Connect with us

உள்ளூர் செய்திகள்

கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 11.8 கி.மீ. முதல் பகுதி முழுதுமாக நிறைவேற டிசம்பர் 2025 ஆகும் !

Published

on

 

 

கோவை மேற்கு புறவழி சாலை திட்டத்தின் 11.8 கி.மீ. முதல் பகுதி முழுதுமாக நிறைவேற டிசம்பர் 2025 ஆகும் !

கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது. மொத்தம் 32.4 கி.மீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலை 3 பகுதிகளாக அமைக்கப்படுகிறது.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ), மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

முதல் பகுதி ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 11.80 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கவேண்டிய இடத்தில் இன்னும் 2 கிலோமீட்டருக்கு தான் உள்ளது.

மேலும் இப்பகுதியில் அமைகிற மாதம்பட்டி சந்திப்பு மேம்பால பணிகள் நிறைவேறியுள்ளது. அதே சமயம் மைக்கல் பகுதியில் அமைகிற மேம்பாலம் 40% நிறைவேறி உள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மேம்பாலம் அமையும் மைக்கல் பகுதியில் நிலம் கையகப்படுத்துதலில் தாமதம், நிலத்தடியில் உள்ள குழாய்கள், வயர்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் சில எதிர்பாரா சவால்களால் இந்த முதல் பகுதி தாமதம் ஆக காரணங்களாக பார்க்கப்படுகிறது. முதல் கட்ட பணிகள் மொத்தம் 90% நிறைவடைந்துள்ளது.

செப்டம்பர் 2025ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த முதல் பகுதியின் பிரதான சாலையை நவம்பரில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், மேம்பாலம் உள்ளிட்ட முழு முதல் கட்ட பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதல் கட்ட பணிகள் நிறைவேறிய பின்னர் தான் மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் வரும் இரண்டாம் பணிகள் துவங்கும். ஆனால் இந்த திட்டத்திற்கு தேவையான நிலம் 90%க்கும் மேல் கையகப்படுத்தப்பட்டுவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கை – கலெக்டர் உத்தரவு

Published

on

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு துறையில் செயல்படும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து “நான் உயிர் காவலன்” என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக மனித சங்கிலி பிரச்சாரமும் சமீபத்தில் கோவை மாநகரில் நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து அரசு துறைகளும் இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் சிறப்பாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார்:

  • பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

  • விபத்துக்கு வழிவகுக்கும் குழிகள், வேகத்தடைகள் மற்றும் சாலையின் ஓரங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  • விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

  • பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது கோவை மாநகரின் பல சாலைகளில் குழிகள் மற்றும் குறியீடு இல்லாத வேகத்தடைகள் காரணமாக விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மழை நீர் தேங்கும்போது அல்லது நிழல் படும்போது அவை வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆட்சித்தலைவர் நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், கோவை சாலைகள் இனி பாதுகாப்பானதாக மாறுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Continue Reading

Trending