Connect with us

Tech

இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாடு தமிழ்நாடு முழுவதும் விரைவில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள்

Published

on

சென்னை:
மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tech

குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் செயற்கை நுண்ணறிவு

Published

on

 

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் !

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக திகழ்கின்றன. இவை தனித்தனியாகவே மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் தாக்கம் மனித வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

பாரம்பரிய கணினிகள் “0” மற்றும் “1” எனும் இரண்டு நிலைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் “கியூபிட் (Qubit)” என்ற அடிப்படையைப் பயன்படுத்துகின்றன. ஒரு கியூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளை பிரதிபலிக்க முடியும். இதனால், கணக்கீடுகள் மிக அதிவேகமாக நடைபெறுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் (AI) தற்போதைய வரம்புகள்

இன்றைய AI அமைப்புகள் பெரும் தரவுகளை (Big Data) செயலாக்கும் திறன் பெற்றுள்ளன. எனினும், சிக்கலான கணித மாதிரிகள் அல்லது மிகப்பெரிய தரவுகளை குறுகிய நேரத்தில் தீர்க்கும் போது சில வரம்புகளைச் சந்திக்கின்றன.

குவாண்டம் + AI : இணைவு தரும் சக்தி

குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் AI இணைந்தால்:

மருத்துவ ஆராய்ச்சி : புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் விரைவில் கண்டறியப்படும்.

நிதி துறை : பங்கு சந்தை முன்னறிவிப்பு மற்றும் அபாய மேலாண்மை மிகவும் துல்லியமாக செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : வானிலை முன்னறிவிப்புகள் நம்பகமாக உருவாக்கப்பட்டு, இயற்கை பேரழிவுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எளிதாகும்.

சைபர் பாதுகாப்பு : தரவு குறியாக்கம் (Encryption) உடனடி முறையில் வலுப்படுத்தப்படும்.

எதிர்காலம் எப்படியிருக்கும்?

குவாண்டம் AI பரவலாக பயன்பாட்டிற்கு வரும் போது, மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் புதிய உயரங்களை எட்டும். மருத்துவம், அறிவியல், தொழில், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வேகமான முன்னேற்றம் நிகழும். இது மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிக்கலான உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வலுவான கருவியாகவும் அமையும்.

செயற்கை நுண்ணறிவும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் தனித்தனியாகவே அதிசயங்களை நி

கழ்த்துகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் புதிய புரட்சி மனித வரலாற்றின் திசையை மாற்றும். எதிர்காலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அதிசயங்களால் நிரம்பியதாக இருக்கும்.

 

ப. முத்து சுப்பிரமணியன்

இணை பேராசிரியர்

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்-14.

 

Continue Reading

Tech

மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் பியூர் நிறுவனம்

Published

on

ஹைதராபாத் நகரத்தை தலைமையிடமாக கொண்டு மின்சார 2 சக்கர வாகனங்களையும், அதற்கான நவீன பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிவரும் பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு அமைப்புகளை ‘பியூர்-பவர் ஹோம்’ மற்றும் ‘பியூர்-பவர்’ கமர்சியல் என தனித்தனி தயாரிப்புகளாக இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

‘பியூர்-பவர்’ கமர்சியல் எனும் தயாரிப்பு மூலம் அதிகம் மின்சாரம் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் அமைப்புகள் எந்தவித இடைநிற்றலும் இன்றி இயங்கும். மேலும் இதனால் தொழில்நிறுவனங்கள் தங்களின் மின்சார பயன்பாட்டை நிலைப்படுத்தவும், ‘பீக் லோட்’ கட்டணங்களையும் பெருமளவு குறைத்திடவும் முடியும்.

‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் மிகப்பெரும் அளவில் மின்சார ஆற்றலை சேமித்துவைக்க கூடிய அதிநவீன பேட்டரிகளை கொண்டவை என்பதால் அதனால் மின்சாரத்தை அதிகம் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த கட்டமைப்பில் 5ம் தலைமுறை மின் அமைப்புகள் உள்ளன. இதில் பி.சி.எம். (Nano Phase Change Material) எனும் தனித்துவம் கொண்ட ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த தயாரிப்பில் வெப்பநிலை மேலாண்மை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இதனால் இந்த தயாரிப்புகளின் செயல்பாடு மற்றும் வாழ்நாள் பல காலத்துக்கு நீடிக்கும்.

குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல், 100% தடையிலாதுஇயங்குவதை உறுதி செய்ய, இதில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும். மேலும் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் முன்பாகவே அறிந்துகொள்ள முடியும்.

கோவையில் இந்த தயாரிப்புகளை பியூர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி மற்றும் நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுராம் அர்ஜுனன் உடன் இனைந்து அறிமுகம் செய்துவைத்தார்.

இதுகுறித்து டாக்டர் நிஷாந்த் கூறுகையில், “இந்திய தொழில்நிறுவனங்களின் மின்சாரம் தொடர்பான முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பியூர் நிறுவனத்தின் குறிக்கோள். அதை மனதில் வைத்தே பியூர் பவர்-ரை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான மூலதன செலவு மற்றும் செயல்பாட்டு செலவு குறையும் படி உருவாக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டார்.

‘பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு அதன் சேமிப்பு அளவை 25 KVA முதல் 100 KVA வரை அதிகரிக்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி ஒரு தொழில்நிறுவனத்தில் உள்ள மின்சாரம், டீசல் ஜெனெரேட்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்துடனும் தானாகவே இனைந்து செயல்படக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட அமைப்பாக இது இருப்பதால் ஒரு புறம் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு அவசியமான, மின்சாரம் அதிகம் இழுக்கக்கூடிய கருவிகளை தொடர்ந்து இயக்கிக்கொள்ள முடியும், மற்றொரு பக்கம் மின்சாரத்தை சேமித்துக்கொண்டு இருக்கவும் முடியும்.’பியூர்-பவர்’ கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்கள் ‘பீக் ஹவர்’ இல்லாத நேரங்களில் மின்சாரத்தை சேகரித்து வைத்து கொண்டு, பீக் ஹவர் நேரங்களில் சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மின் கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவு மிச்சமாகும்.

டாக்டர் ரகுராம் அர்ஜுனன் பேசுகையில், “நமது நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பான ‘பியூர் பவர்’, வணிக செயல்பாடுகளில் இதற்கு முன்பு நாம் காணாத மாற்றங்களையும், அந்த நிறுவங்களுக்கு கணிசமான, மிகவும் தேவையான மின் கட்டண சேமிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வகையான புதுமை படைப்பு” என பாராட்டிப் பேசினார்.

பியூர் நிறுவனம் தொழில்நிறுவங்களுக்கு மட்டுமில்லாது இல்லங்களுக்கு தேவையான மின் சேகரிப்பு தயாரிப்புகளை பியூர் பவர் ஹோம் என்ற பெயரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Tech

87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

Published

on

2021 ஜூலை 5 முதல், 2023 பிப்ரவரி 15 வரை தயாரிக்கப்பட்ட |’S PRESSO’ மற்றும் ‘EECO’ ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், 87,599 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

ஜூலை 5, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023 க்கு இடையில் குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் ஸ்டீரிங்க் இணைப்பில், பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் விற்பனையகமே தொடர்புகொண்டு கார்களை திரும்ப பெற்று, ஆராய்ந்து பழுதாக வாய்ப்புள்ள பாகத்தை எவ்வித கட்டணமின் மாற்றித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

மாருதி 2019 இல் எஸ்-பிரஸ்ஸோவை அறிமுகப்படுத்தியது. லிட்டருக்கு 25.3 கிமீ வரை எரிபொருள் செயல்திறனை வழங்கும் ஐடில்-ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் 1-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2022 ஆம் ஆண்டில், மாருதி Eeco MPV இன் புதிய பதிப்பை ரூ. 5.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. புதிய Eeco 5 இருக்கை கட்டமைப்பு,

7 இருக்கைகள் இதில் அடங்கும் .

Continue Reading

Trending