Connect with us

Business

நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல் !

Published

on

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காக்கவும் இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி அதன் படி பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது தொழிலாளர் சட்டங்களில் மிகப் பெரிய மாற்றத்தை வெளியுட்டுள்ளது. இனி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே சட்டம் தான். இதன் மூலம் சம்பளம், சமூக பாதுகாப்பு எல்லாம் எளிமையாகும். நம் நாட்டின் தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 ஒருங்கிணைத்து நான்கு சட்டத் தொகுப்புகளாக உருவாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கு பயன்கள் என்ன ?

இந்தப் புதிய சட்ட கட்டமைப்பில் , பல பழமையான விதிகளை சுலபமாக்குவது, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவது, பாதுகாப்பு தரங்களை பலப்படுத்துவது மற்றும் நாட்டின் தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய முறைகளுக்கு கொண்டுசெல்வது ஆகியவற்றை  இலக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது .

 

  • பெண்களுக்கு சம ஊதியம், மரியாதைக்கு உத்தரவாதம்
  • வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பு உருவாக்குதல்
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள்.
  • வேலையில் சேரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள்( அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ).
  • நிலையான கால ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவாதமான பணிக்கொடை.
  • 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனை
  • கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உத்தரவாதம்
  • ஆபத்தான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் உறுதி
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம்
  • சர்வதேச தரநிலைகளின்படி தொழிலாளர்களுக்கு சமூக நீதி உத்தரவாதம்.

வரலாற்று சிறப்புமிக்க நாள் பிரதமர் பெருமிதம் :

இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் : எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Business

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற மில்லியனேர் சம்மிட் 2026

Published

on

சென்னையில் மில்லியனேர் சம்மிட் 2026 சிறப்பாக நடைபெற்றது. தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு நிதி அறிவு, தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் போர்டு உறுப்பினர்களாக ஹாலிடே சீசென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவி குமார் எஸ், Aesthetic டிசைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO . ஏ. எஸ். ராஜசேகர், Rainbow Forms நிறுவனத்தின் CMO அகிலன் மோகன்தாஸ், Venkatram Catering Services நிறுவனத்தின் CEO . ஆர். வெங்கடராமன், S.V. Plymart நிறுவனத்தின் நிறுவனர் சண்முகம் ராஜா, LoansFunding.in நிறுவனத்தின் இயக்குநர் நிர்மல் ஜே, Niile Technical Skill & Consulting Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சிவசங்கர் வி. பி, Tritech Infosystems Pvt. Ltd. நிறுவனத்தின் Business Head நாச்சியப்பன் என். சி. டி, Unichem Industries Pvt. Ltd. நிறுவனத்தின் Managing Director காஜா மொஹிதீன், Samy Jose Boxing Academy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ரிச்சர்ட் கே. யூசுப் மற்றும் Executives Collaboration Pvt. Ltd. நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சி. எச். வில்சன் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஏற்பாட்டு குழுவில், Touchmark Descience நிறுவனத்தின் CEO பாரதிராஜா தங்கப்பளம், SARGUN Financial Services Pvt. Ltd. நிறுவனத்தின் CEO சர்குனன் தனிகைமாலி, மற்றும் Stemfunnels Marketing Agency நிறுவனத்தின் CEO திரு. ஹாட்லி ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்ட சுமார் 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு, இந்த மாநாடு அறிவுப் பகிர்வு, தொழில் வளர்ச்சி மற்றும் ஊக்கத்தை அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Continue Reading

Business

WPC – Women Professional Connect – ஆண்கள் தின விழா வெற்றி சந்திப்பு (Success Meet).

Published

on

சென்னை, நவம்பர் 29 – WPC ஆண்கள் தின விழா வெற்றி சந்திப்பு (Success Meet) சிறப்பாக நடைபெற்றது

சென்னை: பெண்கள் தொழில்முறை இணைப்பு WPC – Women Professional Connect கடந்த நாட்களில் நடத்திய சர்வதேச ஆண்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை முன்னிட்டு, நவம்பர் 29 அன்று சென்னையில் சிறப்பான Success Meet நடைபெற்றது.

இந்த சந்திப்பில், நிகழ்வின் சிறப்புகள், பெரும் வரவேற்பு, நடுவர் குழுவின் கருத்துகள் மற்றும் பங்கேற்ற தொழில் முனைவோரின் பங்களிப்புகள் அனைத்தும் பகிரப்பட்டன.

விழாவுக்கு WPC நிறுவனர் திருமதி ரேணுகா தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமான அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, தின இதிகை (Dina Idhigai) செய்தித்தாளிலிருந்து
• திரு. சதீஷ்குமார்,
• திரு. சக்திவேல்,
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். அவர்களின் பங்கேற்பும் வாழ்த்துகளும் நிகழ்வின் பெருமையை உயர்த்தின.

நிகழ்ச்சியின் முக்கிய பேச்சுப் புள்ளிகள்:
• ஆண்கள் தின விழாவின் சமூக தாக்கம்
• “லாப நோக்கம் vs எதிர்குறிக்கோள்” (Profitability V/S Purpose) என்ற தலைப்பு பெற்ற பெரும் வரவேற்பு
• ஆண் தொழில் முனைவோரின் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய WPC-யின் முன்னெடுப்பு
• பெண்கள் தலைமையில் ஆண்களை கௌரவிக்கும் விழா பெற்ற சமூக பாராட்டு.

நடுவர் குழு உறுப்பினர்கள் விழாவிற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்கள், உரையாடல்கள் மற்றும் நிகழ்வின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முழுவதும் உற்சாகம், நன்றி உணர்வு மற்றும் எதிர்கால இலக்குகளால் நிரம்பி இருந்தது. WPC அமைப்பு இதை தனது பயணத்தின் மேலும் ஒரு பெரும் மைல்கல் என அறிவித்தது.

நிகழ்வு நிறைவில், வருகிற ஆண்டுகளில் இன்னும் உயர்ந்த மட்டத்தில், புதிய சாதனைகளுடன் ஆண்கள் தின விழாவை கொண்டாடுவதற்கான திட்டங்களையும் WPC குழு பகிர்ந்தது.

இந்த Success Meet மூலம் WPC அமைப்பு சென்னையில் தனது சமூக, தொழில் மற்றும் ஊடக வலிமையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Continue Reading

Business

கிர்திலால்ஸ் குளோ’ வைரம் மற்றும் தங்க நகைக்கான பிரத்தியோக கிளை!

Published

on

கிர்திலால்ஸ் நிறுவனம் தற்போது திருப்பூரில் வைரம் மற்றும் தங்க நகைக்கான பிரத்தியோக கிளையை ஏப்ரல் 16, 2025 அன்று குளோ என்ற பெயரில் நிறுவியுள்ளது . இது இந்தியா முழுவதும் பரவி வரும் கிர்திலால்ஸ் நிறுவனத்தின் ஒரு புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது .

இந்த புதிய கிளை தொடக்கத்தின் மூலம், கிர்திலால்ஸ் நிறுவனம் தங்களின் அழகான, எடையற்ற மற்றும் பல்வேறு விதமான இயற்கை வைர நகைகளை, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான திருப்பூருக்கு கொண்டு வந்துள்ளது. பெண்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் பாரம்பரிய கைவினைத்திறனும், சமகால ஃபேஷன் உணர்வும் கொண்டவை.

“திருப்பூர் நகருக்கு ‘குளோ’ அனுபவத்தை கொண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தன் ஆற்றலும், படைப்பாற்றலும் மற்றும் புதுமையான ஃபேஷன் உணர்வுகளாலும் பிரசித்திபெற்றது,” என கிர்திலால்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் – பிசினஸ் ஸ்ட்ராட்டஜி திரு. சுரஜ் சாந்தகுமார் கூறினார்.

“இந்த தொடக்கம் வைர நகைகளை எளிதாகப் பெறக்கூடியதாக மாற்றும், எங்கள் மிகப்பெரிய நோக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது . சிறந்த வடிவமைப்பு, தரம் மற்றும் தினசரி நயமிக்க தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் விற்பனை மையம் மட்டும் அல்லாமல், பெண்கள் தங்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் நகைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சிறப்பான இலக்கிடத்தை உருவாக்குகியுள்ளோம்

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய நகரங்களில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ‘குளோ கிர்திலால்ஸ்’ விற்பனை மையங்களின் வரிசையில் திருப்பூர் மாவட்டம் புதியதாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Continue Reading

Trending