Uncategorized

கலால் வரியை ரூ.10 குறைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி – வானதி சீனிவாசன்

Published

on

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி தேவையில் சுமார் 70% இறக்குமதியையே சார்ந்துள்ளது. குறிப்பாக ஹார்மோஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பல நாடுகள் சிக்கலை சந்தித்து வருகின்றன என தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் 11 கோடி ஏழை பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்து வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு சரியான முறையில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும், கட்சியினர் அனைவரும் கூட்டணியின் வெற்றிக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும், கோவை வடக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Click to comment

Trending

Exit mobile version