பிரபல மேடை பேச்சாளரும் தி.மு.க ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்து த.வெ.கவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே என நாஞ்சில் சம்பத் Xக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
மதிமுகவில் வைகோவுக்கு இணையாக பேச்சாற்றல் பெற்றவர் என பெயர் எடுத்தவர் நாஞ்சில் சம்பத் . ஆனால் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதிமுகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கியதுடன், தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்ய ஒரு இன்னோவா காரும் வழங்கப்பட்டது .
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டடு வந்தார். தினகரனின் கட்சி பெயரில் (அமமுக) திராவிடம், அண்ணா ஆகிய பெயர்கள் இல்லை அவை இல்லாத இடத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை என கூறி அங்கிருந்தும் வெளியேறினார். பின்னர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து திமுகவுக்கு ஆதரவாக பிச்சரம் செய்து வந்தார். தற்போது நிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.