கோயம்பத்தூர்

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த அவிநாசி சாலை மேம்பாலம்!

Published

on

கோவை மாநகர் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை ஜி.டி.நாயுடு அவர்களின் மகன் ஜி.டி.கோபால் உடன் சேர்ந்து தமிழக முதல்வர் மு ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சரை கோவையின் மூத்த தொழில்துறையினர், தலைசிறந்த கல்வி குழும நிறுவனர்கள் சந்தித்து கோவைக்கு இத்தகைய மேம்பாலத்தை வழங்கிய அரசுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர் .கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர் எஸ்.மலர்விழி அவர்கள் முதலமைச்சருக்கு நன்றிகளை, வாழ்த்துக்களை தெரிவித்தார்.  ரூ.1791 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

இந்த மேம்பாலம் தமிழ் நாட்டின் மிக நீண்ட உயர்மட்ட மேம்பாலம் ஆகும். தமிழ்நாட்டில் முதன் முறையாக ஜெர்மன் டெக்னாலஜியான “சைனஸ் பிளேட் எக்பேன்சன் ஜாயிண்டு தொழில் நுட்பம்” பயன்படுத்தி அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம்.பாலத்துக்கும் மேலும், கீழும் பசுமை புல்வெளி அமைக்கப்பட்டிருக்கின்றது. சொட்டு நீர் பாசனம் மூலம் புல்வெளி அரங்கம் பராமரிக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாலத்தின் மூலம் கோவைஅவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Trending

Exit mobile version