Connect with us

உள்ளூர் செய்திகள்

கோயம்புத்தூர் – பள்ளி தடகள போட்டி – “ATHLETE HUNT 2K25”

Published

on

கோயம்புத்தூர் – பள்ளி தடகள போட்டி – “ATHLETE HUNT 2K25”

தடகள போட்டி – “ATHLETE HUNT 2K25”

கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்க அங்கீகாரத்துடன், SPORTS LAND Coimbatore நிறுவனம் நடத்தும் “3rd Junior Inter School Athletic Championship – 2K25” (Athlete Hunt) நிகழ்ச்சி வரும் நவம்பர் 8, 2025 (சனிக்கிழமை) அன்று கோயம்புத்தூர் நெஹ்ரு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை நல்லாரம்மு அறக்கட்டளை சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ்.சுரேஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக

ரோட்டரி. எஸ். மணிகண்டன், தலைவர் – Coimbatore District Transport Advisors Welfare Association மற்றும்

ரோட்டரி. பி.எச்.எப். ஏ. சமிவேல், தலைவர் – Rotary Club of Somanur Texcity ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியரை உற்சாகப்படுத்த உள்ளனர்.

பல்வேறு பள்ளிகளில் இருந்து திறமையான இளம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்நிகழ்ச்சி, மாணவர்களின் உடல் திறன் மற்றும் விளையாட்டு ஆவலை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைய உள்ளது.

நிகழ்ச்சி தொடர்பான தகவல்களுக்கு:

📞 80726 21683 / 88077 69223

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

அன்னூரில் நடைபெற உள்ள மாபெரும் விவசாய & கோழிப்பண்ணை கண்காட்சி – Agri & Poultry Expo 2026.

Published

on

கோவை மாவட்டம் அன்னூரில், விவசாயிகளின் உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கில் Agri & Poultry Expo–2026 எனும் மாபெரும் விவசாய மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி Pride Events நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சி, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை தொழில்களில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கண்காட்சியில், நவீன டிராக்டர்கள், விவசாய இயந்திரங்கள், விதை மற்றும் உர வகைகள், பாசன உபகரணங்கள், ட்ரோன் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் தொழில்நுட்பங்கள், சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணை வளர்ப்புக்கான நவீன உபகரணங்கள், தீவன மேலாண்மை முறைகள், நோய் தடுப்பு ஆலோசனைகள், உற்பத்தி திறன் மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து நிபுணர்களால் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. விவசாயிகள் நேரடியாக நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்ய விரும்பும் தொழில்முனைவோர்கள், இளம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த கண்காட்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சிக்கான மீடியா பார்ட்னராக தினஇதிகை செயல்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9384265548, 9384177789 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் ‘ஊ லா லா கார்னிவல்’விழா கோலாகல தொடக்கம்

Published

on

 

கோவை ஜனவரி 21:-

கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான ‘ஊ லா லா கார்னிவல்’ விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘ஹேப்பி ஃபீட்’ என்ற புதிய கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

120 செ.மீ.க்கு குறைவான உயரம் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக விளையாடும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். குழந்தைகளுக்கான விளையாட்டுகள், DIY பணிமனைகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பங்களுக்கு மகிழ்ச்சியும், குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தையும் வழங்கும் இந்த கார்னிவல் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிக்கெட் பெற ஸ்கேன் செய்யவும்

(Ticketprix above QR குறியீடு)

தொடர்புக்கு:

📞 99622 04901

📞 97875 54555

நிகழ்ச்சி அட்டவணை:-

6 பிப்ரவரி (வெள்ளிக்கிழமை):

மாலை 2.00 – நுழைவாயில் திறப்பு
மாலை 4.00 – 5.30 – போட்டிகள்
மாலை 5.00 – 6.30 – DIY பணிமனை
மாலை 7.00 – 8.30 – இசைக்குழு நிகழ்ச்சி
மாலை 8.30 – 9.00 – கார்னிவல் பேரணி
மாலை 9.00 – 9.30 – பலூன் காட்சி
மாலை 9.30 – 10.00 – DJ

7 பிப்ரவரி (சனிக்கிழமை):

மாலை 2.00 – நுழைவாயில் திறப்பு
மாலை 4.00 – 5.30 – போட்டிகள்
மாலை 5.00 – 6.30 – DIY பணிமனை
மாலை 7.00 – 8.30 – பறை இசை நிகழ்ச்சி
மாலை 8.30 – 9.00 – கார்னிவல் பேரணி
மாலை 9.00 – 9.30 – மாயாஜால காட்சி
மாலை 9.30 – 10.00 – DJ

8 பிப்ரவரி (ஞாயிற்றுக்கிழமை):

மாலை 2.00 – நுழைவாயில் திறப்பு
மாலை 4.00 – 5.30 – போட்டிகள்
மாலை 5.00 – 6.30 – DIY பணிமனை
மாலை 7.00 – 8.30 – இசைக்குழு நிகழ்ச்சி
மாலை 8.30 – 9.00 – கார்னிவல் பேரணி
மாலை 9.00 – 9.30 – ஜக்கிளிங் காட்சி
மாலை 9.30 – 10.00 – DJ

Continue Reading

Business

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற மில்லியனேர் சம்மிட் 2026

Published

on

சென்னையில் மில்லியனேர் சம்மிட் 2026 சிறப்பாக நடைபெற்றது. தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு நிதி அறிவு, தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் போர்டு உறுப்பினர்களாக ஹாலிடே சீசென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவி குமார் எஸ், Aesthetic டிசைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO . ஏ. எஸ். ராஜசேகர், Rainbow Forms நிறுவனத்தின் CMO அகிலன் மோகன்தாஸ், Venkatram Catering Services நிறுவனத்தின் CEO . ஆர். வெங்கடராமன், S.V. Plymart நிறுவனத்தின் நிறுவனர் சண்முகம் ராஜா, LoansFunding.in நிறுவனத்தின் இயக்குநர் நிர்மல் ஜே, Niile Technical Skill & Consulting Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சிவசங்கர் வி. பி, Tritech Infosystems Pvt. Ltd. நிறுவனத்தின் Business Head நாச்சியப்பன் என். சி. டி, Unichem Industries Pvt. Ltd. நிறுவனத்தின் Managing Director காஜா மொஹிதீன், Samy Jose Boxing Academy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ரிச்சர்ட் கே. யூசுப் மற்றும் Executives Collaboration Pvt. Ltd. நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சி. எச். வில்சன் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஏற்பாட்டு குழுவில், Touchmark Descience நிறுவனத்தின் CEO பாரதிராஜா தங்கப்பளம், SARGUN Financial Services Pvt. Ltd. நிறுவனத்தின் CEO சர்குனன் தனிகைமாலி, மற்றும் Stemfunnels Marketing Agency நிறுவனத்தின் CEO திரு. ஹாட்லி ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்ட சுமார் 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு, இந்த மாநாடு அறிவுப் பகிர்வு, தொழில் வளர்ச்சி மற்றும் ஊக்கத்தை அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Continue Reading

Trending