Connect with us

நிகழ்ச்சிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

Published

on

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் கோவை மாநகர் சித்தாபுதூர் பகுதியில் இயங்கும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது.

இந்த புது பிரிவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் மற்றும் பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு , மற்றும் பாலி-ட்ராமா எனும் ஒரே நபருக்கு உடலின் பல இடங்களில் ஏற்பட்ட ஆபத்தான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு என்.ஏ.பி.ஹெட்ச். (மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் சர்வதேச தரத்துடன் ஒப்பிடக்கூடிய உயர்-துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும்.

இந்த 24 மணிநேர சேவை என்பது 10க்கும் மேற்பட்ட அவசர மருத்துவர்கள் மற்றும் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சையில் பயிற்சி பெற்ற 40 அவசர செவிலியர்கள் உட்பட, ஒருங்கிணைந்த, பல்துறை அவசர சிகிச்சைக் குழுவால் இயக்கப்படுகிறது.

இத்துடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மேம்பட்ட லைஃப் சயின்ஸ் ஆம்புலன்ஸ் நெட்வொர்க் மூலம், மருத்துவமனைக்கு நோயாளி அழைத்துவரப்படும் போதே அவரின் பாதிப்பு நிலையின் தீவிரத்தன்மையை சீராக்க பிரத்தியேக மருத்துவ வசதிகள் மற்றும் கண்காணிப்பு அம்சங்கள் இடன்பெற்றுள்ளன.

இந்த புதுமையான அமைப்பு, அவசர சிகிச்சைப் பிரிவில் அமைந்துள்ள இம்மருத்துவமனையின் அதிநவீன ஸ்மார்ட் கண்காணிப்பு மையம் மூலம், நோயாளிகளை நிகழ்நேர கண்காணிப்பில் வைத்திருக்கும்.
இந்த ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உள்ளே, நோயாளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கான மூன்று அடுக்கு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நவீன மறுஉயிரூட்டல் அறைகளில் சி.டி., எம்.ஆர்.ஐ., மற்றும் டிஜிட்டல் இமேஜிங்கிற்கான வசதிகள் ஆகியவை உள்ளன. இது வேகமாக பாதிப்பை கண்டறியவும், சிகிச்சையில் தாமதங்களைத் தவிர்க்க உதவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Published

on

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா 17.06.2026 (புதன்கிழமை) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந் தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவருமான முனைவர் ஈ.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

40 ஆண்டுகால கல்வி சேவை என்பது ஒரு எளிமையான காரியம் அல்ல. தரமான கல்விச்சூழல், அர்ப்பணிப்போடு இயங்கக்கூடிய பேராசிரியர்கள் போன்ற காரணிகள் தான் மிக முக்கியக் காரணம். இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி 100 இடங்களுக்குள் இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிக மிக முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்துகொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தரமான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகில் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார். விழாவில் 2, 250 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

ஃபேஷன் கலெக்டிவ் நடத்திய குயின் & பிரின்சஸ் கோவை 2026! பிரம்மாண்ட அழகுப் போட்டி

Published

on

கோவை: புளோரா வெடிங்ஸ் & ஈவென்ட்ஸின் ஒரு அங்கமான ‘ஃபேஷன் கலெக்டிவ் கோவை’, கோவையில் உள்ள மெர்லிஸ் அரங்கில் “குயின் கோவை & பிரின்சஸ் கோவை 2026” அழகுப் போட்டியை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதன் நிறுவனரும் இயக்குநருமான ரேஷ்மா ஸ்ரீஜய் தலைமையில், பெண்களின் தனித்துவம் மற்றும் பெண்மை போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போட்டியில் திருமதி அஷ்வினி சுந்தரராஜு ‘குயின் கோவை 2026’ பட்டத்தையும், ஸ்மிதா ராஜசேகரன் ‘பிரின்சஸ் கோவை 2026’ பட்டத்தையும் வென்றனர். பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டி சிறப்பித்தார்.

அறிமுகச் சுற்று, பாரம்பரிய உடைச் சுற்று மற்றும் கேள்வி-பதில் சுற்றுகளில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். டிஎன்சிடி டெவலப்பர்ஸ் (TNCD Developers) முதன்மை ஸ்பான்சராகவும், சுமங்கலி ஜூவல்லர்ஸ் மற்றும் ஷ்லோகா இணை ஸ்பான்சர்களாகவும் செயல்பட்டனர்.நடுவர் குழுவில் டாக்டர் ராஜ்ஸ்ரீ பதி, டாக்டர் தாமோதர் ராவ், நடனக் கலைஞர் லாவண்யா சங்கர், சரண்யா ரெங்கராஜ், டாக்டர் அபிராமி மற்றும் பிரசன்னா ஸ்ரீவத்சன் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிகழ்ச்சியைப் பெரும் வெற்றியாக்கிய அனைவருக்கும் ரேஷ்மா ஸ்ரீஜய் நன்றி தெரிவித்தார்.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல் அறிமுகம்

Published

on

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு. கண்ணன், IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுமையான “புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல்” QR குறியீட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் , இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை எளிதில் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

அதனை கருத்தில் கொண்டு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய விழிப்புணர்வு முயற்சியாக இந்த “ஸ்பின் வீல்” வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த முயற்சியின் மூலம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட தீவிர நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்றார்.

Continue Reading

Trending