அரசியல்

கோவையில் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு : ரூ.100 கோடி மதிப்பீட்டில் புது திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Published

on

கோவையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 30,000+ பங்கேற்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத்துறைகள் பங்கேற்கின்றன.

மேலும் 150க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75க்கும் மேற்பட்ட தொழில் வளர்மையங்கள், 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு 315 நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், இந்த மாநாடு கோவையில் நடப்பது மிக பொருத்தமானது. இந்த மாநாடு மாநிலத்தின் வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது என கூறினார்.

புதிய சிந்தனைகள், முயற்சிகள் தொழில்துறைக்குள் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளை, ஊக்குவிப்பை தமிழக அரசு செய்துவருகிறது. தொழில்துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் இலக்கு என்பது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தெழில் சார்ந்த விழிப்புணர்வு பரவவேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் புது யுக தொழில்முனைவு சார்ந்த திட்டங்கள் சென்றடைய வேண்டும். இந்த இலக்குக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை தலைசிறந்த புத்தொழில் மையமாக கட்டமைப்பது தான் திராவிட மாடல் அரசின் கனவு. அந்த பயணத்தின் முக்கிய மையமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ துவக்கப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டு புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். இந்த நிதியம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தால் நிர்வகிக்கப்படும். இதனால் மாநிலத்தில் புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். மேலும் உலகில் முன்னணி இடத்தில் இருக்கும் முதலீட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி ஈர்க்க வழிவகுக்கும் என அவர் கூறினார்.

 

ஸ்டார்ட்-அப் வளர்ச்சி குறித்த விவாதங்கள், பெரும்பாலும் பில்லியன் டாலர் மதிப்பீடுகள், பெரிய அளவிலான முதலீடுகள் என்பதை மையமாகக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள், எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். குறிப்பாக, பின்தங்கிய நிலையில், விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.

புத்தொழில் கொள்கையிலும் சமூகநீதி! அதுதான், திராவிட மாடல் பாலிசி! இப்படி, நாம் எடுத்துக்கொண்டு வருகின்ற தொடர் முயற்சிகளால், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலில், குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம்.

 

கடந்த 4 ஆண்டுகளில், அதற்கு முன்னால் இருந்ததை விட, ஆறு மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நம்பரில் சொல்ல வேண்டும் என்றால், 2 ஆயிரத்து 32-ஆக இருந்த எண்ணிக்கை, இப்போது 12 ஆயிரத்தையும் தாண்டி உயர்ந்திருக்கிறது. இதில், எனக்கு பர்சனலா மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா? இந்த 12 ஆயிரத்தில் சரிபாதி நிறுவனங்கள் பெண்கள் தலைமையேற்று நடத்துகின்ற நிறுவனங்கள் என்பதுதான்!

 

சிறந்த புத்தொழில் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில், 2018-ஆம் ஆண்டு கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, நான்கே ஆண்டுகளில், 2022-ஆம் ஆண்டு முதல் இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.

 

“ஸ்டார்ட்-அப் ஜீனோம்” அமைப்பு வெளியிட்ட, “உலகளாவிய புத்தொழில் சூழமைவு அறிக்கை 2024’’-ன்படி, ஆசிய அளவிலேயே 18-ஆவது இடத்தில் சென்னை இருக்கிறது.

 

நிதி ஆயோக்கின்கீழ் செயல்படும் ‘அட்டல் இன்னோவேஷன் மிஷன்’ அமைப்பானது புத்தாக்க சூழமைவு சிறப்பாக இருக்க மாநிலங்களில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறது.

 

அவுட்லுக் பிசினஸ்” இதழ் வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவில் சிறப்பாக செயல்படுகின்ற மாநிலங்கள் வரிசையில் நாட்டிலேயே முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்திருக்கிறது.

 

சமீப காலமாக, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் முதலீடு திரட்டும் திறனும் உயர்ந்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு 1 மில்லியன் டாலராக இருந்தது. 2024-ஆம் ஆண்டு, 6 மில்லியன் டாலராக அது உயர்ந்திருக்கிறது என்று ‘இன்க் 42’ அறிக்கை தெரிவிக்கிறது. இது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

 

ஸ்டாலின் உரையில் அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:

 

தொழில்துறை வளர்ச்சி:

 

  • கடந்த 4.5 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

 

  • உயர் தொழில்நுட்ப தொழில்கள், வேலைவாய்ப்பு தரும் தொழில்கள் முன்னேற்றம் பெற்றுள்ளன.

 

  • 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக்க திட்டம் நடைமுறையில் உள்ளது.

 

 

புத்தொழில் வளர்ச்சி (Start-up Growth)

 

  • 2018ல் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022 முதல் இடம் பெற்றுள்ளது (Startup Rankings).

 

  • Start-up Genome 2024 அறிக்கையில், சென்னை – ஆசிய அளவில் 18-வது இடம்.

 

  • D.P.I.I.T தளத்தில் பதிவு செய்யப்பட்ட start-ups – 4 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகம்:

 

  • 2,032 → 12,000+ இதில் சரிபாதி start-ups பெண்கள் தலைமையில் இயங்குகின்றன.

 

சமூகநீதி + Start-up

 

  • திராவிட மாடலில் புத்தொழிலிலும் சமூகநீதி முக்கியம்.

 

  • மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள், இளைஞர்கள், கிராமப்புற மக்கள் ஆகியோருக்கான தனி முயற்சிகள்.

 

  • TANSEED மூலம் தொடக்கநிலை start-ups-க்கு நிதி உதவி.

 

  • பெண்களுக்கு 50% கூடுதல் நிதி.

 

  • 2024-25 நிதியாண்டில் ₹20 கோடி ஒதுக்கீடு.

 

  • பட்டியலின / பழங்குடியின start-ups-க்கு பங்கு முதலீடு + பயிற்சி.

 

  • 2023-24ல் ₹50 கோடி ஒதுக்கீடு.

Click to comment

Trending

Exit mobile version