Connect with us

கோயம்பத்தூர்

கோவையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை கலெக்டரிடம் அதிமுக மனு!

Published

on

கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,
பருவமழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அணைகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை தூர்வார வேண்டும் ,புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியும், லாரிகள் மூலமும் பொதுமக்களுக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்,பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கடைக்கோடி கிராமங்களான காபுலிபாளையம், காட்டம்பட்டிபுதூர், தாசநாயக்கன்பாளையம், வடசித்தூர் மற்றும் பொள்ளாச்சி மேற்குபகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. மற்ற கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற தொகுதிகளிலும் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்,சீரான குடிநீர் விநியோகத்தை கருத்தில் கொண்டு, நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ,கோவை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,ஆணைமலை ஒன்றியம் கம்பாளப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட குப்பைத் தொட்டிகளை மீண்டும் அனைத்து வார்டுகளிலும் வைத்து, தினசரி குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

,தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட இக்கரைப்போளுவாம்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊர்நத்தம் (பூர்வீக சொத்து) ZERO Value ஆக மாறி இருப்பதால் அப்பகுதி மக்களால் தங்களின் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடிவதில்லை, பெயர் மாற்றம் செய்ய, பத்திரப்பதிவு செய்ய முடிவதில்லை. ஆகவே ZERO Value மதிப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற , பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி திரு. வி. ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. PRG Arunkumar, திரு. Amman K Arjunan MLA, திரு. ஏ.கே.செல்வராஜ், திரு. டி.கே. அமுல் கந்தசாமி, ஆகியோர் என அதிமுக சார்பாக கோரிக்கை விடுத்தனர்.

கோயம்பத்தூர்

ஐ ஃபவுண்டேஷன் இலவச கண் பரிசோதனை

Published

on

கண் மருத்துவ சேவையில் முன்னணி வகிக்கும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14, 2026 வரை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் 27 கிளைகளை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, கோயம்புத்தூரில் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கண் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உலக குளுக்கோமா சங்கம்முன்னெடுக்கும் உலகளாவிய முயற்சியாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண் பார்வையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முழுமையான பார்வை இழப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 3 முதல் 5 சதவீதம் இந்தியர்கள் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் சுமார் 90 சதவீதம் பேர் தங்களுக்கு குளுக்கோமா இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.உலகளவில் சுமார் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் முழுமையான பார்வை இழப்பை சந்தித்துள்ளதுடன், 4.2 மில்லியன் பேர் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் குளுக்கோமா சிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவும் குளுக்கோமா அறுவை சிகிச்சை முக்கிய முன்னேற்றமாக உருவெடுத்துள்ளது.உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் iStent, KDB Glide, GATT மற்றும் MINIJECT போன்ற புதிய MIGS சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிர குளுக்கோமா நோயாளிகளுக்கு Trabeculectomy மற்றும் Aqueous Drainage Implants மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷனின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுதோறும் 1500 க்கும் மேற்பட்ட குளுக்கோமா அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவின் முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் விழா

Published

on

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளின் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடவள்ளியில் நடைபெற்றது. அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் Er. R. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் மாநில மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் கே அர்ஜுனன் கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் மாநில, மாவட்ட மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ வழங்கினார்

Continue Reading

கோயம்பத்தூர்

கோவை கணபதி பகுதியில் ‘கிராண்ட் சிட்டி’ – புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்

Published

on

கே.ஜி குழுமத்தின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸின் , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்தை இதன் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில், “வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள ‘கிராண்ட் சிட்டி’, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 பி.எச்.கே அபார்ட்மெண்ட்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப திறமையான இடவசதி திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில், சில 3 பி.எச்.கே வீடுகள் பொதுச் சுவர் இல்லாமல் தனியுரிமை அம்சத்துடன் வழங்கப்படுகின்றன. மேலும், இவி சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.குடியிருப்பாளர்களுக்காக குழந்தைகள் விளையாட்டு பகுதி, கசீபோ அமர்வு, அழகிய தோட்டம், ஜிம் மற்றும் பார்ட்டி லான் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இவி பைக் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 25க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக டவுன் & சிட்டி டெவலப்பர் நிறுவனம் நிறைவு செய்து, 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது

Continue Reading

Trending