சென்னை

சர்வதேச ஆண்கள் தின விழா – WPC அமைப்பின் சிறப்பான ஏற்பாடு

Published

on

சென்னையில் வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச ஆண்கள் தின விழா – WPC அமைப்பின் சிறப்பான ஏற்பாடு

சென்னை, நவம்பர் 19, 2025: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு WPC – Women Professional Connect (பெண்கள் தொழில்முறை இணைப்பு) அமைப்பு, இந்த ஆண்டு சென்னையில் சிறப்பான விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அமைப்பின் நிறுவனர் திருமதி ரேணுகா அவர்களின் வழிநடத்தலில், பெண்கள் தொழில்முறை இணைப்பான WPC, கடந்த ஆண்டுகளில் போலவே இந்த முறைவும் ஆண்கள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடப் போகிறது. ஆண்களைப் பாராட்டும் நிகழ்வை பெண்கள் அமைப்பு நடத்துவது என்பது சமூகத்தில் சமத்துவம், மதிப்பு, இணைபிரியாமை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு விழாவில், நடுவர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆண் தொழில் முனைவோர் பங்கேற்கவுள்ளனர். மதிப்பிற்குரிய செல்வி அரசி அருள் (தொடர் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்), டாக்டர். சிவரஞ்சனி காமாட்சி நினைவு மருத்துவமனை இயக்குநர் டாக்டர். கோமதி, மேலும் FEMI நிறுவனத்தின் நிறுவனர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

 

விழாவின் முக்கிய அம்சமாக “லாப நோக்கம் V/S எதிர்குறிக்கோள்” (Profitability vs Purpose) என்ற தலைப்பில் சிந்தனையூட்டும் உரையாடல்கள் நடைபெறவுள்ளன. நடுவர் குழுவினர் பல ஆண் தொழில் முனைவோரின் சாதனைகள் மற்றும் சமூக பங்களிப்புகளைப் பற்றி தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், அனைத்து WPC உறுப்பினர்களும் இந்த விழாவை சிறப்பாக்க முக்கிய பங்காற்றவுள்ளனர்.

நிகழ்வு சென்னை நகரின் முன்னணி அரங்கில் நடைபெற உள்ளது. உற்சாகம், ஆற்றல் மற்றும் நேர்மறை எண்ணங்களால் நிரம்பிய இந்த நாள், WPC அமைப்பின் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் ஆகும்.

அமைப்பின் நோக்கம், ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து சமூகத்திற்காக செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. இதுபோன்ற பல அர்த்தமுள்ள நிகழ்வுகளை எதிர்காலத்திலும் நடத்த WPC உறுதி எடுத்துள்ளது.

Click to comment

Trending

Exit mobile version