Connect with us

விளையாட்டு

WWE நட்சத்திர வீரர் ஜான் சீனா ஓய்வு பெற்றார்!

Published

on

அமெரிக்காவில் உலகளவில் பெரும் புகழ் பெற்ற மல்யுத்தப் போட்டிகளில் ஒன்றான WWE-யின் பிரபல நட்சத்திர வீரர் ஜான் சீனா, இன்று நடைபெற்ற தனது கடைசி மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு, அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

இந்த முக்கியமான இறுதிப் போட்டியில், ஜான் சீனா கன்தர் (Gunther) என்பவரை எதிர்த்து மோதினார். கடுமையான போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டேப் அவுட் (Tap Out) முறையில் ஜான் சீனா தோல்வியடைந்தார். இதனையடுத்து, ரசிகர்களின் கைதட்டல்களும் உணர்ச்சி வெள்ளமும் மத்தியில் அவர் மல்யுத்த அரங்கில் இருந்து விடைபெற்றார்.

23 ஆண்டுகளாக WWE மல்யுத்த உலகில் சிறப்புடன் விளங்கிய ஜான் சீனா, தனது விளையாட்டு வாழ்க்கையில் 17 முறை உலக சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். WWE வரலாற்றில் மறக்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழும் ஜான் சீனா, தி ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்ட பல ஜாம்பவான்களுடன் நினைவில் நிற்கும் போட்டிகளில் மோதியுள்ளார்.

மல்யுத்த வீரராக மட்டுமல்லாமல், ஒழுக்கம், உழைப்பு மற்றும் மரியாதை (Respect) என்பவற்றை தாரகமந்திரமாக கொண்டு செயல்பட்ட ஜான் சீனா, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார். அவரது ஓய்வு அறிவிப்பு WWE ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் சீனாவின் ஓய்வுடன், WWE மல்யுத்த உலகில் ஒரு பொன்னான காலகட்டம் நிறைவு பெற்றதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விளையாட்டு

மாநில அளவிலான 12வது குழந்தைகள் சதுரங்கப் போட்டி – பிப்ரவரி 15ல் நடைபெறுகிறது – சென்னை

Published

on

சென்னை, ஜனவரி:

டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் 12வது மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி – 2026, வரும் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை, ஷோலிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி TNSCA அனுமதி பெற்றதாகும்.

7, 9, 11, 13 வயது பிரிவுகளில் மாநிலம் முழுவதும் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளராக டென் டென் செஸ் அகாடமி செயலாளர் திரு. எஸ்.ஜே. அமர்நாத் செயல்படுகிறார்.

மேலும் விவரங்களுக்கு +91 84382 21095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

விளையாட்டு

சிறப்பாக நடைபெற்ற எம்எஸ்டி ரெட் டிராகன் சீசன் 5 கிரிக்கெட் போட்டி!

Published

on

எம்எஸ்டி ரெட் டிராகன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி சீசன் 5.

கோவை பேரூர் அருகே கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.

சுமார் 32 அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் ரேஞ்சர்ஸ் 11 மற்றும் போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரேஞ்சர்ஸ் 11 அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பின்னர் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ரேஞ்சர்ஸ் 11 அணி 8 ஓவர் முடிவில் 48 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடிய பப்பு பிரசாத் “ஆட்டநாயகன்” விருதைப் பெற்றார்.

“தொடர்நாயகன்” விருதை ஆர்டிஎக்ஸ் அணி வீரர் விஜய்க்கு வழங்கப்பட்டது.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிக்கு முதல் பரிசாக 20,000 ரூபாயும் 6 அடி கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிக்கு 15,000 ரூபாயும் 5 அடி கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை எம்ஆர்சிசி அணிக்கு 8,000 ரூபாய் பரிசுத் தொகையும் 4 அடி கோப்பையும், நான்காவது இடத்தை ஆர்ஜே பிரோதெரஸ் அணிக்கு 5,000 ரூபாய் பரிசுத் தொகையும் 3 அடி கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிமுக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் அவர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். கவுண்டனூர் வி. பிரசாத், ஜி.பி. பாபு, ரோட்டரி எஸ். மணிகண்டன், ஏ.சி. சிவகுமார், நந்தகுமார், சசிகுமார், பிரவின், பேரூர் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கிரிக்கெட் தொடரை எம்எஸ்டி ரெட் டிராகன் அணி சார்பாகா வி. பிரசாத், எம்எஸ்டி முத்துக்குமார் மற்றும் குழுவினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவிய ஸ்பான்சர்கள் வைஷன் சாரிடபிள் டிரஸ்ட், பிர்லா ஓபன் மைண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் ,ஓகே ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ், நைனா கடை ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Continue Reading

விளையாட்டு

கோவையில் எம்எஸ்டி ரெட் டிராகன் நடத்தும் கிரிக்கெட் தொடர் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன் துவங்கி வைத்தார்

Published

on

எம்எஸ்டி ரெட் டிராகன் சார்பாக ஐந்தாவது வருடத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவை பேரூர் அருகே இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சுமார் 32 அணிகள் மோதும் இந்த தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன் கிரிக்கெட் விளையாடி துவங்கி வைத்தார் . இந்த நிகழ்வில் நல்லறம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ரோட்டரி. எஸ். மணிகண்டன் மற்றும் கே பேக்ஸ் உரிமையாளர் கருப்பையா, செட்டிபாளையம் பிரசாத், முத்துக்குமார், .சி.சிவாகுமார், பிரவின், பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர் . இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பரிசுக் கோப்பையை வழங்கவுள்ளார்.

Continue Reading

Trending