கோயம்பத்தூர்

வைரலான “ஓ ரிம்தியா” பாடல்!

Published

on

இயக்குனர் அருண்காந்த் இசையில் விங்க் மியூசிக் ,ஆப்பிள் மியூசிக் ஜியோ சாவான், அமேசான் மியூசிக், காண போன்ற செயலிகளில் “ஓ ரிம்தியா” என்ற காதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையைப்பாளர் என பலக் கலைகளில் தனது கை வண்ணத்தை, ஆபரேஷன் ஜூ ஜூ பி, இந்த நிலை மாறும், கோகோ மாகோ போன்ற படம் மூலம் திரையில் வெளிப்படுத்திய அருண்காந்த் தற்போது, ஓ ரிம்தியா என்ற புதிய ஆல்பம் பாடலை செயலி(apps) மூலம் வெளியிட்டு பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

“ஓ ரிம்தியா ஏன் போகிறாய், என் நெஞ்சினை ஏன் கொள்கிறாய்! என ஆரம்பிக்கும் இந்த பாடல் நம் மனதையும் மறக்காமல் கொள்ளை அடித்துச் செல்கிறது . நம் காதுக்கு இனிமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது அருண்காந்தின் மெல்லிய இசை. ” மழையில்லா சாரல் இங்கு மனம் முழுவதும் நனைந்தது, இசையில் காதல் இணைந்தது, காதல் கவிதை மலர்ந்தது …” போன்ற வரிக்களில் பாடலாசிரியர் அஜய் நம்மை அவரது வரிகள் மூலம் நனைய வைக்கிறார் என்பது உண்மையே! . ரோஷன் செபாஸ்டியன் குரலில் காதுகளுக்கு இதமாகவும், காதலுக்கு மருந்தாகவும் அமைந்திருக்கிறது ஓ ரிம்தியா என்ற பாடல் .

இந்த பாடலை விங்க் மியூசிக் ,ஆப்பிள் மியூசிக் ஜியோ சாவான் அமேசான் மியூசிக், காண ஆகிய செயலிகளில் கேட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்தப் பாடலை கேட்டுக் மகிழலாம் !

Now Streaming on Wynk Music, Apple Music, Jio Saavan, Amazon Music, Gaana & More.

https://bit.ly/OhRimthiyaWynk

 

Click to comment

Trending

Exit mobile version