Connect with us

உள்ளூர் செய்திகள்

80 ஆவது ஆண்டில் இராமநாதபுரம், மருதூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை!

Published

on

கோவை ,மாவட்டம் இராமநாதபுரம், மருதூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை & படிப்பகம், இன்று 80 ஆவது நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1940களில் நமது கோவை மாநகரம் சினிமா துறையில் கொடிகட்டி பறந்த காலம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் திரு எம் ஜி ராமச்சந்திரன், திரு. கருணாநிதி போன்றவர்கள் இந்த பகுதியிலே இருந்து திரைப்பட பணிகளை மேற்கொண்டனர், அப்பொழுது எம் ஜி ஆர் அவர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிக்கும், சிலம்பம், கத்திசண்டை போன்ற சண்டை பயிற்சிகளுக்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட மரபு வழி சித்த மருத்துவர், திரைப்பட சண்டை பயிற்சியாளர் Dr. திரு டி ஆர் லட்சுமி நாராயணன் என்பவர் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தீவிரமான உடற்பயிற்சி மற்றும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தந்தார்.

அப்பொழுது கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ மற்றும் பக்க்ஷி ராஜா ஸ்டுடியோவில் தயாரான ராணி, மர்மயோகி போன்ற ஐந்து திரைப்படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்துக் கொடுத்த திரு லட்சுமி நாராயணன் அவர்களின் பெயரால் கடந்த 1945 இல் தற்போது செயல்பட்டு வரும் இதே இடத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் அனைவரும் கலந்து கொண்டு துவக்கப்பட்டது ஸ்ரீ லட்சுமி நாராயணா தேகப் பயிற்சி சாலை என்ற அமைப்பு கடந்த 80 ஆண்டுகளாக பல்வேறு உடல் ஆரோக்கியம் , சமுதாயப் ,பணிகள், கல்விப் ,கல்விப் பணிகள், ஆன்மீகப் பணிகள் என்ற பல்வேறு கோணங்களில் தனது சேவையை திறம்பட செய்து இன்று 80 தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது , காலத்தை வென்ற காவியத்தலைவன் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கும் இன்று உள்ள இளைஞர்கள் நமக்கும் உடற்பயிற்சிக்கு ஆசிரியர் ஒருவரே என்பதைதே இதன் பெருமை , இந்த பயிற்சி சாலையில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இந்திய ராணுவத்திலும், தமிழ் திரைப்பட ,துறையிலும், தேசிய மற்றும் மாநில விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு கோவைக்கும், பயிற்சி சாலைக்கும் பல நற்பெயரினை பெற்று தந்துள்ளனர் என்பது பெருமை இவ்வளவு சிறப்பு கொண்ட இந்த தேகப் பயிற்சி சாலையை துவங்கிய முன்னோர்கள், ஆசிரியர்கள்

முன்னாள் நிர்வாகிகள் அனைவராலும் கோவைக்கு பெருமை செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது காலம் தொட்டு வாழும் இந்த புகழ் பல நூற்றாண்டுகள் தாண்டி வீரநடைப் போட வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி ஆதி மாருதியில் அசத்தலான ஸ்டைலிஷ் விக்டோரிஸ் கார் அறிமுகம்!

Published

on

கோவை : சரவணப்பட்டியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் மாருதியின் புதிய வரவாக வெளிவந்துள்ளது விக்டோரிஸ் கார். இதன் அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி (நேற்று) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமுதிர்நிலையம் உரிமையாளர் துரைராஜ் சின்னசாமி, பழமுதிர்நிலையம் பங்குதாரரும், ஆனந்த ஹோண்டா(பெங்களூர்) நிர்வாக இயக்குனருமான ஞானசேகர் கந்தசாமி, கோவை பழமுதிர்நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன், பழமுதிர் நிலையம் உரிமையாளர் விஜய் ரத்தினம், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி ஸ்ரீனிவாசன், மாருதிசுசூகி, பகுதி மேலாளர் சுபாஷ், மாருதி சுசூகி டெரிடாரி விற்பனை மேலாளர் சாம் சுந்தராஜ், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி விற்பனை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

விக்டோரிஸ் எல்எஸ்ஐ, விக்டோரிஸ் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ, விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ ஏடி ஆகிய வெறியன்ட்யுடன் களமிறங்கியுள்ளது மாருதி விக்டோரிஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற.

பாதுகாப்பு சாதனைக்கான GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பல அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது .

 

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 யூ17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில் பெற்றுள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

Trending