கோயம்பத்தூர்

கோவை அலெர்ட் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கிய அடிசியா !

Published

on

கோவையில் பாதுகாப்பான நிலம் வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, பிரபல அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் “அலெர்ட் கோவை” எனும் புதிய பிரச்சாரத்தை துவங்கியுள்ளது . வீடு என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது அந்த கனவை நினைவாக்க சிறுது, சிறிதாக பணத்தை சேர்த்து வைத்து அல்லது வங்கிமூலம் கடன் பெற்று வீடு அல்லது நிலமோ வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கு பொது அது அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா, அரசு வழிகாட்டுதல் முறைகளுடன் நிலங்கள் உள்ளதா, ரேரா பதிவு செய்யப்பட்டுள்ளதா, என்பதை சரிபார்ப்பது கட்டாயமாகி உள்ளது.

இதனை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துக் கொள்ள ஏதுவாக,அதாவது காலி மனை மற்றும் வீடுகள் வாங்குவது தொடர்பாக இலவச முறையான தகவல்களை அடிசியா டெவலப்பர்ஸ் அனைவருக்கும் வழங்கவுள்ளது . இதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது .

இந்த வழிகாட்டுதல் சேவை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் அடிசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கலந்துகொண்டு இது தொடர்பான தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர்,ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து பொது மக்கள் பயன் பெறும் விதமாக பல புதிய திட்டங்களை அறிமுக படுத்தி வருவதாக கூறினார், அந்த வரிசையில் “அலெர்ட் கோவை “எனும் பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.காலி மனை அல்லது வீடு வாங்குபவர்கள் அரசு வழிகாட்டுதல் முறைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அலெர்ட் கோவை வழியாக ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு இலவசமாக தகவல்களை வழங்க உள்ளதாகவும் இந்த முயற்சி கோவையில் முதன் முறையாக துவங்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர்,விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் .

பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, நிலம் மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்குவதில் ரேரா வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்

இன்னும் சில தினங்களில் இதற்கென தனியாக இரண்டு மையங்கள் அமைத்து காலி மனை மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எந்தவொரு சொத்திலும் முதலீடு செய்வதற்கு முன் வீடு வாங்குபவர்கள் ரேரா பதிவைச் சரிபார்க்க வலியுறுத்துவதும், தவறான கூற்றுக்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும், கோவையில் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதே அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாடு துணை தலைவர் கிங்ஸ்டன்,இயக்குனர் செந்தில் குமார்,சி.ஆர்.ஓ.சிவக்குமார்,விற்பனை பிரிவு துணை தலைவர் ஸ்ரீனிவாசன்,ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக அலெர்ட் கோவை என்ற பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், கோவை மேயர் ரங்கநாயகி ஆகியோர் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Trending

Exit mobile version