Connect with us

நிகழ்ச்சிகள்

கோவையின் மிகப்பெரிய மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம்!

Published

on

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது .  இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த  மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும்.  2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம். பிரதாப், ஐ.ஏ.எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார். பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம்.

ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு 5 கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு  ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ. 25,000 ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 ஆகும், அதேபோல 10 கி.மீ திறந்த பிரிவில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வருபவர்களுக்கான பரிசுத் தொகையானது முறையே ரூ. 15,000 ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 ஆகும்.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெடரன்களுக்கு, அரை மாரத்தான் ஓட்டத்திற்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு பரிசுத் தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகும்.  10 கி.மீ ஓட்டத்திற்கு 7,500 மற்றும் 5,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. வி. நௌஷாத், தனது உற்சாகத்தைத் தெரிவித்து கூறுகையில் “கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுக்கு ஆதரவளிக்க கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னுடன் கைகோர்த்து 11 வது பதிப்பு கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த கூட்டிணைவு நிரூபிக்கிறது. உடல் திடம் மற்றும் நல்வாழ்வுக்கான நடைப்பயிற்சிக்கு ஆதரவாளரான வாக்கரூ, எங்கள் பிராண்டின் நோக்கப்பார்வையான (Point of View – POV) – “Walk With Walkaroo,” -க்கு இணங்க, இந்த நிகழ்வில் கூட்டு சேருவதில் பெருமிதம் கொள்கிறது.

பல ஆண்டுகளாக, நேசத்துக்குரிய நினைவுகளை உருவாக்கி பங்காளர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவைப் பெற்று, கோயம்புத்தூர் மாரத்தான் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக வளர்ந்துள்ளது. நாங்கள் 11 வது பதிப்பைத் தொடங்கும்போது, எங்கள் பணியானது பந்தயத்திற்கு அப்பாற்பட்டு புற்றுநோய்க்கு எதிரான போராக முன்னேறுகிறது. புற்றுநோயைத் தடுப்பது, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்வு முயல்கிறது. எங்கள் தேசிய பிரச்சாரத்தின் கருப்பொருளான “#WalkindiaWalk” ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்கான வாக்கரூவின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. வாக்கரூவானது, உடற் திடம் மற்றும் நல்வாழ்வுக்காக நடைபயிற்சி செய்வதை உறுதியாக நம்புகிறது, மேலும் இந்த மாரத்தான் மூலம், புற்றுநோய்க்கு எதிரான போருக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என்று கூறினார்.

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் டி.பாலாஜி கூறுகையில் “கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி ஒரு முக்கிய நிகழ்வாகவும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷ னின் பிராண்டு தூதராகவும் மாறியுள்ளது. கோவிட் நெருக்கடிகள் இருந்த சமயத்திலும், நாங்கள் 2 மெய்நிகர் மராத்தான்களை நடத்தி, இடைவெளி இன்றி அதன் 11 வது பதிப்பில் நுழைந்துள்ளோம், இது கோயம்புத்தூர் நகருக்கு பெருமை சேர்த்துள்ளது. நகரின் குடிமக்கள் மற்றும் நகரத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாரத்தான் ரன்னர்களும் கூட இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நிகழ்ச்சிகள்

லட்சத்தை தாண்டிய தங்கம் விலை! குடும்ப பட்ஜெட்டில் சுமை – வருத்தத்தில் இல்லத்தரசிகள்

Published

on

நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி, இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,00,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ஏற்றம் காணும் தங்க விலை, பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை பல ஆயிரம் ரூபாய்கள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், புவியியல் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும், மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக வாங்கி சேமித்து வருவதும் விலை ஏற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Continue Reading

நிகழ்ச்சிகள்

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Published

on

கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி   இந்திய தொழில்கள் கூட்டமைப்பு   உடன் இணைந்து DX-EDGE (Digital Excellence for Growth and Enterprise) எனப்படும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை வளாகத்தில் அறிமுகப்படுத்தியது. இந்திய ஒப்பந்தப் பத்திரம் (MoU) கையெழுத்து நிகழ்ச்சி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான மலர்விழி அவர்கள் மற்றும் அறங்காவலர் ஆதித்யா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. MoU பரிமாற்றத்தை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன் அவர்கள் முன்னிலையிலிருந்து மேற்கொண்டார். ஒப்பந்தத்தில் கல்வி குழும தலைமை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சி.ஐ.ஐ. கோயம்புத்தூர் மண்டல முன்னாள் தலைவர் கணேஷ்குமார் பேசுகையில், நமது நாட்டில் சிறு, குறு துறைக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது, வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். பொறியியல் பட்டதாரிகள் புதுமை சார்ந்த மனநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம், சி.ஐ.ஐ. யின் துணை இயக்குனர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ்,DX-EDGE’ன் முதன்மை ஆலோசகர் மதுவசந்தி உள்ளிட்டோர், இவ்வமைப்பின் நோக்கத்தை விளக்கினர்.

நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ-., துணை இயக்குனர் ஷிம்னா, கோயம்புத்துர் மண்டல நிர்வாக அதிகாரி சாய்சரண், முதல்வர் பொற்குமரன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Continue Reading

நிகழ்ச்சிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

Published

on

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது.

இந்த புது பிரிவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் மற்றும் பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு , மற்றும் பாலி-ட்ராமா எனும் ஒரே நபருக்கு உடலின் பல இடங்களில் ஏற்பட்ட ஆபத்தான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு என்.ஏ.பி.ஹெட்ச். (மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் சர்வதேச தரத்துடன் ஒப்பிடக்கூடிய உயர்-துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும்.

இந்த 24 மணிநேர சேவை என்பது 10க்கும் மேற்பட்ட அவசர மருத்துவர்கள் மற்றும் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சையில் பயிற்சி பெற்ற 40 அவசர செவிலியர்கள் உட்பட, ஒருங்கிணைந்த, பல்துறை அவசர சிகிச்சைக் குழுவால் இயக்கப்படுகிறது.

இத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மேம்பட்ட லைஃப் சயின்ஸ் ஆம்புலன்ஸ் நெட்வொர்க் மூலம், மருத்துவமனைக்கு நோயாளி அழைத்துவரப்படும் போதே அவரின் பாதிப்பு நிலையின் தீவிரத்தன்மையை சீராக்க பிரத்தியேக மருத்துவ வசதிகள் மற்றும் கண்காணிப்பு அம்சங்கள் இடன்பெற்றுள்ளன.

இந்த புதுமையான அமைப்பு, அவசர சிகிச்சைப் பிரிவில் அமைந்துள்ள இம்மருத்துவமனையின் அதிநவீன ஸ்மார்ட் கண்காணிப்பு மையம் மூலம், நோயாளிகளை நிகழ்நேர கண்காணிப்பில் வைத்திருக்கும்.
இந்த ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உள்ளே, நோயாளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கான மூன்று அடுக்கு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நவீன மறுஉயிரூட்டல் அறைகளில் சி.டி., எம்.ஆர்.ஐ., மற்றும் டிஜிட்டல் இமேஜிங்கிற்கான வசதிகள் ஆகியவை உள்ளன. இது வேகமாக பாதிப்பை கண்டறியவும், சிகிச்சையில் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

Continue Reading

Trending