Connect with us

உள்ளூர் செய்திகள்

அன்னூரில் நடைபெற உள்ள மாபெரும் விவசாய & கோழிப்பண்ணை கண்காட்சி – Agri & Poultry Expo 2026.

Published

on

கோவை மாவட்டம் அன்னூரில், விவசாயிகளின் உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கில் Agri & Poultry Expo–2026 எனும் மாபெரும் விவசாய மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி Pride Events நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சி, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை தொழில்களில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கண்காட்சியில், நவீன டிராக்டர்கள், விவசாய இயந்திரங்கள், விதை மற்றும் உர வகைகள், பாசன உபகரணங்கள், ட்ரோன் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் தொழில்நுட்பங்கள், சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணை வளர்ப்புக்கான நவீன உபகரணங்கள், தீவன மேலாண்மை முறைகள், நோய் தடுப்பு ஆலோசனைகள், உற்பத்தி திறன் மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து நிபுணர்களால் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. விவசாயிகள் நேரடியாக நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்ய விரும்பும் தொழில்முனைவோர்கள், இளம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த கண்காட்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சிக்கான மீடியா பார்ட்னராக தினஇதிகை செயல்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9384265548, 9384177789 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தமிழின் பெருமையை அறிய கோவையில் கூடும் வடமாநில மாணவர்கள்

Published

on

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வித்யா பாரதி உச்ச கல்வி சன்ஸ்தான் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் “லெர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” தொடங்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள், தமிழ்மொழி, அதன் தொன்மை, பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட 10 நாள் பயிற்சி முகாமான “லேர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” (Learn Bharatiya Bhasha Internship Programme 2.0) இரண்டாம் பதிப்பில் பங்கேற்பதற்காக கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SKASC) வந்தடைந்துள்ளனர்.இந்தப் பயிற்சி திட்டத்தை கல்லூரி நிர்வாகம், வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனம் மற்றும் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. கனகசபாபதி கலந்து கொண்டு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“மொழி என்பது சமூகங்களுக்கிடையே கருத்துகள், மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு பாலமாக விளங்குகிறது. உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், இந்தியப் பண்பாட்டின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் செழுமையான இலக்கிய மரபைக் கொண்டுள்ளது.

சங்க காலம் முதல் நவீன காலம் வரை தமிழ் இலக்கியம், நாட்டின் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல மொழிகளைக் கற்றுக்கொள்வது சிக்கல்களைத் தீர்க்கும் திறன், சூழலுக்கு ஏற்ப தழுவிக் கொள்ளும் திறன் மற்றும் பண்பாட்டு புரிதலை மேம்படுத்துகிறது. பன்மொழித் திறன், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் தங்களது தாய்மொழியைத் தாண்டி மற்ற இந்திய மொழிகளிலும் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது” என்றார்.

வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனத்தின் தேசிய அமைப்புச் செயலாளரும் சிறப்பு விருந்தினருமான கே.என். ரகுநந்தன், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கவுன்சிலின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. சுந்தரமூர்த்தி விளக்கமளித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி விழாவிற்கு தலைமை தாங்கி, மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலகளவில் தமிழ்ப் பாரம்பரியம் தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பதோடு, இத்தகைய திட்டங்கள் மாணவர்களிடையே மொழி ஒற்றுமையையும் பண்பாட்டு புரிதலையும் மேம்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெகஜீவன் வரவேற்புரை ஆற்றி, “மாணவர்கள் தமிழை ஒரு மொழியாக மட்டுமல்லாமல், இந்திய நாகரிகத்தின் அடையாளமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆர். விஜயசமுந்தேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் வி.ஜி.எம் மருத்துவமனை நடத்தும் “ரன் ஃபோர் நேசன்” மாரத்தான் போட்டி

Published

on

கோவை மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறந்து பணியாற்றி வருகின்ற வி.ஜி.எம் மருத்துவமனையும், விளையாட்டு துறையில் கால் நூற்றாண்டை கடக்கும் கோவை அத்லெடிக் கிளப்பும் இணைந்து “ரன் ஃபோர் நேசன்” மாராத்தன் ஓட்டத்தை இந்தாண்டும் நடத்துகிறோம். இந்த மாராத்தான் கடந்த தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு மிக்க மாராத்தான் போட்டியை 9.8.2026 நேரு விளையாட்டு அரங்கில் வி.ஜி.எம் “ரன் ஃபோர் நேசன்” என்ற தலைப்பில் மீண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த மாராத்தான் முக்கிய நோக்கம் ஒரு தேசம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, விளையாட்டு, ஆரோக்கியம் இந்த மூன்றும் சிறப்பாக இருக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் “ரன் ஃபோர் நேசன்” எதற்காக நடத்தப்படுகிறது என்ற தலைப்பு வெளியிடப்படும் இந்த ஆண்டு “ரன் ஃபோர் நேசன்” மற்றும் போதையில்லா கோவை என்பதை வலியுறுத்தி 9.8.2026 அன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை சார்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு இன்று 13.6.2026 வி.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் 6-வது “ரன் ஃபோர் நேசன்” மாரத்தான் போட்டியின் சீருடை வெளியீட்டு விழா மற்றும் அரசு. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலனிகள், அரசு பள்ளிகளுக்கு கணணி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.K.S. ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், திரு.N.M. சுகுமார் அவர்கள் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பல்வேறு ரன்னர்ஸ் கிளப் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுத்தொகை மொத்தம் ரூ. 2,00,000 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பதக்கங்கள், சீருடை, உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மாரத்தானாக நடைபெற உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவை ஹரிபவனம் புதிய நவீன சூப்பர் மார்க்கெட்!

Published

on

கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், உணவகத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தனது புதிய முயற்சியாக ‘குரோசர் சென்ட்ரல்’ (Grocer Central) என்ற நவீன சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியுள்ளது.

இது குறித்து ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பாலச்சந்தர் ராஜுகூறியதாவது,

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உணவகத் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். எங்கள் உணவகங்களில் எப்போதும் தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்கி வருகிறோம். அதே தரத்தையும் நம்பகத்தன்மையையும் தற்போது உணவுசமைக்க தேவையான பொருட்கள் மற்றும் வீட்டிற்கு பொருட்களை குரோசர் சென்ட்ரல் மூலம் நேரடியாக மக்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம்.

உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, மசாலா பொருட்கள், தினசரி பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ஒரே இடத்தில் தரமான முறையில் வழங்க உள்ளோம். கோவை மக்களுக்கு ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டை விட, குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் முழுமையான ஷாப்பிங் மையத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். தரமான பொருட்கள், நியாயமான விலை, சிறந்த சேவை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஒருங்கிணைத்து புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்க உள்ளோம், என்றார்.

மேற்கத்திய நாடுகளின் நவீன சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இணையான உட்புற வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குரோசர் சென்ட்ரல், சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில், கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் வளாகத்தில், இரண்டு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக 70-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குரோசர் சென்ட்ரலில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய்கள், மசாலா பொருட்கள், தினசரி பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பேக்கரி தயாரிப்புகள், ஸ்னாக்ஸ், இனிப்புகள், குளிர்பானங்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள், நாட்டு மருந்து, குழந்தைகளுக்கான பொருட்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், பரிசுப் பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

மேலும், வாடிக்கையாளர்களின் அனைத்து அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஆரோக்கிய உணவுப் பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், உறைபதன உணவுப் பொருட்கள், வீட்டுத் தூய்மை பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள் உள்பட 50,000 – க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இறைச்சிக்கென பிரத்யேக பிரிவான ‘மீட் சென்ட்ரல்’-ல் மட்டன், சிக்கன், நண்டு, பிரான் போன்ற மீன் வகைகள், நாட்டுக்கோழி, சேவல், வெடக்கோழி, புறா, முயல், காடை உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் அன்றைய தினம் வெட்டி ப்ரெஷ்- ஆக விற்பனை செய்யப்படுகின்றன.இதனுடன் ஸ்னாக்ஸ் & ஸ்வீட் ஷாப், ஐஸ்கிரீம் பார்லர், பூக்கடை உள்ளிட்ட பிரிவுகளும் செயல்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஆட்டோமேட்டிக் கார் வாஷ் வசதி, லாண்டரி சேவை, நவீன பில்லிங் வசதிகள், டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் வாடிக்கையாளர் உதவி மையம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கோவை முழுவதும் இலவச டோர் டெலிவரி சேவை , வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே கால் செய்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் ‘Grocer Central’ மொபைல் செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

தரம், நம்பகத்தன்மை, வசதி மற்றும் ஒருங்கிணைந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில், கோவை மக்களுக்கு புதிய அடையாளமாக குரோசர் சென்ட்ரல் உருவாகியுள்ளது.

Continue Reading

Trending