Connect with us

கோயம்பத்தூர்

கோலாகலமாக நடந்த தின இதிகை பத்திரிகை வெளியீட்டு விழா!

Published

on

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின் மேலாளர் திரு. மணிகண்டன் சாந்தாமணி, மேலாண்மை இயக்குனர் கர்னல் டாக்டர் பாஸ்கரன், ஸ்போர்ட்ஸ்லேண்ட் திரு. சஞ்சய் ஜான்சன், Quira Visual Creators பேன்சி ராவல், அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் திரு. கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவை திருமதி உஷா சந்திரசேகரன், திருமதி சியாமளா சரவணன், திருமதி அபிராமி சதீஷ்குமார், திருமதி சொர்ணா சக்திவேல், திருமதி ராஜலட்சுமி ஜெகநாதன், திருமதி ஸ்ரீ நந்தினி பார்த்திபன், திருமதி சூர்யா பாலாமுருகன், திருமதி விஜயலட்சுமி பிரசன்னா, திருமதி உமா மஹேஸ்வரி, திருமதி வைஷ்ணவி அருண்காந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கிவைத்தனர்.

விழா வரவேற்புரையை “தின இதிகை” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து குழுவின் அறிமுக உரையை திரு. ஸ்ரீதர், திரு. சக்திவேல், திரு. பார்த்திபன், திரு. பிரசன்னா, திரு. பாலமுருகன், திரு. செந்தில்குமார், திரு. நவீன், திரு. பிரகாஷ், திருமதி சௌமியா பிரகாஷ், திருமதி உமா மஹேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

தமிழ்தாய் வாழ்த்தை சங்கீத இசை மணி சங்கீத ரத்னா திருமதி துர்கா லட்சுமி குழுவினர்கள் வழங்கினர். ஸ்ரீ நிருத்ய அர்ப்பண, பேபி ஓவியா, பேபி அக்க்ஷர சக்திவேல், தாரிக ஸ்ரீ, ஈரோடு சஞ்சய், ITC டான்ஸ் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சாந்தாமணி, தனது இயல்பான நகைச்சுவைக்கலந்த உரையை வழங்கி கூட்டத்தை மகிழ்வித்தார். அவர் கூறியதாவது:

“உலக அளவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.

  • இத்தாலிய மொழி – இசை மொழி,பிரெஞ்சு மொழி – காதல் மொழி,இங்கிலாந்து மொழி – வணிக மொழி,கிரேக்க மொழி – தத்துவ மொழி,உருது மொழி – கவிதை மொழி.சமஸ்கிருதம் – தெய்வ மொழி, தமிழ் மொழி மட்டும் தான் தாய் மொழி.

தாய்மொழியாம் தமிழையும், தாய் தந்தையரையும் வணங்கி மகிழ்ந்து, “தின இதிகை” வாரப்பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவிற்கு நல்ல வரவேற்புரை வழங்கிய நிறுவனர் திரு. சதீஷ்குமாருக்கும், அழகாக அறிமுக உரை ஆற்றிய ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன் ஆகியோருக்கும், குழும உறுப்பினர்களாக இருந்த ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், சக்திவேல், அபிராமி, ஜெயலட்சுமி, வினோதினி மற்றும் வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “இன்னும் யாரேனும் பெயர் விட்டுப் போயிருந்தால் அடுத்த ஆண்டு என்னையே அழையுங்க; அதில் எல்லார்பெயரையும் சேர்த்துச் சொல்வேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பெருந்திரளாக வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்களுக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்த சாந்தாமணி அவர்கள், கைதட்டுவதின் பலன்களைப் பற்றி நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மேலும், பத்திரிகையாளர்களின் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் குட்டிக்கதையையும் கூறினார்.

அடிசியா நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள்:
“பத்திரிகை என்பது ஒரு சாதாரண தொழில் அல்ல. அது உண்மை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது மிகக் கடினம். அதனால்தான் பத்திரிகையை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று சொல்கிறோம். இந்தக் கடமையை ‘தின இதிகை’ சிறப்பாகச் செய்யும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கர்ணன் அவர்கள்:
“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றனர். இந்த பத்திரிகை மக்களுக்கு ஒரு செய்தித்தாளாக வரவேண்டும். பத்திரிக்கை முன்னேற வாழ்த்துக்கள்.” என்றார்.

கர்னல் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்:
“சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் செய்திகள் தாண்டி, மக்களுக்கு பயனுள்ள செய்திகள் சேவை அடிப்படையில் வெளிவர வேண்டும். உண்மையான செய்திகளை ஆராய்ந்து, மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Quira Visual Creators நிறுவன தலைவர் பேன்சி ராவல் அவர்கள்:
“தின இதிகை குழுமத்தினரை வெகுவாக பாராட்டுகிறேன்” என்று உரையாற்றினார்.

திரு. சதீஷ்குமார், ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன், ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயம்பத்தூர்

கனவை நினைவாக்க சிறப்புத் தள்ளுபடி

Published

on

CASTLE REALTY வழங்கும் “CASTLE GRANDE” பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ் திட்டத்தின் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வரை தள்ளுபடி.

கோவையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான வடமதுரை – மேட்டுப்பாளையம் சாலையில், CASTLE REALTY நிறுவனத்தின் புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான “CASTLE GRANDE”-ன் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள CASTLE GRANDE திட்டம், உயர்தர வில்லாக்கள் மற்றும் குடியிருப்பு ப்ளாட்களை உள்ளடக்கிய பிரீமியம் சமூக வாழ்வை வழங்குகிறது. இயற்கை சூழல், பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குடும்பங்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து CASTLE ரியால்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின்னசாமி கூறுகையில்,

“நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. CASTLE REALITY , சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், நீண்டகால முதலீட்டு வளர்ச்சியையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதையில் முக்கிய இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்.” என்றார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

-பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ்
-24×7 பாதுகாப்பு வசதி
-CCTV கண்காணிப்பு
-விநாயகர் கோவில்
-சோலார் மின்வேலி பாதுகாப்பு
*பசுமை நிறைந்த சுற்றுச்சூழல்
-உயர்தர நுழைவாயில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்
இந்த திறப்பு விழாவையொட்டி வருகை தரும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் அனைவருக்கும் Fun Zone Kids Games, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மதிய உணவு (Lunch) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களது எதிர்கால கனவு இல்லத்திற்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பை அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு CASTLE REALTY நிறுவனம அழைப்பதாக தெரிவித்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

Published

on

திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் பிரீமியம் ரக ஃபர்னிச்சர்கள் , சிக்னேச்சர் கலெக்ஷன்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை

 

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது..

நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் வீட்டிற்கான சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், HomesToLife India’-வின் நாட்டுத் தலைவர் (Country Head) வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கூறுகையில்,“தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தீர்வுகளையும் வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும்” என்றனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

காந்திமா நகர் ஓடை புனரமைப்பு பணி தொடக்கம்

Published

on

கோயம்புத்தூர் | 21 ஜூன் 2026

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுத்துளி, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கோயம்புத்தூரின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடை (குறும்பப் பள்ளம்), காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தோன்றி, பன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது. நகரின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் இந்த ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC), பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுத்துளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” (Watch Your Waste) என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.06.2026) ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.

ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நீர்மாசுபாட்டால் ஏற்படும் நீர்தரக் குறைவு, துர்நாற்றம், நீர்வாழ் உயிரினங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் நகர்ப்புற நீர்வழித்தடங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். கிரி பிரசாத், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன், சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், சிறுத்துளி அறங்காவலர்கள், ஸ்டீயரிங் கமிட்டி மற்றும் அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடை சுத்தம் செய்யும் பணியிலும் பங்கேற்றனர்.

காந்திமா நகர் ஓடையை பாதுகாப்பது என்பது ஒரு ஓடை சீரமைப்புத் திட்டம் மட்டுமல்ல; கோயம்புத்தூரின் நீர்வளத்தை பாதுகாத்து, நிலையான சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் ஒரு மக்கள் இயக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Continue Reading

Trending