமாக உயர்ந்தது. தற்போது, 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் இறுதிவரை (8 மாதங்களில்) 1.33 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.

தினசரி சராசரியாக 1,070 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களும், கோடை மற்றும் சுற்றுலா சீசன்களில் வெளிநாடு பயணிக்கும் மக்களும் அதிகமாக விண்ணப்பிப்பதால், எண்ணிக்கை உயரும் நிலையில் உள்ளது. கோடை காலங்களில் விண்ணப்பிப்பவர்களில் சுமார் 50% சிறுவர், சிறுமியரே எனவும் கூறப்படுகிறது.

மேலும், இவ்வாண்டில் மட்டும் கோவை மண்டலத்தைச் சேர்ந்த 64,000க்கும் அதிகமானவர்கள் இ-பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு – இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

Published

on

மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை போன்ற சுகாதார நிறுவனங்கள், இந்தத் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்று சேருவதில் அபூர்வமான (அசாதாரணமான) பங்காற்றியுள்ளன என்று இந்தியாவின் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்னிழா விழாவும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவும் இணைந்து பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர் கொடிசியா (CODISSIA) வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இந்தியாவின் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர். சுந்தர் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர் விழா அரங்கிற்கு வந்தபோது, திருமதி பிரியங்கா சுந்தர் அவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.

விழாவின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றுக்கான நினைவுச் சின்ன (லோகோ) வடிவங்களை துணைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

மேலும், சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, தலைமை விருந்தினர் உரையையும் நிகழ்த்தினார்.

அவரது உரையில், கடந்த 50 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மேற்கொண்ட பயணம் மகத்தானதும் பெருமைக்குரியதுமாக இருப்பதாக தெரிவித்தார். மேற்கு தமிழ்நாடு பகுதியில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) வளர்ச்சிக்கு முன்னோடியாக செயல்பட்டதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பெரும் பாராட்டு உரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ நிறுவனங்களுக்கு இரண்டு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. ஒன்று, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பது; மற்றொன்று, எதிர்காலத்தில் நோயாளிகளை பாதுகாக்கும் திறமையான மருத்துவ நிபுணர்களை உருவாக்குவது. எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்கள், இந்த இரு பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன என்றும் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Continue Reading

கோயம்பத்தூர்

ஜனவரி 15-ல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா!

Published

on

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளது.

இதன் அறிவிப்பு நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை, கோவையில் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனிதம் போற்றும் மருத்துவம்.அதுவே அறத்தின் மகத்துவம் எனும் சிந்தனையோடும், குறைந்த செலவில் தரமான மருத்துவம்எனும் சீரிய நோக்கத்தோடும்,1975 ஆம் ஆண்டு 18 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை துவங்கப்பட்டது.

கோயம்புத்தூரில் முதல் எம்.ஆர்.ஐ ஸ்கேன், மருத்துவத் துறையின் அதிநவீன உபகரணங்கள், மருத்துவத்தின் சிறப்புத் துறைகளை உருவாக்குதல், மேம்பட்ட இதய சிகிச்சை என்று சாதனைகளின் தோற்றுவாயாக உருவானது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவனை.1990–ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்னும் முதல் வெற்றியைப் பதித்தது. 2005 இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகைபுரிந்தார். புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை துறை அப்போது தொடங்கப்பட்டது.2015 ஆம் ஆண்டு சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மையம் கட்டமைக்கப்பட்டது.தரமான உள்கட்டமைப்பு, 1000 படுக்கைள், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), 16 அறுவை சிகிச்சை அறைகள், அவசர மற்றும் இதய நோய் சிகிச்சை மையங்கள், மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவுகள் என்று மருத்துவத்துறையில் தன்னிகரற்றமருத்துவமனையாக உருவெடுத்தது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.2016 இல் 8 மணி நேரத்தில் 13,206 நபர்கள்தங்கள் உடல் உறுப்புதான ஒப்புதல் படிவங்களை நிரப்பி மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தி “கின்னஸ் வேர்ல்ட் ஆப் ரெக்கார்ட்”புத்தகத்தில், சரித்திர நிகழ்வைப் பதித்தது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ முன்னேற்றங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக திகழ்கின்றது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனை.ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனையின் இந்த 50 ஆண்டு காலப் பயணமானது, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பால் சாத்தியமானது.ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளைக் கடக்கும் இதே தருணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனது தடத்தினைப் பதித்துள்ளது. அதிநவீன ஆய்வகங்கள், கிளினிக்குகள், ஸ்மைல் டிசைன் என்று முன்னோடி தொழில்நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது. மிகுந்த அனுவம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதால் இன்று கடல் கடந்தும் பயணிக்கும் பல்வேறு பல் மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. மிகுந்த குறைந்த கட்டணத்தில் ஏராளமான பொதுமக்கள் இங்கு பயனடைந்து வருகின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் 25-வது ஆண்டு வெள்ளிவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்த வளாகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர், என டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறினார்.“ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்போதும் கொங்கு மண்டலத்தில் ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய, அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையாகத் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மிகச்சிறந்த 5 பல் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் கிராமப்புற மக்களுக்கும், கொங்கு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின்றன,” என்று டாக்டர் சுந்தர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய ஒரு மருத்துவ நிறுவனமாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். அடுத்த 50 ஆண்டுகளில், மிகவும் மேம்பட்ட மருத்துவ அமைப்புகள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்யவும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த சிகிச்சையை வழங்கி கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த மருத்துவமனையாகத் திகழவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.“வருங்காலங்களில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் எங்களது சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

பேட்டியின் போது, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திரு. நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருப்பூரில் , பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சாமுண்டிபுரம் பகுதி, கோல்டன் நகர், நல்லூர் மற்றும் நெருப்பெரிச்சல் பகுதி உள்ளிட்ட திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்த விழா தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். பாலமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.க்கில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து தரப்பினரும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடியதன் மூலம் சமூக ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய சமத்துவ விழாக்கள் சமூக நல்லிணக்கத்தையும், மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தும் என்பதையும் விழாவில் கலந்துகொண்டவர்கள் எடுத்துரைத்தனர்

Continue Reading

Trending