செய்திகள்

ஜி.எஸ்.டி வரி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Published

on

நாட்டின் முக்கிய துறைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன- முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

“உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது; பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும்”-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

(இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டது)

ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைப்பு; டிராக்டர், விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு.

சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு; UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீது வரி கிடையாது சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட் மீது 5% வரி மட்டுமே வசூலிக்கப்படும்; விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

350Cc இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் மற்றும் தனியார் பயன்படுத்தும் விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி; அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18% வரி வசூலிக்கப்படும்

9 ஆட்டோ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ வாகனங்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீது தற்போது 18% வரி வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 12% வசூலிக்கப்படும் 4 பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி.

புகையிலை பொருட்கள் மீதான வரி எப்போது அமலுக்கு வரும் என்பதை முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

பிற பொருட்கள் மீதான புதிய ஜிஎஸ்டி வரிகள், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன

Click to comment

Trending

Exit mobile version