Connect with us

கோயம்பத்தூர்

இதுஆரோக்கியமான அரசியல் அல்ல – திருமாவளவன்

Published

on

அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்று கோவையில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று கோவையிலும், நாளை உதகையிலும், அதன்பின்னர் சென்னையிலும் பயணம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளனர்.
இதில் பாதுகாப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கும் அனுபவம் கிடைத்துள்ளது.

பெரம்பலூரில் நடைபெற்ற திமுக – விசிக இடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் கவலை அளிக்கிறது. இந்த விரும்பத்தகாத நிகழ்வு வேதனை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைதளங்களில் வரும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்.ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை கேள்விப்பட்டு, அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மாவட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் அதனைத் தவிர்த்துவிட்டார்கள். தகவல் அறியாதவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

அங்கு திமுகவினரும் கூடியிருந்தனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இயக்கத்தோழர்கள் இடம்கொடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தவெக – அதிமுக நிர்வாகிகள் இணைவது ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை.

இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்து விசிக எங்கள் ஆதரவை கொடுத்துள்ளது.
வெளியில் இருந்து ஆதரவு என்று தவெக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இப்போது அமைச்சரவையிலும் இடம்பிடித்திருக்கிறோம்.இந்த நிலையில், தவெக தலைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எந்த சூழலிலும் உங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.விமர்சனங்களுக்கு தவெக தலைமையிடம் இடம் கொடுக்கக்கூடாது. அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என்று நான் முன்பே கூறியுள்ளேன்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான், அதிமுகவின் ஆதரவைப் பெறுவதில் தவெகவுக்கு நெருடல் இருந்ததாக தவெக தலைவர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை அதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவை தவெக எடுத்திருக்கும்.அதுமட்டுமன்றி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை நாடியதற்கும், அதிமுக – பாஜக உறவே காரணம் என்று தவெக தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் இன்று அதிமுக நெருக்கடி நிலையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று கருதுகிறேன்.தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாலும், அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வது தவெக மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.எனவே கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தவெக செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இந்த சந்தேகம் இருப்பதால் தான், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு அரசியலில் தலித்துகளுக்கு இவ்வளவு பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை. கர்நாடகத்தில் ஏற்கனவே 7 பேர் வரை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பது எடுத்துக்காட்டாக உள்ளது. சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது, அந்த சமூகத்திற்கான அங்கீகாரமாகும். அது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

உள்ளூர் செய்திகள்

தாராபுரம் சந்திராபுரத்தில் ஏபிடி சொசைட்டி மற்றும் சேவை மையம் துவக்கம்

Published

on

ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர்.மகாலிங்கம் ஐயா அவர்களால் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. நிறுவனர் ஐயா அவர்கள் தனது நிறுவனங்களை வணிகரீதியாக மட்டுமின்றி. விவசாயிகளின் வாழ்க்கை தர மேம்பாடு, சமூக, சமுதாய மேம்பாடு. ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிலும் தமது சிந்தனையாற்றல் மூலம் எதிர்கால இந்தியாவைப்பற்றியும், இளைஞர்களை கல்வி பயிலும் பொழுதே தொழில் முனைவோராக மாற்றிட வழிவகுத்தவர். அவரது கால்தடங்களை தவறாது, பிறழாது பின்பற்றி அவரது முயற்சி, சிந்தனைகளின், கனவுகளின் நீட்சியாக ஐயா அவர்களது புதல்வர் திரு.ம.பாலசுப்பிரமணியம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதுதான் இன்று துவக்க விழா காணும் ஏபிடி சொசைட்டி ஆகும்.

சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் விவசாயத்தின் மீது நாட்டம் வெகுவாக குறைந்துவருகின்றது. கிராமப்புற கூலி ஆட்கள் நகர்புற கட்டுமானப் பணிகளுக்கும், ஜவுளி தொழில்களுக்கும் நகர்ந்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாலும், மாறி வருகின்ற பருவநிலை மாற்றங்களாலும், விளைவிக்கின்ற விலைப்பொருட்களுக்கு போதிய விலை கிட்டாததாலும், கிராமப்புற விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்று வருமானங்களை நோக்கி நகரக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகின்றது. இத்தகையச் சூழலில், தனிப்பட்ட ஒரு பயிர் மூலம் அல்லது தனிப்பட்ட விவசாயம் சார்ந்த ஒரு தொழில் மூலமாகவும் ஈட்டுகின்ற வருமானம் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து, ஏபிடி சொசைட்டி நவீன விஞ்ஞான முறைகளை பின்பற்றி பயிர்களின் மகசூலை உயர்த்துவதோடு “ஒருங்கிணைந்த பண்ணைய முறை” என்பதை கருத்திற்கொண்டு இந்த ஏபிடி சொசைட்டி துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் வருவாய் ஈட்டும் வகையில் காய்கறி பயிர், கால்நடை மூலம் அதிக பால் உற்பத்தி, கோழி,ஆடு,மீன், காளான், தேனி வளர்ப்பு போன்றவற்றின் மூலமும், ஓராண்டு பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றையும், அதிக நிலப்பரப்புடையவராக இருப்பின் பழ வகை பயிர்களையும், நவீன விஞ்ஞான உத்திகளை, விவசாயிகளுக்கு போதுமான பயிற்சிகள், மாதிரி வயல் அமைத்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்திடவும், வருவாயை மேம்படுத்திடவும். ஏபிடி சொசைட்டியின் சேவை மையம் துவக்கப்படுகிறது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் உபகரணங்கள் தரமானதாக வழங்கிட ஏபிடி சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி வழங்கிட ஒற்றை ஆசிரியர் வகுப்பறைகளும், கிராமப்புற பெண்களின் நலனுக்காக அவர்களை இளம் தொழில் முனைவோராக மாற்றிட அனைத்து வாய்ப்புகளையும், சூழல்களையும் ஏற்படுத்திட ஏபிடி சேவை மையம் முனைந்துள்ளது.

மேற்கண்ட உன்னதமான திட்டங்களையும், எதிர்கால விவசாயத்தை லாபகரமாக மாற்றிடவும், விவசாயிகள் விவசாயத்தில் நிலைத்து நீடித்திடும் வகையிலும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு முன்பாக அதற்கெல்லாம் ஆதாரமாக, சாட்சியமாக நிரூபணம் செய்யும் வகையில் “ஏபிடி சொசைட்டி” மற்றும் “ஏபிடி சேவை மையம்” சந்திராபுரம் கிராமத்தோடு கொண்டுள்ள நீண்ட, நெடிய உறவுகளை கருத்திற்கொண்டு இக்கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி அமைத்திட மேற்கொண்ட முயற்சியின் துவக்கப்புள்ளிதான் இந்நிகழ்வின் துவக்க விழா.

இந்த விழாவை சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் திரு.ம. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை ஏற்று பெருமகிழ்வுடன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருமதி.வினோதினி பாலசுப்பிரமணியம், திருமதி.சம்யுக்தா சங்கர் வாணவராயர் ,செல்வி.சுருதி, திரு.அம்ரித் விஷ்ணு, மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், சந்திராபுரம் ஏபிடி சேவை மையத்தின் அலுவலர்களும், ஊழியர்களும், சந்திராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் பேசும்பொழுது தங்களது கிராமத்தில் ஏபிடி சொசைட்டியின் வருகை தங்களுக்கு பெருமகிழ்ச்சியையும், பலன் உள்ளதாக அமையும் என்பதாலும் தங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்தனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் போதைக்கு எதிராக பேரணி

Published

on

போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில், கோயம்புத்தூர் கிராஸ் கட் சாலையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி அதன் மாணவர் நல வாரியம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் தொடங்கிவைத்தார். இப்பேரணி போதைப்பொருளுக்கு இல்லை என்று சொல்வோம், ஒன்றிணைந்து போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது.

இப்பேரணியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அகாடமி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் காந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பேரணியின் முடிவில், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் வாசிக்க, திரண்டிருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் என். கண்ணன், மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி. ஜெகதீஸ்வரி, R.S. அருண், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி கோவை கிளை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்,

போதை நல்லது என யாராவது சொல்வார்களா ? அனைவருக்கும் தெரியும் போதைப்பொருள் பயன்படுத்துவது தவறான பழக்கம் மற்றும் அதனால் பாதிப்புக்கள் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் என்று. அனால் ஒரு ஆர்வத்தில் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கலாம் என செய்வதுதான் அதற்க்கு அடிமையாகி விடுகிண்றனர். போதைப்பழக்கம் என்பது ஒரு பேயை போன்றது. இளைஞர்கள் ஒரு தடவை செய்தால் அது நம்மளை பிடித்துக் கொள்ளும் . ஒரு தடவை கூட நீங்கள் எடுத்துக்கொள்ளமல் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் . போதை பொருள் பயன்படுத்துவது ஒரு சமூக குற்றம் ஆகும். போதை எங்காவது இருந்தால் இலவச புகார் எண்ணிற்கு உடனடியாக காவல்துறைக்கு தெரிவியுங்கள் , உங்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அனைவரும் இதுபோன்ற செய்தால் போதையை ஒழித்து விடலாம் என தெரிவித்தார்.

மேலும் சிவில் சர்விஸ் படிப்பதை விட முக்கியமானது இந்த போதை பழக்கவழக்கம் இல்லாமல் இருப்பது ஆகும். ஏனெனில் இந்த உலகத்தில் இந்த வேலை இல்லை என்றாலும் வேறு வேலை செய்துகொள்ளலாம். ஆனால் போதை பொருள் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும். யாரும் போதை பொருள் பயன்படுத்தித்தார்கள் , பயன்படுத்தவும் விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி. ஜெகதீஸ்வரி ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய மாணவியருக்கு அறிமுக விழா

Published

on

கோவை
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டில் சேர்ந்த புதிய இளநிலை மாணவியர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நந்தினி, செயலாளர் முனைவர் என். யசோதாதேவி, முதல்வர் பி.பீ. ஹாரதி ஆகியோர் மாணவியர்களை வரவேற்று கல்லூரியின் கல்விச் சிறப்புகள் குறித்து விளக்கினர்.

வாழ்க்கையின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி , உற்சாகம் , நம்பிக்கை மற்றும் புதிய இலக்குகளுடன் மாணவியர்களை வரவேற்றது . முதல் ஆண்டு மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அன்புடன் வரவேற்கும் வகையில் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர் . நந்தினி வரவேற்புரையாற்றி புதிய மாணவியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கல்விசார் சிறப்பும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் கொண்ட கல்லூரியின் பாரம்பரியத்தை எடுத்துரைத்தார் .

இந்நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.வி. ரம்யா பாரதி, பிரிக்கால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன், Startup India (DPIIT) தலைவர் மமதா வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு தன்னம்பிக்கை, தலைமைத்துவம், தொழில்முனைவு, தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களின் அவசியம் குறித்து மாணவியர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினர். தொடர்ந்து புதிய மாணவியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சி, கல்லூரி வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் தொடங்க புதிய மாணவியர்களுக்கு பயனுள்ள வழிகாட்டலாக அமைந்தது.


Continue Reading

Trending