தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பாக, ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? மேலும் அந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்க கோரி பி.எச். தினேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.
அப்போது, “விஜயின் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்ததை நீங்கள் கண்டீர்களா?” என்று நீதிபதி முதல் கேள்வியாக மனுதாரர் தரப்பிடம் வினவினார்.