Connect with us

இந்தியா

காமராஜர் 120வது ஆண்டு விழா! வலங்கைமான் வட்டார காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம் !

Published

on

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது ஆண்டு தினவிழா முன்னிட்டு ஆவூர் கடைவீதியில் காமராஜர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வலங்கைமான் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆவூர் அரசு மேல்நிலை பள்ளி நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றத்தை பாராட்டி கல்வி வளர்ச்சி தினத்தில் நற்சான்றிதழ் பரிசுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ் திருவாரூர் மாவட்ட தலைவர் திரு S.M.B. துரைவேலன் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளார் திரு அன்பு.வே.வீரமணி அவர்கள் முன்னிலையில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் திரு M.N.ராமலிங்கம் அவர்கள் மற்றும் சேவதாள மாவட்ட தலைவர் திருK.பழனிவேல் அவர்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளார் திரு A.ரஹிம் அவர்கள் நன்னிலம் சட்டமன்ற சேவதாள பொறுப்பாளார் திருG.ஆறுமுகம் அவர்கள் வட்டார துணை தலைவர் திரு H.சாதிக் அவர்கள் வட்டார பொதுச்செயலாளார் திரு S. பிரபு வெங்கடேஷ் அவர்கள் ஆவூர் இளைஞர் காங்கிரஸ் திரு M. ஹாஜா நஜீபுதீன் அவர்கள் மாநில மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளார் திரு R.புவனேஸ்வரன் அவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க்கிறனார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்தியா

கோவையிலிருந்து அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை வழங்கவுள்ளது இண்டிகோ நிறுவனம்!

Published

on

அடுத்த மாதம் முதல் கோவையிலிருந்து குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரத்துக்கு நேரடி விமானசேவையை இண்டிகோ விமான நிலையம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அக்டோபர் 26ம் தேதி (26.10.25), இந்த சேவை துவங்கப்படும். இது இந்த 2 நகரங்களுக்கு இடையே வழங்கப்படும் முதல் இடைநில்லா சேவையாக பார்க்கப்படுகிறது. வாரம் 4 நாட்கள் ( செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு) இந்த சேவைகள் வழங்கப்படும்.

இந்நாட்களில் இந்த விமானம் கோவையிலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத்துக்கு இரவு 8.10 மணிக்கு வந்து சேரும். அதேபோல அகமதாபாத்தில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 11:20 மணிக்கு வந்து சேரும்.

இந்த அறிவிப்பை வரவேற்பதாக மேற்கு தமிழகத்தின் முன்னணி தொழில்துறை அமைப்பான ‘கொங்கு குளோபல் ஃபோரத்தின் (Kongu Global Forum) இயக்குனர் சதிஷ் கூறினார்.

கோவை – அகமதாபாத் இடையேயான நேரடி விமான சேவை என்பது அடிக்கடி இந்த 2 நகரங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கும், வர்த்தக ரீதியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அவர் கூறினார்.
அதே சமயம் கோவையிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வுக்கு நேரடி விமான சேவை அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம் என அவர் கூறினார்

Continue Reading

இந்தியா

கோவை நெடுஞ்சாலை பகுதிகளில் வருகிறது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் !

Published

on

மின்சார வாகனப் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார விநியோக சேவையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களிடம் மத்திய அரசு, நெடுஞ்சாலை பகுதிகளின் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்குக் குறைந்தது 1 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தையாவது  அமைக்கவேண்டும் என சில ஆண்டுகளாகவே அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் முதல் கட்டமாக 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது என இன்று தகவல் வெளியானது.

முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் இவை அமையும் எனத் தெரியவருகிறது. இதற்காக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கத் திட்டம் உள்ளதாக இன்று தகவல் வெளிவந்தது.

ஏற்கனவே கோவை மாநகரின் 10 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க கோவை மாநகராட்சி தயாராகி வரும் நிலையில், நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நிலையங்கள் அமைந்தால் அது மின்சார வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த பணிகள் விரைந்து நடைபெறவேண்டும் என்பதே மின்சார வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Continue Reading

Tech

இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாடு தமிழ்நாடு முழுவதும் விரைவில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள்

Published

on

சென்னை:
மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Continue Reading

Trending