இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் இந்திய ராணுவதுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய ராணுவத்கை நினைத்து பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு தமிழகம் இராணுவத்தின் பக்கம் நிற்பதாக கூறியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.