Connect with us

உள்ளூர் செய்திகள்

அதிக இரத்த தானம் வழங்கிய திமுக தீர்மானக்குழு செயலாளர் நா. கார்த்திக்கு, சிறப்பு விருது!

Published

on

சென்னை அண்ணா சாலை, அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம்சார்பில் நடைபெற்ற,தேசிய தன்னார்வ இரத்ததான நாள்-2025″ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவையில் அதிக இரத்த தானம் வழங்கிய “தளபதி இரத்ததான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திமுக தீர்மானக்குழு செயலாளர் நா. கார்த்திக் அவர்களுக்கு, சிறப்பு விருது,மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. மா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Business

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற மில்லியனேர் சம்மிட் 2026

Published

on

சென்னையில் மில்லியனேர் சம்மிட் 2026 சிறப்பாக நடைபெற்றது. தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு நிதி அறிவு, தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் போர்டு உறுப்பினர்களாக ஹாலிடே சீசென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவி குமார் எஸ், Aesthetic டிசைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO . ஏ. எஸ். ராஜசேகர், Rainbow Forms நிறுவனத்தின் CMO அகிலன் மோகன்தாஸ், Venkatram Catering Services நிறுவனத்தின் CEO . ஆர். வெங்கடராமன், S.V. Plymart நிறுவனத்தின் நிறுவனர் சண்முகம் ராஜா, LoansFunding.in நிறுவனத்தின் இயக்குநர் நிர்மல் ஜே, Niile Technical Skill & Consulting Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சிவசங்கர் வி. பி, Tritech Infosystems Pvt. Ltd. நிறுவனத்தின் Business Head நாச்சியப்பன் என். சி. டி, Unichem Industries Pvt. Ltd. நிறுவனத்தின் Managing Director காஜா மொஹிதீன், Samy Jose Boxing Academy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ரிச்சர்ட் கே. யூசுப் மற்றும் Executives Collaboration Pvt. Ltd. நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சி. எச். வில்சன் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஏற்பாட்டு குழுவில், Touchmark Descience நிறுவனத்தின் CEO பாரதிராஜா தங்கப்பளம், SARGUN Financial Services Pvt. Ltd. நிறுவனத்தின் CEO சர்குனன் தனிகைமாலி, மற்றும் Stemfunnels Marketing Agency நிறுவனத்தின் CEO திரு. ஹாட்லி ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்ட சுமார் 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு, இந்த மாநாடு அறிவுப் பகிர்வு, தொழில் வளர்ச்சி மற்றும் ஊக்கத்தை அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published

on

கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் பட்டமளிப்பு விழா இன்று (26.12.25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. . இந்நிகழ்வில் சுகுணா நிறுவனங்களின் தலைவர்
வி. லட்சுமி நாராயணசாமி, சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா. ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஆர் ராஜவேல் அவர்கள் கலந்து கொண்டு  பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். பட்டதாரி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் அனைத்து துறைகளிலும் அவர்களது திறமையை வளர்க்க  வேண்டும், என்பதையும் இதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதையும் நேரத்தின் கடைபிடிப்புகளையும் அவற்றை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சிறப்பாக தெரிவித்துள்ளார்.

சுகுணா அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரியின் இயக்குனர்&செயலர் டாக்டர் வி. சேகர் ஆகியோர் பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.  பட்டத்தைப் பெறுவதற்கு மாணவர்களை அழைத்தவுடன் அவர்களின் முகமலர்ச்சியும் பெருமையும் அரங்கையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கல்வி நிறுவனத்தின் சேவை, தரமான கல்வியை வழங்குதல், ஆற்றல் சார் அறிவு, புதிய முயற்சி, ஆராய்ச்சி ஆர்வம், சிறந்த சாதனை, மனிதநேயத்தை வளர்த்தல் என பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தின் மைல்கல்லாகவும்  தொடர் வெற்றிக்கான அடிக்கல்லாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் கல்லூரியின் துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

Continue Reading

ஆரோக்கியம்

ஜப்பான் நாட்டில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சி. பழனிவேலுவுக்கு கௌரவ உறுப்பினர் அங்கீகாரம்!!

Published

on

உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தியை உருவாக்கி, புரட்சி செய்ததற்காக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவை தங்களது கவுரவ உறுப்பினராக நியமித்தது ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம்.

இந்த அங்கீகாரம் அவருக்கு 23.10.2025ல் ஜப்பான் நாட்டில் இந்த சங்கத்தின் 78வது ஆண்டு மாநட்டில் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் பழனிவேலு அவர்கள், தொராசிக் சர்ஜரி துறையில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சை முறை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டார்.

1998 ஆம் ஆண்டு உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தி ( Thoracoscopic Esophagectomy in Prone Position) டாக்டர் பழனிவேலுவால் உருவாக்கபட்டது. இதன் மூலம் நல்ல விளைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது.

இந்த உத்தியை ஆசிய பசிபிக் நாடுகளுக்கான மருத்துவ கருத்தரங்கு ஒன்றில் 2005ம் ஆண்டு டாக்டர் பழனிவேலு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் முன்பு செய்து காட்டியிருந்தார். இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதை தொடர்நது ஜப்பான் நாட்டில் இருந்து டாக்டர் பழனிவேலு தங்கள் நாட்டில் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் முன்பு இதை செய்து காட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.

டாக்டர் பழனிவேலு அறிமுகம் செய்த இந்த புது அறுவை சிகிச்சை முறை ஜப்பான் நாட்டில் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. இந்த முறை சிகிச்சை பற்றிய அவரின் மருத்துவக்கட்டுரைகள் அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளின் மதிப்பை பெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் பல நாடுகள், ஆசிய நாடுகளில் இந்த சிகிச்சை முறைக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தது.

இந்த நிலையில், ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம் இப்படிப்பட்ட தாக்கத்தை இந்த துறையில் ஏற்படுத்தியதாக டாக்டர் பழனிவேலுக்கு கவுரவ உறுப்பினர் பதவி வழங்கி மரியாதை செய்துள்ளது.

இந்த புதுமை கொண்ட அறுவை சிகிச்சை முறையை டாக்டர் பழனிவேலு இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கோவை என பல முக்கிய நகரங்களில் உள்ள உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளார்.உலக நாடுகளில் உள்ள நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இதை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending