Connect with us

அரசியல்

ஒரு இயக்கத்தின் அச்சாணி என்பது உண்மையான தொண்டர்கள் தான்- டிடிவி தினகரன்

Published

on

இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை 90 நாட்களில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தபோது, இவர்களுக்கும் உண்மை தெரிந்திருக்குமோ என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விசாரணையைக் கிடப்பில் போட்டு வைத்துள்ளதன் மூலம், இவர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்களோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் சட்டப்பேரவையில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் எனப் பேசிய திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று வரை அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தாதது ஏன்? யாருக்கோ உதவும் நோக்கில் விசாரணையைக் கிடப்பில் போட்டுள்ளதாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளசந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் விசாரணையை மேம்போக்காக நடத்திவரும் தி.மு.க. அரசைக் கண்டித்து நம் உள்ள உணர்வுகளை இந்தஆர்ப்பாட்டத்தின் மூலம் நாம் வெளிப்படுத்தினோம்.

உண்மையான அச்சாணி  தொண்டர்கள் தான் : 

தேனி மாவட்டத்தில் நண்பர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து நானும் தி.மு.க. அரசிற்கு கண்டனத்தைப் பதிவு செய்தோம். அதுபோலவே தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் கண்டன முழக்கங்களைஎழுப்பியிருக்கிறோம். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் ஓரணியாக ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்ற நமது உணர்வும், ஒன்றுபட்டால் உறுதியாக வெல்லலாம் என்ற திரு.ஓ.பன்னீர்செல்வம்
அவர்களது உணர்வும், ஒன்று சேர்ந்து உண்மைத் தொண்டர்களை அரவணைத்து, முதல் நிகழ்வாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இன்று நாம் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்ற உடனேயே, அ.தி.மு.க.வை அபகரித்து வைத்திருக்கும் சுயநலக் கும்பலிடமிருந்து அதிகாரப்பூர்வ குரல் ஒன்று வெளிப்பட்டது. அவர் அச்சாணிப் பற்றியெல்லாம் பழமொழியாக நேற்றைய தினம் உளறியிருந்தார். உண்மையில், ஒரு இயக்கத்தின் அச்சாணி என்பது உண்மையான தொண்டர்கள்தான். பணத்துக்கும், பதவிக்கும் விலைபோகாமல் இறுதிவரை உறுதியுடன் நிற்கும் எண்ணம் கொண்ட அந்த உண்மைத் தொண்டர்களே அச்சாணி.

இது புரியாதவர்கள், உண்மை, நேர்மை, விசுவாசம் என்று எதையும் அறியாதவர்கள், துரோகத்தையே சுவாசமாக கொண்டவர்கள் அச்சத்தில் வாய்க்கு வந்ததை உளறத்தான் செய்வார்கள். அவர்கள் பேசுகிறார்கள் என்றாலே நம்முடைய நேர்மையான செயல் அவர்களை உறுத்துகிறது என்றுதான் அர்த்தம்.  விசுவாசம் என்றாலே என்னவென்று தெரியாத துரோக சிந்தனையாளர்களின் கருத்துக்களை புறக்கணிப்போம். பணம், பதவி மட்டுமே பிரதானம் என்று நினைப்பவர்கள், கால வெள்ளத்தில் காணாமல் போவார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனால், நாம் அடைய வேண்டிய இலக்கையும், சாதிக்க வேண்டிய சாதனையையும் மட்டுமே மனதில் நிறுத்தி நமது பயணத்தை தொடருவோம். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை மீண்டும் அமைத்திட, அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் கரம் கோர்த்து அடுத்தடுத்த களங்களுக்கு ஆயத்தமாவோம்.

தீவிரமாக விசாரணையை மேற்கொள்ளவேண்டும் : 

கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் என்பது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களை மனரீதியாக பாதித்திருக்கும் நிகழ்வு. இந்த விஷயத்தில் காவல்துறையை கையில் வைத்துள்ள தி.மு.க. அரசு தீவிரமாக விசாரணையை மேற்கொள்ளவேண்டும். கொலை, கொள்ளை அதனை தொடர்ந்து நடைபெற்ற தற்கொலை மற்றும் விபத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத்தரவேண்டும். இல்லையேல், குற்றவாளிகளுடன் பேரம் பேசி அவர்களை காக்க தி.மு.க. அரசு முயல்கிறதோ என்ற மக்களின் கருத்தை தி.மு.க. சுமக்க வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

தளபதி முருகேசன் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

Published

on

சட்டசபை தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான திமுக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி மாவட்டம் முழுவதும் நடத்திவருகிறது . கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு 20ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி சூலூர் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி 98,99 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது இதில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சூலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் வைஸ் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி நவீன், தனபால், பிரவீன், கிளைச் செயலாளர் சண்முகம், கருப்புசாமி, முருகேஷ்,BLA2 துரை (எ) சதாசிவம், மனோஜ், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேபோல 18ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செட்டிபாளையம் பேரூராட்சி பாகம் எண் 177, சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் இடையர்பாளையம் ஊராட்சி பாகம் எண் 269 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Continue Reading

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Published

on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்கிற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் கடந்த 14ஆம் தேதி மீனாட்சி மஹால், மகாலிங்கபுரம் ரவுண்டானா, பொள்ளாச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி கே எஸ் சபரி கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில் வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பொள்ளாச்சி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

அரசியல்

நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேச்சு

Published

on

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பூத் கைமுட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் பேசிய வேலுமணி : நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் பொன்விழா கண்ட இயக்கம், 31 ஆண்டுகள் ஆளும்கட்சி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே பெருமை .தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்களை தந்தது அதிமுக தான் , காவேரி நீர் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை உள்பட தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களைப் பெற்றுத்துள்ளோம்.  கோவை நகரின் போக்குவரத்து நெரிசல், தொழில் வளர்ச்சி, மக்களின் பயண வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அப்போது , கோவைக்கு மெட்ரோ திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் பெற்று, பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் , கோவைக்கு அதிமுக அரசு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது மிக முக்கியமான சாலைகளை விரிவுபடுத்தி விபத்துகளை தடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து உயிரை காப்பாற்றியுள்ளோம். விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கின்றது. அதில் 210 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள், , மற்றும் வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

Trending