Connect with us

கோயம்பத்தூர்

அதிமுகவை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்! – சூலூரில் எஸ்.பி. வேலுமணி பேச்சு

Published

on

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி,நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் குறிப்பிட்ட அவர், ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும், அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சாடினார்.சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளதாகவும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்  உள்ளது, மாற்றுக்  கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

கோயம்பத்தூர்

எஸ்.என்.ஆர். சன்ஸ் 42-வது நிறுவனர் நாள் விழா

Published

on

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடு அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி 42-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா இன்று (27.02.2026), கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உயர்திரு. டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம். லேப்ஸ், ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் மற்றும் தைரோகேர் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்று 25 ஆண்டுகள் நிறைவு செய்த 30 நபர்களைக் கௌரவித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, 400 – க்கும் மேற்பட்ட இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது,

ஒரு அறக்கட்டளை 18 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறது என்றால் அது ஒரே நாளில் நடந்ததல்ல. இந்த அறக்கட்டளையைத் தொடங்கியவர்களும், அதில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றுபவர்களும் இந்த சமூகத்தில் உருவாக்கிய நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, உண்மை இவை போன்ற காரணிகளால் மட்டுமே சாத்தியம். நம் வாழ்வில் முன்னேற மிக முக்கியமானவை தைரியமாக முடிவெடுப்பது. அதனால் தான் என்னால் பெரிய உயரங்களைத் தொட முடிந்தது. குடும்பத்தை நேசியுங்கள். பிள்ளைகளை நம்புங்கள். அவர்களால் பெரிய மாற்றங்கள் நிகழும். என்னை என் தாய் நம்பினார்கள். நான் உயர்ந்துவிட்டேன். ஒரு ஆண் வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் வளரும். ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றால் ஒரு சமூகமேs வளரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ணா விஜயகுமார், லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமை செயல் அதிகாரி திரு. சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.

Continue Reading

கோயம்பத்தூர்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் எஸ்.தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி பி.ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்.சி., மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவி ஆர்.சந்தியா, பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, பி.எஸ்சி., கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி எம்.திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி என்.ஜனனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4வது பட்டமளிப்பு விழா!

Published

on

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா 21 பிப்ரவரி 2026 அன்று குமரகுரு வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், ஜெட் சிந்தசிஸ் நிறுவனருமான . ராஜன் ஆர். நவானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மொத்தம் 8 இளங்கலை மற்றும் 2 முதுகலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 408 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2021–24 இளங்கலை மற்றும் 2022–24 முதுகலைப் பட்டதாரிகள் மொத்தம் 27 பல்கலைக்கழக தரவரிசைகளைப் பெற்றதுடன், அதில் 4 தங்கப் பதக்கங்களும் இடம்பெற்றன.

விழாவில் உரையாற்றிய குமரகுரு நிறுவனங்களின் தலைவர்  சங்கர் வானவராயர், மாணவர்கள் தைரியம், கருணை, குணநலம் மற்றும் ஆர்வம் ஆகிய நான்கு அடிப்படை மதிப்புகளை தங்கள் வாழ்வின் தூண்களாகக் கொண்டு புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இக்கால மாற்றச் சூழலில் சாதனை செய்யத் தைரியம் கொள்ளவும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் இல்லாதவர்களையும் முன்னேற்றப் பாதையில் இணைத்துச் செல்லவும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி ஜெட்லைன் குழுமத்தின் தலைவரும், ஜெட்சின்தெசிஸ் (JetSynthesys) நிறுவனருமான திரு. ராஜன் ஆர். நவானி பேருரையாற்றினார். அவர் பேசியதாவது:

“இன்றைய இளைஞர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு, ஜனநாயக முறையில் வளரும் நாடாக இருந்து வளர்ந்த நாடாக மாறுவது மனித வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று. நமது மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க இதுவே மிகச் சிறந்த தருணம். செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. AI என்பது தகவல் யுகத்தின் முடிவைக் குறிக்கலாம்; ஆனால் அது மனித படைப்பாற்றல் யுகத்தின் புதிய தொடக்கமாகும். எந்திரங்களை மனிதர்கள் கட்டுப்படுத்த நமது உள்ளுணர்வும் (Human Intuition), படைப்பாற்றலும் (Creativity) மிக அவசியமாகும். மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றலுடன் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என வாழ்த்தினார்.

இந்த விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர், இணைத் தாளாளர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Continue Reading

Trending