Connect with us

சென்னை

அதிமுக எம்.பி பெயர் அதிகாரப்பூர்வ நீக்கம்!

Published

on

சி.வி சண்முகம் (அதிமுக) அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக எம்.பி-க்கள் பெயர் பட்டியலில் இருந்து சி.வி சண்முகம் பெயரை நீக்கியது.இதனால் அதிமுக எம்.பி-க்கள் 4 ஆக குறைந்தது.

செய்திகள்

பெரும்பான்மை தேவை என்ன செய்யப் போகிறார் விஜய்?

Published

on

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் என்ற புயல் உருவாகி இன்னும் அடங்காமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நடந்த தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’.

கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 108 தொகுதிகளை கைப்பற்றி இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது தமிழக அரசியல் நிலைப்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. இளைஞர்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள், ஆகியோரின் ஆதரவு தவெக-க்கு பெருமளவில் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கப்பெறவில்லை. திமுக தனது ஆட்சியை தொடரும் நம்பிக்கையுடன் இருந்தாலும், வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும் மீண்டும் எழுச்சி பெற முயன்றாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில்
108 தொகுதிகளை வென்றிருந்தாலும், தவெகக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை என்பது முக்கியமான mமானதாகும் . ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை அடைய முடியாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் கூட்டணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றை அணுகும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இவர்களின் தவெக-க்கு ஆதரவு தருவார்களா அப்படி தர தயாரானாலும் என்ன கோரிக்கைகள் வைப்பார்கள் அதனை தவெக ஏற்குமா? என்ற கேள்வி வட்டமடித்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பாக அதிமுக இருக்கிறது, பல காட்சிகளை சேர்த்து ஆட்சி அமைப்பதை விட அதிமுக என்ற ஒற்றை கட்சி ஆதரவுடன் ஆட்சி என்பது சுலபமானது என சிந்திக்க தவெக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. யாருடன் கூட்டணி அமைக்கப்படும், எந்த நிபந்தனைகளில் ஆதரவு கிடைக்கும் என்பது தற்போது மிகுந்த சஸ்பென்ஸாக உள்ளது.

விஜய் தலைமையிலான தவெக, மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகம். தேர்தல் வெற்றி மட்டுமல்லாமல், ஆட்சி அமைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கட்சியின் மீது உள்ளது. இந்த சூழலில், சரியான கூட்டணியை தேர்வு செய்வது மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கக்கூடியவை. தற்போது மக்கள் தீர்ப்பு வெளிவந்துவிட்டது, இனி அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே அனைவரின் கவனமாக உள்ளது.

Continue Reading

செய்திகள்

200 இடங்களில் வெற்றி தமிழகத்தை ஆள்வார் – செங்கோட்டையன்

Published

on

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன்,கருத்துகணிப்பு குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்த அவர்,
தந்தி ஆன்லைன் நடத்திய கருத்து கணிப்பில் 250808 பேரிடம் கருத்து கணிப்பு எடுத்து இருக்கிறார்கள்,ஆன்லைன் மூலம் நடத்தி அவர்கள் கொடுத்த ரிசல்ட்டில் 120 தொகுதிக்கு மேல் வரும் என சொல்லி இருக்கிறார்கள்,
மற்றவர்கள் அதற்கு கீழே இருக்கும் சொல்லி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும்இலங்கை, நேபாள், பங்களா தேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும்கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்கருத்து கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வது என தெரிவித்தார்.மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றில் இல்லாதபடி இருக்கும் எனவும், பசுமை புரட்சி , வெண்மை புரட்சி, இன புரட்சி , சோசலிச புரட்சி வரிசையில் , அடுத்ததாக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது என தெரிவித்தார்.200 இடங்களில் வெற்றி பெறுவார் அவர் தான் தமிழகத்தை ஆள்வார்,இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று எனவும் தெரிவித்தார்.கருத்துக்கணிப்பு பெரிய சேனல்கள் யார் எடுத்திருக்கிறார்கள்?என கேள்வி எழுப்பிய அவர்  டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது என தெரிவித்தார். இதனைதொடர்ந்து விமானம் மூலம் அவர் சென்னை கிளம்பினார்.

Continue Reading

சென்னை

திருச்சியில் தனது முதல் கிளையை துவங்கி ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்

Published

on

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு மற்றும் காரவகைகள் நிறுவனமான ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், திருச்சியின் மையப்பகுதியான 11வது குறுக்கு தெருவில் தில்லை நகரில் தனது முதல் கிளையைத் தொடங்கியுள்ளது.புதிய கிளை துவக்கம் குறித்து ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மணிகண்டன் கூறுகையில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தரமான மற்றும் நினைவில் நிற்கும் சுவையை வழங்குவதே எங்கள் முக்கிய குறிக்கோள். திருச்சி மக்களுக்கு எங்கள் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு சிறிய சைவ உணவகமாகத் தொடங்கப்பட்ட ஸ்ரீ ஆனந்தாஸ், தற்போது தென்னிந்திய இனிப்பு மற்றும் காரவகைகளில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது கோயம்புத்தூரில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளையும், சென்னையில் பல கிளைகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. என்.வி. நம்மாழ்வார் கூறுகையில்: “பாரம்பரிய சுவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறோம். கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது திருச்சியிலும் எங்கள் சேவையை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். திருச்சி மக்களிடம் இருந்தும் எங்களுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்”.ஸ்ரீ ஆனந்தாஸில் பாதாம் ரோஸ் லட்டு, குல்கந்த் பிஸ்கட் போன்ற நவீன இனிப்புகளுடன், கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் இளநீர் ஹல்வா போன்ற பாரம்பரியச் சிறப்பு வகைகளும் இணைந்து, மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வகைகள் நாள்தோறும் புத்தம் புதியதாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்று வரும் இந்த நிறுவனம், விசேஷங்கள் மற்றும் இல்ல விழாக்களுக்கான ஸ்பெஷல் ஆர்டர்களையும் ஏற்று, அவற்றை சிறந்த சேவையுடன் வழங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கிளையின் தொடக்கம் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. விரைவில் ஈரோடு மற்றும் மதுரை நகரங்களிலும் புதிய கிளைகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், பாலக்காடு கிளையின் வெற்றியைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தின் கொச்சியிலும் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending