தமிழக அரசியல் களத்தில் தேர்தல் என்ற புயல் உருவாகி இன்னும் அடங்காமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நடந்த தேர்தல், மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆட்சி மாறி வந்த இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக).
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 108 தொகுதிகளை கைப்பற்றுவது என்பது சாதாரண vவிஷயம் அல்ல. இது தமிழக அரசியல் நிலைப்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. இளைஞர்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள், என தவெக-க்கு வாக்குகள் பெருமளவில் கிடைத்துள்ளது.
ஆனால், 108 தொகுதிகளை வென்றிருந்தாலும், தவெகக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை என்பது முக்கியமான விஷயமாகும். ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை அடைய முடியாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கூட்டணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியே வந்து தவெக ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் 113 எணிக்கையை வைத்து ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் நிக்கிறது தவெக. மேலும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்ட வருகின்றனர் இருந்தபோதிலும் இன்னும் அதற்கான விடை கிடைக்கப்பெறாமல் இருக்கிறது .
கான்வாய் வாபஸ் :
இன்று முதல்வராக பதவி ஏற்பார் என சொல்லப்பட்டநிலையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் பதவி ஏற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று பட்டினம்பாக்கம் இல்லத்தில் இருந்து விஜய் தனது கட்சி நீலாங்கரைக்கு புறப்பட விஜய்யுடன் பாதுகாப்பு வந்த கான்வாய் வாகனங்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி சென்றுவிட்டன. அங்கு பாதுகாப்பு பணிக்காக இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
நீலாங்கரையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நீக்கப்பட்டிருந்தன. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருப்பதால் உயர்மட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
அரசியல் விமசகர்கள் கருத்து :
விஜய் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லையென்பது அனைவரும் அறிந்ததே இதனை பூர்த்தி செய்யும் விதத்தில் காய் நகர்த்திருக்க வேண்டும் . 4 கட்சிகளிடம் ஆதரவு கேட்பதற்கு பதிலாக அதிக தொகுதிகளை வைத்திருக்கும் அதிமுகவிடம் கேட்டிருந்தால் இந்த இழுபறி நடந்திருக்காது என அரசியல் விமசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே அதிமுக திமுக கூட்டணி அமைக்க போகிறது என யாரோ தட்டி விட்ட செய்தி தீயாய் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. இன்னும் என்ன கதைகள் வரபோகிறது, என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
– நிருபர்