காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோயம்புத்தூர் சந்தையில் தனது முதல் வணிக ரியல் எஸ்டேட் உருவாக்கமான ‘காசாகிராண்டு கிரவுன்‘ தொடங்கப்படுவதை பெருமையுடன் இன்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம், கோயம்புத்தூரின் வளர்ந்து வரும் அலுவலகச் சந்தையில் தனது வலுவான வருகையைப் பதிவு செய்துள்ளது.
கோயம்புத்தூரின் வேகமாக வளர்ந்து வரும் வணிகப் பகுதிகளில் ஒன்றான அவிநாசி சாலையில் அமைந்துள்ள ‘காசாகிராண்டு கிரவுன்’, சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வளாகத்தை வழங்குகிறது. ஐடி மற்றும் ஐடிஇஎஸ் நிறுவனங்கள், குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் , கோ-வொர்க்கிங் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முழு அலுவலக வளாகமும் ஏற்கனவே IndiQube நிறுவனத்தால் முழுமையாக குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பது, கோயம்புத்தூரில் தரமான அலுவலக வளாகங்களுக்கான வலுவான தேவையை வெளிப்படுத்துகிறது.
எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வளாகத்தில், நவீன கட்டிடக்கலை, திறன்மிக்க தள அமைப்புகள், நிலைத்தன்மை கொண்ட உட்கட்டமைப்பு, பொதுப் பயன்பாட்டு சிற்றுண்டிச் சாலை மற்றும் பணியாளர்களை மையமாகக் கொண்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுடன் சிறப்பான இணைப்பைக் கொண்டுள்ள ‘காசாகிராண்டு கிரவுன்’, நகரின் விருப்பத்திற்குரிய வணிக முகவரிகளில் ஒன்றாக உருவாகத் தயாராக உள்ளது.
இந்த அறிமுகம் குறித்து காசாகிராண்டு குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் திரு. சிவசங்கர் ரெட்டி கூறுகையில், “வலுவான பொருளாதார அடித்தளத்தையும், தரமான வணிக உட்கட்டமைப்பிற்கான அதிகரித்து வரும் தேவையையும் கொண்ட தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய வணிக நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் கால்பதிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 2023-ஆம் ஆண்டு காசாகிராண்டு கமர்ஷியலை அறிமுகப்படுத்தியதிலிருந்து, அலுவலக மற்றும் ரீடெயில் மேம்பாட்டுத் திட்டங்களில் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளோம். ‘காசாகிராண்டு கிரவுன்’ வளாகத்தின் மூலம், வணிக நிறுவனங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத் தயார்நிலை கொண்ட அலுவலகச் சூழலை உருவாக்குவதோடு, கோயம்புத்தூரின் வணிக வளர்ச்சிப் பயணத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதே எங்களின் நோக்கமாகும்” என்றார்.
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, காசாகிராண்ட் கமர்ஷியல் அலுவலக மற்றும் ரீடெயில் வளாகங்களை உள்ளடக்கிய 40 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளது. இதன் முக்கிய முன்னெடுப்புகளில், சென்னை சோழிங்கநல்லூரில் 6 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள காசாகிராண்டு ஈகோடெக், சென்னை நந்தம்பாக்கத்தில் 3.2 லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள காசாகிராண்டு அஸ்ட்யூட், சென்னை ரேடியல் சாலையில் 3.6 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள காசாகிராண்டு தி பாரகான், தலா 10 லட்சம் சதுர அடியில் சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள காசாகிராண்டு பிஸ்பார்க், மற்றும் சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள காசாகிராண்டு ஸ்கைடெக் மற்றும் சென்னையின் அம்பத்தூரில் 1.6 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள ரீடெயில் வளாகமான காசாகிராண்டு கனெக்ட் ஆகியவை இடம்பெறுகின்றன.
கோயம்புத்தூரில் காசாகிராண்டு கமர்ஷியலின் வருகை அதன் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், அதீத வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தைகளில் உலகத் தரம் வாய்ந்த வணிகச் சூழல்களை உருவாக்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது
காசாகிராண்டு கமர்ஷியல் குறித்து: காசாகிராண்டு கமர்ஷியல் நிறுவனம் தற்போது 4 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில், ஆறு வணிகத் வளாகங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஐந்து வளாகங்கள் சென்னையிலும், ஒன்று கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன. மேலும், இந்நிறுவனம் சென்னையில் இரண்டு ரீடெய்ல் வணிக வளாகங்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் ரீடெய்ல் வர்த்தக ரியல் எஸ்டேட் துறைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியில் உயர்தர அலுவலக உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இந்நிறுவனம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.