Connect with us

செய்திகள்

மிந்த்ராவின் பிரம்மாண்ட தள்ளுபடிகளுடன் EORS 24 சேல்!

Published

on

இந்தியாவின் இ-லைஃப்ஸ்டைல் நெட்வொர்க்கிற்கு ஒரு வளர்ச்சி ஊக்கியாக தனது பங்கை மேலும் மேம்படுத்தும் வகையில், மிந்த்ரா தனது 24-வது எண்ட் ஆஃப் ரீசன் சேல் – ஈஓஆர்எஸ் (End of Reason Sale – EORS) முறையை அறிவித்துள்ளது. இது மே 29 முதல் தொடங்குகிறது, மேலும் மே 28 அன்று ஆரம்பகால விஐபி அணுகல் வழங்கப்படுகிறது. 6 மில்லியனுக்கும் அதிகமான ஸ்டைல்களைக் கொண்டுள்ள இந்த நிகழ்வு, இந்தியாவின் பேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் நெட்வொர்க்கில் மிந்த்ராவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பங்கை மேலும் வலுப்படுத்தும். அதே வேளையில், வளர்ந்து வரும் பிராண்டுகளுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ட்ரெண்ட்-ஃபர்ஸ்ட் தேர்வுகள், சிறந்த மதிப்பு மற்றும் வசதிகளைக் கொண்டு சேர்க்கிறது.

வளர்ந்து வரும் பிராண்டுகளின் வளர்ச்சியை ஈஓஆர்எஸ் தொடர்ந்து ஊக்குவிக்கிறது

ஆயிரக்கணக்கான உலகளாவிய, உள்நாட்டு மற்றும் சொந்தமண்ணில் உருவான டி2சி (D2C) பிராண்டுகளில், இம்முறை ஈஓஆர்எஸ்-இல் முதன்முதலாக களம் இறங்கும் 5,000 பிராண்டுகள் உட்பட 15,000 வளர்ந்து வரும் பிராண்டுகள், இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்காக இந்த தளத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டர் நெட்வொர்க், நாடு தழுவிய அணுகல் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளவுள்ளன. வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெளிவாகத் தெரியும்படி பொருட்களை முன்னிலைப்படுத்துதல், புதிய புராடக்ட் அறிமுகங்கள், பிரிவுகளின் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் வளர்ந்து வரும் பிராண்டுகளுக்கான தேவையை அதிகரித்து, ஈஓஆர்எஸ் ஒரு வளர்ச்சி ஊக்கியாக தொடர்ந்து சேவை செய்கிறது. இந்த பிராண்டுகள் ஆடைகள், காலணிகள், க்செஸரீஸ் மற்றும் பல பிரிவுகளில் கிட்டத்தட்ட 13 இலட்சம் ஸ்டைல்களைக் கொண்டு வரவுள்ளன. மிந்த்ராவின் மேம்பட்ட தொழில்நுட்பம், ட்ரெண்டுகள், தேவை வடிவங்களைக் கண்டறிவதற்கான தேடல் மற்றும் ஷாப்பிங் நுண்ணறிவுகள், எளிமைப்படுத்தப்பட்ட செயல்திறன் டாஷ்போர்டுகள், மிந்த்ரா உடனான இ-காமர்ஸ் பயணத்தில் பிராண்டுகளுக்கு வழிகாட்டுவதற்கான பிரத்யேக கூட்டாளர் ஆதரவுக்குழு உள்ளிட்ட பல திறன்களை வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம்

ஈஓஆர்எஸ்-இன் இந்தப் பதிப்பு ஆயிரக்கணக்கான சர்வதேச, உள்நாட்டு மற்றும் சொந்த மண்ணில் உருவான பிராண்டுகளில் இருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான ஸ்டைல்களை வழங்கவுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பேஷன், பியூட்டி மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவுகளில் பரந்த அளவிலான தேர்வுகளை வழங்குகிறது. கோடைக்காலம், பயணம், வேலை, கல்லூரி, திருமணங்கள், விடுமுறைக்கால ஸ்டைல் மேம்பாடுகள் காரணமாக, ஆண்களுக்கான கேஷுவல் வேர், பெண்களுக்கான எத்னிக் வேர், பெண்களுக்கான வெஸ்டர்ன் வேர், வொர்க்வேர், ஸ்போர்ட்ஸ் காலணிகள், க்செஸரீஸ், பியூட்டி & பெர்சனல் கேர் ஆகிய பிரிவுகளில் இந்தப் பதிப்பு வலுவான வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெவிஸ், நைக், அடிடாஸ், எச்&எம், மேங்கோ, லோரியல், லக்மே, லிபாஸ், டெகாத்லான், நியூ பேலன்ஸ், கெஸ், ஆசிக்ஸ், வ்ரோக்ன், யுஎஸ் போலோ அசோசியேஷன், பூமா, ரேர் ராபிட் உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகள் அதிக வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பதிப்பு மேக்கப், ஸ்கின்கேர், ஹேர்கேர் மற்றும் பெர்சனல் கேர் ஆகியவற்றில் 2.25 இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டைல்களுடன் பியூட்டி & பெர்சனல் கேர் பிரிவின் சிறந்த புராடக்டுகளையும் வழங்கவுள்ளது. இது டி2சி (D2C) விருப்பங்கள், சர்வதேச பிராண்டுகள், லக்ஸ் லேபிள்கள் மற்றும் கே-பியூட்டி புராடக்டுகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. வாடிக்கையாளர்கள் மேக், பாபி பிரவுன், லஷ், பியூட்டி ஆஃப் ஜோசியோன், லோரியல், தி ஆர்டினரி, ப்ளம் பாடி லவ்வின், மெடிக்யூப், ஃபாக்ஸ்டேல் மற்றும் பல பிராண்டுகளின் புராடக்டுகளை ஷாப்பிங் செய்யலாம். பரந்த அளவிலான தேர்வுகளுடன் இணைந்து, மிந்த்ரா பியூட்டியின் தொழில்நுட்பத்தால் இயங்கும் கருவிகள், பியூட்டி ஷாப்பிங்கை மிகவும் எளிமையாகவும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தின் ஏஐ-ஆல் இயங்கும் ஸ்கின் அனலைஸர், வாடிக்கையாளர்கள் தங்களின் குறிப்பிட்ட சருமத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புராடக்டுகளைக் கண்டறிய அனுமதிக்கிறது. அதே நேரத்தில் விர்ச்சுவல் ட்ரை-ஆன் அம்சம், வாடிக்கையாளர்கள் பல புராடக்டுகளை சோதித்துப் பார்க்க அனுமதிப்பதன் மூலம் தனிப்பயனாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இது இந்த சீசனில் உங்களுக்கான சரியான தோற்றத்தைக் கண்டறிவதை முன்னெப்போதையும் விட எளிதாக்குகிறது.

ஈஓஆர்எஸ்இன் 24-வது பதிப்பிற்கான அற்புதமான புதிய அறிமுகங்கள்

இந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் நிகழ்வு, அனைத்து முக்கியப் பிரிவுகளிலும் 30-க்கும் மேற்பட்ட புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் கேட் ஸ்பேட், பார்டோட், லாங்சாம்ப், ஓக்லி X மெட்டா ஏஐ பெர்ஃபார்மன்ஸ் சன்கிளாஸ்கள், ஆஸ்டன் மார்ட்டின் வாட்ச்கள், இஎல்எஃப் பியூட்டி, ஃபிராங்க்லி, சீபூரி, க்ளோயி, பியர் கார்டின் பேக்ஸ், எஸ்டிஆர்வி, வாஹ்ரோ, ஸ்பார்க்ல்பாப், ஜூசி கூச்சர், சாக்கோனி, அண்டா, கல்லி லேப்ஸ், மைல் கலெக்டிவ், அஃபிஷியல் ஃபிஃபா ஜெர்சிகள் போன்ற பல புதிய பிராண்டுகளின் அறிமுகங்கள் அடங்கும்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டி2சி (D2C) பிராண்டுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிந்த்ராவின் ரைசிங் ஸ்டார்ஸ் திட்டம், வூம்ன், ராஜம், செயின்ட் பீச், ஹவுஸ் ஆஃப் ஃபிட்னஸ், மயூரி, இண்டோ அவ்ரா, ஃபெமவ்ரா கிராஃப்ட்ஸ், ஹவுஸ் ஆஃப் டோராஸ்  உள்ளிட்ட பல புதிய பிராண்டுகளின் அறிமுகங்களைக் கொண்டு வருகிறது.

இதற்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில், மிந்த்ராவின் ஜென்-இசட் தலைமுறைக்கான பிரத்யேகப் பிரிவான எஃப்டபுள்யுடி, எஸ்இசட்என், ஃப்ரீக்கின்ஸ், பான்கர்ஸ் கார்னர், கிளிட்சஸ், அனூக் ரஸ்டிக், லுலு & ஸ்கை, கேபாப், அவுட்சைடர் போன்ற பல பிராண்டுகளிலிருந்து 700கே-க்கும் மேற்பட்ட ட்ரெண்டியான ஸ்டைல்களைக் காட்சிப்படுத்தவுள்ளது.

ஈர்க்கக்கூடிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

மிந்த்ராவின் லாயல்டி திட்ட உறுப்பினர்களான மிந்த்ரா இன்சைடர்ஸ் வெறும் 9 ரூபாயில் ஈஓஆர்எஸ்-ஐ முன்கூட்டியே அணுகும் வசதியைப் பெறலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் வெறும் 19 ரூபாய்க்கு விஐபி அணுகலை வாங்கிக் கொள்ளலாம். இந்த விஐபி அணுகலில், முன்கூட்டியே பணம் செலுத்தப்படும் ஆர்டர்களுக்குக் கூடுதல் 5% தள்ளுபடி, முன்கூட்டிய அணுகல் காலத்தின்போது பிரபலமான பிராண்டுகளின் மீது கூடுதல் 10% தள்ளுபடி, கிளியர்டிரிப் கூப்பன்கள், விஐபிக்கான பிரத்யேக வார இறுதிச் சலுகைகளும் பல நன்மைகளும் அடங்கும்.

வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் சுலபமான ஈஎம்ஐ மூலம் 10% உடனடிச் சேமிப்பையும், ஃபிலிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி, மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் 10% கூடுதல் சேமிப்பையும் பெறலாம். மேலும் இந்த ஈஓஆர்எஸ் விற்பனையில் ட்ரெஷர் ஹன்ட், பிராண்ட் ஆஃப் தி டே, கிராப் ஆர் கான், மிட்நைட் ஸ்டீல், ஈஓஆர்எஸ் ஸ்பெஷல்ஸ் மற்றும் விஐபிக்கான பிரத்யேகச் சலுகைகள் போன்ற வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சுவாரசியமான சிறப்பு அம்சங்களும் இடம்பெறவுள்ளன.

எம்-நவ்: ஈஓஆர்எஸ்-க்கான அதிவேக ஃபேஷன் டெலிவரி

தற்போது 11 நகரங்களில் செயல்பட்டு வரும் மிந்த்ராவின் அதிவேக டெலிவரி சேவையான எம்-நவ் (M-Now), தங்களது ஈஓஆர்எஸ் ஆர்டர்கள் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து ஒரு மிகச்சிறந்த வசதியாக இருக்கும். 90-க்கும் மேற்பட்ட டார்க் ஸ்டோர்கள் மூலம் இயக்கப்படும் இந்தச் சேவை, ஃபேஷன், பியூட்டி, அக்சஸெரீஸ் மற்றும் ஹோம் பிரிவுகளில் 1 இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டைல்களைக் கொண்டுள்ளது. பெங்களூரு, மும்பை, டெல்லி என்சிஆர், சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், புனே, பாட்னா, ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், ஆர்டர் செய்த வெறும் 30 நிமிடங்களில் தங்களது பார்சல்களை எம்-நவ் மூலம் எதிர்பார்க்கலாம். திருமணங்கள், சமூகக் கூடல்கள், கடைசி நேரப் பயணத் திட்டங்கள் என வாடிக்கையாளர்கள் பிஸியாக இருக்கும் இக்காலத்தில், எம்-நவ் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆப்ஷன்களுடன் வந்து உதவுவதால், கடைசி நிமிடத்தில் கூட தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அவர்கள் தவறவிட மாட்டார்கள்.

ஈஓஆர்எஸ்-இன் 24-வது பதிப்பைப் பற்றி மிந்த்ராவின் வருவாய் மற்றும் பிரிவுத் தலைவர், எஸ்விபி, ரிதேஷ் மிஷ்ரா அவர்கள் இவ்வாறு கூறினார், “பல ஆண்டுகளாக, ஈஓஆர்எஸ் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றாகவும், நாட்டின் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் வாழ்வாதார நெட்வொர்க்குக்கு வருவாயை அதிகரிப்பதோடு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் ஒரு முக்கிய வளர்ச்சித் தளமாகவும் உருவெடுத்துள்ளது. வளர்ந்து வரும் பிராண்டுகள், கிரியேட்டர் சமூகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் இந்த அளப்பரிய பங்கேற்பு, இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகத் துறையின் வளர்ந்து வரும் வலிமையைப் பிரதிபலிக்கிறது. எங்களது தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிரியேட்டர் நெட்வொர்க் மூலமாக, அனைத்து அளவிலான பிராண்டுகளும் நாட்டின் ஒட்டுமொத்த தேவையைச் சென்றடைய ஆதரவளிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதிலும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.”

ஈஓஆர்எஸ்க்கான தேடலை வலுப்படுத்தும் சோஷியல் காமர்ஸ்

வாடிக்கையாளர்களின் தேடல் அனுபவத்தையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்காக, மிந்த்ரா தனது விரிவான சோஷியல் காமர்ஸ் நெட்வொர்க்கைத் தொடர்ந்து பயன்படுத்தவுள்ளது. மிந்த்ராவின் அல்டிமேட் கிளாம் கிளான்-இல் 6 மில்லியனுக்கும் அதிகமான ஷாப்பர் கிரியேட்டர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த நெட்வொர்க்கிற்குள் 12 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் கிரியேட்டர்கள் இந்த சீசனுக்கு ஏற்ற பிரத்யேக தீம் லுக்ஸ்  மற்றும் ஸ்டைலிங் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். இத்தகைய வடிவங்கள் ஜென்-இசட் மற்றும் மில்லினியல்கள் மத்தியில் தொடர்ந்து பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பொழுதுபோக்கு சார்ந்த ஷாப்பிங் அனுபவங்களை வழங்குவதில் மிந்த்ராவின் முன்னிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

ADVERTISMENT : 

கோயம்பத்தூர்

இந்தியாவின் முதல் மனித சக்தி நீர்மூழ்கிக் கப்பல்: குமரகுரு மாணவர்கள் சாதனை

Published

on

கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பாக இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் அக்ரானி (INS Agrani) செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் (6th Element Engineering) நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்தப் படகை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர் குழுக்களை அன்புடன் வரவேற்ற இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அக்ரானி (INS Agrani) கப்பலின் செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழுக்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டம் முதல் இத்தகைய புதுமை முயற்சிகளுடன் தனக்குள்ள தொடர்பை நினைவுகூர்ந்த அவர், இந்த கோடையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.டீம் சீ சக்தி (Team Sea Sakthi) மற்றும் டீம் இன்கிராஃப்ட் (Team InCraft) ஆகிய குழுக்கள் எங்குச் சென்றாலும் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள் அதுவே உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும், என்றும் மாணவர்கள் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளாக இருந்தாலும் சர்வதேச அரங்கில் அவர்கள் இந்தியாவின் தூதர்களாகவே அறியப்படுவார்கள் என்றும் கூறியதுடன், தேசபக்தி மற்றும் முதலில் தேசம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.மேலும் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய தலைமுறையை வரையறுக்கின்றன எனவும் இந்தியாவின் சுயசார்பு இலக்கை நோக்கி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி (KCLAS) மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது.மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து வரலாறு படைத்துள்ள டீம் இன்கிராஃப்ட், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் (European International Submarine Races – eISR) பங்கேற்க உள்ளது.உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில் , மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூபா (SCUBA) சுவாசக் கருவிகளை அணிந்தபடி, ஒரு மாணவர் பைலட் தனது கால் வலிமையால் பெடலிங் செய்து இந்த கப்பலை இயக்க வேண்டும். ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கியுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், பறவைகளின் எலும்புக்கூடு அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட் பேர்ட் (Swift Bird) கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீருக்கு அடியில் அனைத்து திசைகளிலும் எளிதாகத் திரும்ப உதவுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிப்புற உடல் பகுதி சிப்பித் தூள் (Oyster shell powder) பூச்சைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Continue Reading

செய்திகள்

திருநெல்வேலி ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

Published

on

திருநெல்வேலி மாவட்டம், ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 நிகழ்ச்சி “Inspired by Nature. For Climate. For Our Future.” என்ற தலைப்பில் தமிழன் சிறகுகள் – இந்திய அரசு (MY Bharath கேந்த்ரா) சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அலுவலர் திரு. எல். ஞானச்சந்திரன், அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஆர். மதிவாணன் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் திரு. பி. வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக உடன் தமிழன் சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டதுடன், 210 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Continue Reading

கோயம்பத்தூர்

தலைவா தரணி ஆள வா

Published

on

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலக உள்ளதாகவும், அவரது பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கோவையிலும் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சார்பில் “தலைவா தரணி ஆள வா” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலையின் புகைப்படங்களுடன் “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற வாசகத்துடன் புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை மாநகரின் உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் காணப்படுவதால் அரசியல் மற்றும் ரசிகர் மன்ற வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Trending