மகளிர் தினத்தை முன்னிட்டு “Women’s Day Marathon 2026” நிகழ்ச்சி வரும் மார்ச் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் SIPCOT வளாகத்தில் நடைபெறுகிறது. SIPCOT தொழிற்பூங்கா, மாம்பாக்கம் இணைப்பில் இந்த மேரத்தான் நடத்தப்படுகிறது.
3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றியாளர்களுக்கு பணப் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மின் சான்றிதழ் (E-Certificate), பதக்கங்கள், Refreshments மற்றும் Goodies Bag வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தும் வகையில் இந்த மேரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை Ennovi Mobility Solutions India Pvt Ltd மற்றும் Dreamz Foundation இணைந்து வழங்குகின்றன.