கோயம்பத்தூர்

சமூக சேவையில் சாதனை செய்யும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை!

Published

on

கோவை மேக்ஸ்வெல்  அறக்கட்டளை  கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிக பிரம்மாண்டமான அளவில் மக்களுக்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, பெண்களின் தொழில், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இவர்கள் ஆற்றிய சேவை எண்ணற்றவை.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில்  பள்ளி துவங்குவதற்கு முன் மேக்ஸ்வெல் முத்துக்கள் என்ற தலைப்பில்  தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய 500கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  ஒரு வருடத்திற்கு தேவையான ஸ்கூல் பேக், நோட்புக்ஸ், ஸ்டீல் வாட்டர் பாட்டில் உட்பட மொத்த கல்வி உபகரணங்களையும்  ஒரே அரங்கத்தில் வைத்து வழங்குவதில் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.. இவர்கள் மூலம் இதுவரை 4000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.. தாய் தந்தை இருவரையும் இழந்த  நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் கல்வி கனவை நினைவாக்கியுள்ளனர்.

ஆதரவற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கு என  மேக்ஸ்வெல்  பொன்மகள் என்ற பிரம்மாண்ட விழா மூலம் பெண்கள் தின விழாவை முன்னிட்டு  மார்ச் மாதத்தில் 5 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெண்களுக்கு தொழில் தொடங்கி வைப்பதையும் ஆண்டுதோறும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். 120கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் தொடங்கி தந்துள்ளனர்..

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளியை மலைவாழ் மக்களுடன் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல்  வருடத்தில் குறைந்த பட்சம் 20 கிராமங்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்..  பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அரசு பள்ளி சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.. குறிப்பாக சுத்தமான கழிவறை, நல்ல குடிநீர், மலைவாழ் பள்ளி பாதுகாப்பிற்காக சிசிடிவி, சுற்றுச்சூழல் சுத்தம், ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்  ஆகியவற்றை தரமாக தருவதற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்..

மேலும் அவ்வப்போது ரத்த தானம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு பிரச்சாரம், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வையற்ற குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை ஆண்டுதோறும் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றனர்..

மேக்ஸ்வெல் அணி நண்பர்களிடம் டிரஸ்டில் பணி புரிவது குறித்து கேட்டபோது திரு ஜெய்ஜாலன் அவர்கள்  மலைவாழ் மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு அரிய வகையில் உள்ள தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை காணும் பொழுது அந்த உணர்வை அளவிட இயலாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய மகேஸ்வரி தாய் அல்லது தந்தை இழந்த மாணவ மாணவியர்களின் கல்வி தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் எதிர்காலம் சிறப்பா அமையும்ன்னு நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என கூறினார்..

என்னைப் பொறுத்தவரை, ஒரு உதவி என்பது சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குச் செய்வது எங்கள் அறக்கட்டளையும் அதுபோலவே  செய்கிறது என செல்வி சரண்யா கூறினார்

ராத்திரி பகல் என்று பார்க்காமல்  வெயில் மழைன்னு யோசிக்காமல் இந்தியாவோட இன்னொரு பக்கம் இருக்கிற  ஹரியானா வரைக்கும் போகணுமான்னு யோசிக்காம எவ்வளவு கஷ்டப்பட்டு சேவை பண்ணாலும்   அந்த உதவியை வாங்குற மக்களோட முகத்தில் இருக்கிற சந்தோஷமும் புன்னகையும்  அவ்வளவு மனதிருப்தி ஒவ்வொரு முறையும் கொடுக்குது  என்றார் மேக்ஸ்வெல் அட்மின் ஜமீர் அகமது..

மேக்ஸ்வெல் பயனாளி மாற்றுத்திறனாளி  ஒருவரிடம் கேட்டபோது மேக்ஸ்வெல் நிறுவனர் முருகன் அண்ணே கிட்ட எப்ப உதவினு கேட்டாலும் தைரியமா இருங்க நான் பண்றேன்னு சொல்லி உதவி பண்ணுவார்.. என்ன மாதிரி  என் கூடவே இருக்கிற ஐம்பதுக்கு மேற்பட்ட மாற்றத்தினால் இதுவரைக்கும் உதவி செய்திருக்கிறார் அந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டோம் என்றார்.

அவ்வபோது நடைபெறும் பெரிய நலத்திட்ட உதவிகளில் கலந்துகொள்ளும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்களும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்..

இதுவரை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின்  நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள  விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறியப்படும் மீனா எனும் ஹேமா ராஜ்குமார் கூறுகையில்  சுனாமியில் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகள் இன்று வரை படிக்க வைத்து வருவதுடன் அதுபோல செயல்பாடுகளில் ஈடுபடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையுடன் எப்போதும் துணை நிற்பதாகவும் அவ்வப்போது குழந்தைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகளும் செய்து கொண்டிருக்கிறார்..  மேலும் Kpy பாலா மற்றும் புகழ் தொடர்ந்து அறக்கட்டளையோடு தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

திரைப்பட நடிகர் Mime கோபி அவர்கள்  வெள்ளை உள்ளம் படைத்த மேக்ஸ்வெல் அணி  நண்பர்களோடு  மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி என்றார்..

இதுபோல பல்வேறு திரைப்பட நடிகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையோடு பயணிப்பது பெரும் மகிழ்ச்சி..

இப்படி அணி நண்பர்கள் முதல் பயனாளிகள் வரை,   சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் திரைப்பட நடிகர்கள் வரை அனைவரும் கொண்டாடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை தனது மூன்று ஆண்டு நிறைவு செய்து நாலாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கோவையின் கூடுதல் பெருமையாக இணைந்துள்ளது..

Click to comment

Trending

Exit mobile version