Connect with us

Sports

சேட்டை செய்த சேட்டன்! அதிரடி சதம் ! இந்தியா அபார வெற்றி!

Published

on

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 9 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகள் விருதை வென்றார். டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 202 ரன்கள் எடுத்து. பின்னர் பெரிய இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரங்களுக்கு அணைத்து விக்கட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி , ரவி பிஷ்ணோய் தலா 3 விக்கட்டுகளையும் அவ்ஸ் கான் 2 விக்ட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

2வது ஒருநாள் போட்டி – இந்திய அணியை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!

Published

on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய இருவரும் சதம் விளாசினர். கெய்க்வாட் 105 ரன்களிலும், கோலி 102 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 66 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் யான்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

தென்னாப்பிரிக்க அணியின் குயிண்டன் டிகாக் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து,  ஏய்டன் மார்க்கரம் உடன் கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தார். இதில், பவுமா 46 ரன்களில் அவுட் ஆனார். எய்டம் மார்க்கரம் 110 ரன்களிலும், மேத்தீவ் பிரிட்ஸ்க்கி 68 ரன்களிலும் வெளியேறினர். மார்க்கோ ஜான்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 49.2 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் கார்பின் போஷ் 29 ரன்களிலும், கேசவ் மகாராஜ் 10 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

Continue Reading

Sports

இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published

on

ராஞ்சி: Nov, 30 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்தது. விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை குவித்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் கடைசி விக்கெட் வரை போராடி இந்திய ரசிகர்களுக்கு “மரண பயத்தை” காட்டினர். இறுதியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த ரோஹித் சர்மா 57 ரன்கள் மற்றும் விராட் கோலி 135 ரன்கள் சேர்த்து, ஜோடியாக 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்து அசத்தியது.

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, விராட் கோலி மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார்.
கேப்டன் கே.எல்.ராகுல் தனது பங்குக்கு 56 பந்துகளில் 60 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அனைவருமே ரன்களை வாரி வழங்கினர்.

350 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் ரிஜான் ரிக்கல்டன் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் டக்-அவுட் ஆகினர். அர்ஷ்தீப் சிங் மார்க்ரமை (7) வெளியேற்ற, 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியது.

மிரட்டிய ஜான்சன் – பிரீட்ஸ்கே கூட்டணி
3 விக்கெட்களுக்கு பின் டோனி டி சோர்ஸி 39 ரன்கள் சேர்த்தும், டெவால்ட் பிரேவிஸ் 37 ரன்கள் சேர்த்தும் ஆகியோர் அணியை மீட்டனர். ஆனால், 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இணைந்த மார்கோ ஜான்சன் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி ஆட்டத்தையே மாற்றியது.

குறிப்பாக மார்கோ ஜான்சன் இந்திய பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். 39 பந்துகளில் 70 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். மறுமுனையில் பிரீட்ஸ்கே 72 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தபோது, இந்திய அணிக்குத் தோல்வி பயம் காட்டியது.

பதற்றம் அதிகரித்த நேரத்தில் பந்தை கையில் எடுத்த குல்தீப் யாதவ், ஒரே ஓவரில் ஜான்சன் மற்றும் பிரீட்ஸ்கே என இருவரையும் வீழ்த்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அவர் மொத்தம் 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

விடாமல் போராடிய கார்பின் போஷ்
முக்கிய விக்கெட்டுகள் விழுந்தாலும், கடைசி நேரத்தில் எட்டாம் வரிசை வீரர் கார்பின் போஷ் தனி ஆளாகப் போராடினார். 51 பந்துகளில் 67 ரன்கள் விளாசிய அவர், கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றார். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா.

கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கார்பின் போஷ் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

Continue Reading

Sports

தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இலக்கை நோக்கி செல்லும் மாநில சதுரங்க சங்கம்!

Published

on

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க (செஸ்) போட்டிகள் 2025-26, கோவையில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் வெள்ளிக்கிழமை (14.11.25) தொடங்கியது. இந்த ஐந்து போட்டிகளும் டிசம்பர் 22, 2025 வரை நடைபெற உள்ளன.இது பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேட்டியளித்த சக்தி குழுமத்தின் தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவருமான எம். மாணிக்கம் கூறுகையில்:

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்ற போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பியதன் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் போட்டிகளை நடத்தி வருகிறது.

சர்வதேச மாஸ்டர் ஆவதற்கு 2400 புள்ளிகள் மற்றும் 3 நார்ம்கள் (தகுதி) தேவை. இந்த நார்ம்களைப் பெறுவதற்கான வாய்ப்பை தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரரகள் உள்நாட்டிலேயே பெற வசதியாக, அவர்கள் மிக குறைந்த செலவில் இந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இதற்காக முன்னணி சர்வதேச வீரர்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்து நமது வீரர்களுடன் போட்டியிட வைத்து வருகிறோம். இதற்கான செலவுகளைச் சங்கம் ஏற்பதன் மூலம், உள்ளூர் வீரர்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் (உதாரணத்திற்கு ரூ.3 லட்சம் செலவாகும் இடத்தில் ரூ.10,000 மட்டும்) உலகத் தர நிகழ்வுகளில் போட்டியிட முடிகிறது.

இதுவரை 35 போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 22 ‘சர்வதேச மாஸ்டர் நார்ம்கள்’ பெறப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 45 சர்வதேச மாஸ்டர்கள் உள்ளனர். அடுத்த 4-5 ஆண்டுகளில் 100 சர்வதேச மாஸ்டர்கள் என்ற இலக்கை எட்ட முடியும்.

இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சக்தி குழுமம் கோவையில் நடக்கும் இந்த ஐந்து போட்டிகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஆகாஷ், ஸ்ரீ ஹரி, ஹர்ஷத் உள்ளிட்ட வீரர்கள் இந்தப் போட்டிகள் மூலம் சர்வதேச நார்ம்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொருளாளர்ஆர். சீனிவாசன்; துணைத் தலைவர் ஆர். அனந்தராம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

Continue Reading

Trending