Connect with us

Sports

தொடந்து நாலாவது வெற்றிப் பெற்ற டெல்லி அணி கேல் ராகுல் அதிரடி

Published

on

வியாழக்கிழமை (ஏப்ரல் 10) பெங்களூருவில் உள்ள M. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்று ஆர்சிபி அணிக்கு எதிராக பந்துவீச டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், சால்ட் ரன்-அவுட் ஆன பிறகு, ஆர்சிபி அணி சற்று தடுமாற அறபித்தது . டெல்லி பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி 163 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இறுதியில் டிம் டேவிட் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து தனது அணியைசரிவில் இருந்து காப்பாற்றினார்.

பின்னர் 164 ரன்கள் இலக்காக கொண்டு காலம் இறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் தடுமாற்றினாலும் , KL ராகுல்ன் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது ராகுல் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார் .

இந்த சீசனின் ஐபிஎல்லில் இதுவரை தோற்காத அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிடல் அணி பெற்றுள்ளது .

அதே நேரத்தில் ஆர்சிபி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி ஆர்சிபி இரண்டு சொந்த மைதான ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RCB : 163/7 (20.0 overs)

Phil Salt 37 (17) |  Tim David  37 (20) 

 Kuldeep Yadav 2/17 (4) |  Vipraj Nigam 2/18 (4)

DC : 169/4 (17.5 overs) 

KL Rahul  93 (53) |  Tristan Stubbs 38 (23)

Bhuvneshwar Kumar  2/26 (4)  | Suyash Sharma  1/25 (4)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி! – சிராஜ், பும்ரா, ராகுல் அசத்தல் !

Published

on

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக டேகனரைன் சந்தர்பால் – ஜான் கேம்ப்பெல் ஜோடி களமிறங்கி மட்டையைச் சுழற்றினர். இதில் டேகனரைன் சந்தர்பால் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல் மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்ப்பெல் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு களத்தில் இருந்த அலிக் அதானாஸ் – பிராண்டன் கிங் ஜோடியில் பிராண்டன் கிங் 13 ரன்னிலும், அலிக் அதானாஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் 12 ஓவரில் 42 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது தவித்தது வெஸ்ட் இண்டீஸ். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் – ஷாய் ஹோப் அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். அடுத்த 10 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்த ஜோடியில்  ஷாய் ஹோப் 26 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 32 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய சிராஜ் 4 விக்கெட்டையும், பும்ரா 3 விக்கெட்டையும், குலதீப் 2 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

 

இந்தியா பேட்டிங்

தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல் ராகுல் மட்டையைச் சுழற்றி வருகிறார்கள்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பின்வருமாறு:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ்: டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஜேடன் சீல்ஸ்.

நேரலை ஒளிப்பரப்பு 

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அதன் இணைய பக்கத்தில் நேரலையில் பார்த்து மகிழலாம்.

Continue Reading

Sports

ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியா.

Published

on

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தனது 9வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்த தொடரில் இரு அணிகளும் பல முறை மோதியுள்ள நிலையில், இந்தியா மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபித்தது. குழு சுற்று, சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டி என மூன்றிலும் இந்திய அணி ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை தகர்த்தது.

இந்த வெற்றி மூலம் ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா தனது ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியதோடு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வீரர்களின் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் திறமைகள் ஒருங்கிணைந்த ஆட்டமாக வெளிப்பட்டு, இறுதியில் பட்டம் இந்தியாவுக்கு சென்றது.

Continue Reading

Sports

IND vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – 3 தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

Published

on

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதிய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றிருப்பது மாநில ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளங்கி வந்த ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இத்தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக, முதல் நிலை விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழக வீரர் நாராயண ஜெகதீசனுக்கும் இடம் கிடைத்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஜெகதீசன், சமீபத்திய துலீப் போட்டியில் முதல் இன்னிங்சில் 198 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் குவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 64 ரன்கள் எடுத்திருந்தார். அவரின் சிறப்பான பார்மை கருத்தில் கொண்டு இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சனும் அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிராக அவர் 73 ரன்கள் அடித்திருந்தார். இதனால் செட்ஜர் புஜாராவின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனுபவம் வாய்ந்த ஆஃப்ஸ்பின்னர் ஆர். அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்ப உள்ளார். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள் – நாராயண ஜெகதீசன், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் – ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

Continue Reading

Trending