Connect with us

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Published

on

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.

5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். சட்டசபை இன்று (ஏப்.9)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இந் நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

அரசியல்

விஜய் வாகன விபத்து: பறிமுதல் செய்யாதது ஏன்? — நீதிபதி கேள்வி

Published

on

தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பாக, ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? மேலும் அந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்க கோரி பி.எச். தினேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.

அப்போது, “விஜயின் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்ததை நீங்கள் கண்டீர்களா?” என்று நீதிபதி முதல் கேள்வியாக மனுதாரர் தரப்பிடம் வினவினார்.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

அரசியல்

தங்கம் தென்னரசு அறிவிப்பு

Published

on

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 4 நாணயங்கள் கண்டெடுப்பு தங்கம் தென்னரசு அறிவிப்பு.

பொற்பனைக்கோட்டை வணிக நகரமாக இருந்ததற்கு 4 நாணயங்கள் சான்றாக விளங்குகின்றன அமைச்சர் விளக்கம்

வெள்ளி முத்திரைக்காசு, புலி உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் முக்கியமானவை:அமைச்சர்

அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் வரலாற்று காலத்தைச் சேர்ந்தவை தங்கம் தென்னரசு அறிவிப்பு

Continue Reading

Trending