Sports

4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்கத்தில் இருந்தே இருவரும் ரன்களை சேர்க்க ஆரம்பித்த நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து சிவம் டூபே கில்லுடன் ஜோடி சேர்ந்தார். தூபே அதிரடியை தொடங்கிய நிலையில், 22 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார்.

இந்நிலையில், மறுமுனையில் 46 ரன்களுடன் அரை சதத்தை நோக்கி அடிவந்த சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இறுதியில், அதிரடி காட்டிய அக்சர் படேல் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக, எல்லிஸ் மற்றும் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் மேட் ஷார்ட் அதிரடியாக விளையாடினர் அவர்கள் இருவரும் சேர்ந்து, 4.5 ஓவர்களில் 37 ரன்களை குவித்தனர் சுந்தர், அக்சர், டூபேவின் அபாரமான பந்துவீச்சால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையுமே இழந்த ஆஸ்திரேலியா, 119 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

Click to comment

Trending

Exit mobile version